மாலைதீவுகளின் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
FIAV 111111.svg கொடி விகிதம்: 2:3

மாலைத்தீவுகள் குடியரசின் கொடி, வெள்ளை நிலைக்குத்தான பிறையைக் கொண்டதும் பெரிய பச்சை நிறச் செவ்வகத்தை மத்தியில் கொண்டதுமான சிவப்பு நிற செவ்வகக் கொடியாகும். இதில் பிறையின் மூடிய பக்கத்தில் கொடிக் கம்பம் வரவேண்டும். இது யூலை 25 1965 இல் ஏற்றுகொள்ளப்பட்டது.

வரலாறு[தொகு]

பாரம்பரிய மாலைத்தீவுகளின் கொடி தனிச்சிவப்புச் செவ்வகமாக காணப்பட்டது இது கடல் நீல நிறத்திலிருந்து இலகுவாகப் பிரித்துக் காட்ட உதவியிருக்கும். இது 20ம் நூற்றாண்டு வரையும் சுல்தான்களால் பாவிக்கப்பட்டுவந்தது. அதில் கருப்பு வெள்ளை நிறத்திலான கொடிக்கம்பம் காணப்பட்டது.

1947 இல் வெண்பிறையும் பச்சை நிறச் செவ்வகமும் சேர்க்கப்பட்டுப் புதிய கொடி உருவாக்கப்பட்டது. இதில் பிறையின் கொம்புகள் கம்பத்தை நோக்கி காணப்பட்டமை சாதாரண இஸ்லாமிய வழக்கின் படி பிழையானதாகும். இக்கொடி 1947 வரை பாவனையில் இருந்தது. 1947 இல் இப்பிழை திருத்தப்பட்டு புதிய கொடி அறிமுகப்படுத்தப்பட்டது.

1965 ஆம் ஆண்டு கருப்பு வெள்ளைப் பகுதி நீக்கப்பட்டு புதிய கொடி அறிமுகமானது. அதே வருடம் சுல்தான் அக்கொடியில் ஐந்து மூலை நட்சத்திரம் ஒன்றைப் பிறையின் நடுவேயிட்டு அதனை தனது கொடியாகப் பயன்படுத்தினார், இதுவே இன்றும் மாலைத்தீவு அதிபரின் கொடியாகப் பயன்படுகிறது.

அடையாளங்கள்[தொகு]

சிவப்பு நிறச் செவ்வகம் முன்னாள், தற்போதைய, வரவிருக்கும் தேசிய வீரர்களின் வீரத்தை குறிக்கிறது. பச்சை தென்னை மரங்களை குறிக்கிறது அதன் பயன்பாடுகள் நினைவு கூறப்படுகிறது. வெண்ணிறப் பிறை ஒன்றுப்பட்ட இஸ்லாமிய விசுவாத்தை குறிக்கிறது.


படத்தொகுப்பு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலைதீவுகளின்_கொடி&oldid=2922475" இருந்து மீள்விக்கப்பட்டது