உள்ளடக்கத்துக்குச் செல்

மாலைதீவுகளின் மக்கள் தொகையியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாலைதீவுகளின் மக்கள் தொகையியல் (Demographics of Maldives) என்பது மாலைதீவுகளின் மக்கள் தொகையையும், மக்கள் தொகை சார்ந்த அம்சங்களான மக்கள் தொகை அடர்த்தி, இனம், கல்வி நிலை, மக்களின் ஆரோக்கியம், பொருளாதார நிலை, மதச் சார்புகள் உள்ளிட்ட மக்கள் தொகையின் பிற அம்சங்கள் குறித்தான அலசலையும் குறிக்கின்றது.

மாலைதீவுகளின் மக்கள் தொகையியல், 2000 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஆம் ஆண்டு வரை

மக்கள் தொகையியல்

[தொகு]

உலகில் பிறப்பு வீதம் கூடிய நாடுகளில் மாலைதீவுகளும் ஒன்று ஆகும். 2014 ஆம் கணக்கெடுப்பின் படி பிறப்பு வீதம் 1000 நபர்களுக்கு 15.59 ஆக பதிவாகியுள்ளது.[1] இதனால் இந்நாட்டின் பல தீவுகள் சன நெரிசலை எதிர் நோக்கியுள்ளதுடன் அதிக பண்ணை வீடுகளையும் கொண்டுள்ளன. நாளுக்கு நாள் மாலைதீவுகளின் தன்னிறைவு தன்மை குறைந்து வருகின்றது.

முக்கிய புள்ளிவிபரங்கள்

[தொகு]

ஐ.நா மதிப்பீடு [2]

[தொகு]
காலப்பகுதி வருடாந்த பிறப்புக்கள் வருடாந்த இறப்புக்கள் வருடாந்த இயற்கை மாற்றம் பி.வீ1 இ.வீ1 இ.மா1 மொ.க.வீ1 கு.இ.வீ1
1950-1955 3 000 2 000 1 000 43.2 27.7 15.5 6.03 233.4
1955-1960 4 000 2 000 2 000 53.0 28.2 24.8 6.81 221.6
1960-1965 5 000 3 000 3 000 55.0 27.2 27.9 7.12 205.5
1965-1970 6 000 3 000 3 000 52.2 23.4 28.8 7.22 175.5
1970-1975 6 000 2 000 4 000 47.4 19.3 28.1 7.17 146.5
1975-1980 6 000 2 000 4 000 44.1 15.7 28.3 6.86 121.5
1980-1985 8 000 2 000 6 000 47.8 12.7 35.1 7.26 97.2
1985-1990 9 000 2 000 7 000 45.4 10.5 34.8 6.81 77.1
1990-1995 8 000 2 000 6 000 35.6 8.0 27.6 5.25 62.5
1995-2000 7 000 1 000 5 000 25.1 5.5 19.6 3.52 41.7
2000-2005 6 000 1 000 4 000 19.7 4.1 15.6 2.49 26.5
2005-2010 5 000 1 000 4 000 17.2 3.7 13.5 1.90 9.8
1 பி.வீ = பிறப்பு வீதம் (1000 நபர்களுக்கு); இ.வீ = இறப்பு வீதம் (1000 நபர்களுக்கு); இ.மா = இயற்கை மாற்றம் (1000 நபர்களுக்கு); மொ.க.வீ = மொத்த கருவள வீதம் (ஒரு பெண்ணிற்கு பிள்ளைகளின் எண்ணிக்கை); கு.இ.வீ = மொத்த குழந்தை இறப்பு வீதம் (1000 பிறப்புகளுக்கு)

பதியப்பட்ட பிறப்புகளும் இறப்புகளும்[3]

[தொகு]
சராசரி மக்கள் தொகை (x 1000) பிறப்புகள் இறப்புகள் இயற்கை மாற்றம் பிறப்பு வீதம் (1000 இற்கு) இறப்பு வீதம் (1000 இற்கு) இயற்கை மாற்றம் (1000 இற்கு)
1975 136 5 002 1 386 3 616 36.8 10.2 26.6
1976 140 5 232 1 565 3 667 37.4 11.2 26.2
1977 144 6 131 1 652 4 479 42.7 11.5 31.2
1978 148 5 667 1 971 3 696 38.4 13.4 25.0
1979 152 6 308 2 044 4 264 41.5 13.5 28.1
1980 157 6 822 1 787 5 035 43.6 11.4 32.1
1981 162 7 010 1 963 5 047 43.3 12.1 31.2
1982 168 7 402 2 129 5 273 44.1 12.7 31.4
1983 174 7 236 1 748 5 488 41.6 10.1 31.6
1984 180 8 255 1 640 6 615 45.8 9.1 36.7
1985 187 8 968 1 607 7 361 48.0 8.6 39.4
1986 193 8 615 1 511 7 104 44.6 7.8 36.8
1987 200 8 364 1 525 6 839 41.8 7.6 34.2
1988 207 8 297 1 526 6 771 40.2 7.4 32.8
1989 213 8 726 1 476 7 250 41.0 6.9 34.0
1990 219 8 639 1 355 7 284 39.4 6.2 33.2
1991 226 8 390 1 366 7 024 37.2 6.1 31.1
1992 232 8 139 1 330 6 809 35.1 5.7 29.4
1993 238 7 780 1 319 6 461 32.7 5.6 27.2
1994 243 7 382 1 240 6 142 30.3 5.1 25.2
1995 249 6 849 1 151 5 698 27.5 4.6 22.9
1996 254 6 772 1 213 5 559 26.7 4.8 21.9
1997 259 6 184 1 175 5 009 23.9 4.5 19.3
1998 264 5 687 1 121 4 566 21.6 4.2 17.3
1999 269 5 225 1 037 4 188 19.5 3.9 15.6
2000 273 5 399 1 032 4 367 19.8 3.8 16.0
2001 278 4 897 1 081 3 816 17.6 3.9 13.7
2002 282 5 003 1 113 3 890 17.7 3.9 13.8
2003 287 5 157 1 030 4 127 18.0 3.6 14.4
2004 291 5 220 1 015 4 205 17.9 3.5 14.5
2005 295 5 543 1 027 4 516 18.8 3.5 15.3
2006 299 5 829 1 083 4 746 19.5 3.6 15.9
2007 304 6 569 1 118 5 451 21.6 3.7 18.0
2008 308 6 946 1 061 5 885 22.6 3.4 19.1
2009 312 7 423 1 163 6 260 23.6 3.7 19.9
2010 316 7 115 1 105 6 010 22.3 3.5 18.8
2011 7 180 1 137 6 043 22.1 3.5 18.6
2012 7 431 1 135 6 296 22.5 3.4 19.0

கருவள வீதம் (மக்கள் தொகையியல் சுகாதார ஆய்வு) [4]

[தொகு]

கருவள வீதம் (க.வீ), பிறப்பு வீதம் (பி.வீ) :


வருடம் பி.வீ (மொத்தம்) க.வீ (மொத்தம்) பி.வீ (நகரம்) க.வீ (நகரம்) பி.வீ (கிராமம்) க.வீ (கிராமம்)
2009 24,7 2,5 (2,2) 22,9 2,1 (1,9) 25,5 2,8 (2,4)

இனக் குழுக்கள்

[தொகு]

அதிகமாக மக்கள் தொகையினை கொண்ட இனம், திவேகிஸ் இனமாகும். இவர்கள் மாலைதீவுகளின் வரலாற்று பகுதியினை பூர்வீகமாக கொண்டவர்கள் ஆகும். இப்பகுதி தற்போதைய மாலைதீவுகள் குடியரசையும் இந்தியாவின் இலட்சத்தீவுக் கூட்டத்தின் மினிக்காய் தீவையும் உள்ளடக்கியிருந்தது. இவர்கள் ஒரே கலாசாரத்தை பகிர்ந்து கொண்டதுடன் திவேயி மொழியினை பேசுகின்றனர். இவர்கள் அடிப்படையில் இந்தோ-ஆரியர் மக்களாவர். சிங்கள மக்களுடன் நெருங்கிய தொடர்புபட்டுள்ளதுடன் அரபு, மலாயர், தென் இந்தியர் மற்றும் ஆபிரிக்க இனத்தவர்களின் சந்ததியுமாவர்.

முன்னைய காலத்தில் கிரவறு தீவில் வாழ்ந்த, கிரவறு மக்கள் (Giraavaru people) என அழைக்கப்பட்ட சிறிய மக்கள் தொகையினர் தற்போது மாலைதீவுகள் மக்கள் தொகையில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

மொழிகள்

[தொகு]

மாலைதீவுகள் மக்கள் உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தும் திவேயி மொழியானது கிட்டத்தட்ட அனைத்து மக்களாலும் பேசப்படும் மொழியாகும் . இது சிங்கள மொழியுடன் மிகவும் நெருங்கிய தொடர்புபட்டதுடன் தான என அழைக்கப்படும் விசேட அரபு எழுத்துருக்களால் எழுதப்படும் மொழியாகும். இது வலமிருந்து இடமாக எழுத்தப்படும் எழுத்துமுறையாகும். இந்து-அரபு எண்ணுருக்களிலிருந்தும் அரபு எழுத்துமுறையின் உயிரெழுத்துக் குறியீட்டுக்களிலிருந்தும் தான எழுத்துக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இங்கு இரண்டாவது மொழியாக ஆங்கிலம் பலராலும் பேசப்படுகின்றது.

சமயம்

[தொகு]

அடிப்படையில் மாலைதீவுகள் மக்கள் பௌத்தர்கள் ஆவார்கள். இவர்கள் 12 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இஸ்லாம் சமயத்தினை உண்மை மார்க்கமாக ஏற்றிக்கொண்டனர். தற்போது இங்கு இஸ்லாம் சமயம் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்பட்ட சமயமாகும். அத்துடன் சிறிய பகுதி இலங்கை பௌத்தர்களும் இந்திய இந்துக்களும் வாழ்கின்றனர்.

சி.ஐ.ஏ உலக மக்கள் தொகையியல் புள்ளிவிபரங்கள்

[தொகு]

மக்கள் தொகை

[தொகு]

301,475 (2000 வருடம் ஜூலை மாதம்), 369,031 (2007 வருடம் ஜூலை மாதம்) 393,253 (2015 வருடம் ஜூலை மாதம்) [5]

வயதுக் கட்டமைப்பு

[தொகு]
 • 0-14 வயது: 21.05% (ஆண் 42,230/பெண் 40,555)
 • 15-24 வயது: 22.41% (ஆண் 51,141/பெண் 36,970)
 • 25-54 வயது: 47.08% (ஆண் 107,436/பெண் 77,713)
 • 55-64 வயது: 5.14% (ஆண் 10,243/பெண் 9,968)
 • 65 வயதிற்கு மேல்: 4.32% (ஆண் 7,994/பெண் 9,003) (2015 ஆம் ஆண்டின் படி)

பால் விகிதம்

[தொகு]
 • பிறப்பின் போது: 1.05 ஆண்கள் /பெண்கள்
 • 0-14 வயது: 1.04 ஆண்கள் /பெண்கள்
 • 15-24 வயது: 1.38 ஆண்கள் /பெண்கள்
 • 25-54 வயது: 1.38 ஆண்கள் /பெண்கள்
 • 55-64 வயது: 1.03 ஆண்கள் /பெண்கள்
 • 65 வயதிற்கு மேல்: 0.89 ஆண்கள் /பெண்கள்
 • மொத்த மக்கள் தொகையில்: 1.26 ஆண்கள் /பெண்கள் (2015 ஆம் ஆண்டின் படி)

பிறப்பின் போது வாழ்க்கை எதிர்பார்க்கை

[தொகு]
 • மொத்த மக்கள் தொகையில் : 75.37 வருடம்
 • ஆண் : 73.06 வருடம்
 • பெண் : 77.8 வருடம் (2015 ஆம் ஆண்டின் படி)

எழுத்தறிவு

[தொகு]

வரைவிலக்கணம் : 15 வயதிற்கு மேற்பட்ட மக்களில் எழுத, வாசிக்க தெரிந்தவர்கள் மொத்த மக்கள் தொகையில்: 99.3% ஆண் : 99.8% பெண் : 98.8% (2015 ஆம் ஆண்டின் படி)

கல்வி

[தொகு]

சராசரியாக ஒரு மாலைதீவு குடிமகன் 4.7 வருட கல்வியினை பெற்றுள்ளார்[6]

மேற்கோள்கள்

[தொகு]
 1. http://www.indexmundi.com/maldives/birth_rate.html
 2. World Population Prospects: The 2010 Revision
 3. Republic of Maldives Department of national planning
 4. http://www.dhsprogram.com/
 5. "The World Factbook". Cia.gov. Archived from the original on 18 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 28 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
 6. Neil Merret (30 November 2010). "Average Maldivian citizen has 4.7 years of education, finds UN Human Development Report". Minivan News. Archived from the original on 18 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 7 January 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)