மாலிப்டோவனேடேட்டு வினையாக்கி
தோற்றம்
மாலிப்டோவனேடேட்டு வினையாக்கி (Molybdovanadate reagent) என்பது மாலிப்டேட்டு அயனி வனேடேட்டு அயனி இரண்டையும் கொண்ட ஒரு கரைசல் ஆகும். பொதுவாக பாசுபேட்டு அயனி உள்ளடக்கத்தை தீர்மானிப்பதில் இது பயன்படுத்தப்படுகிறது.[1][2] பயன்படுத்தப்படும் வினையாக்கியில் பெர்குளோரிக் அமிலம், கந்தக அமிலம் அல்லது நைட்ரிக் அமிலம் போன்ற வலுவான அமிலம் சேர்க்கப்பட்ட அம்மோனியம் மாலிப்டோவனேடேட்டு கரைசல் இருக்கும். மது, கலனில் அடைக்கப்பட்ட பழங்கள், பழப்பாகு, பழக்கூழ் போன்ற பிற பழம் அடிப்படையிலான தயாரிப்புகளின் பகுப்பாய்வு போன்ற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது.[3][4]
இயற்பியல் பண்புகள்
[தொகு]மாலிப்டோவனேடேட்டு வினையாக்கி மணமற்றது. தெளிவான, மஞ்சள் நிற திரவமாகத் தோன்றும். சுவாசித்தால் தீங்கு விளைவிக்கும். புற்றுநோயை உண்டாக்கும். கண்களில் தீக்காயங்களை ஏற்படுத்தும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Suzanne Nielsen (30 April 2003). Food Analysis. Springer Science & Business Media. pp. 196–7. ISBN 978-0-306-47495-8.
- ↑ Palgrave (28 June 1991). Fluid Fertilizer Science and Technology. CRC Press. p. 544. ISBN 978-0-8247-7703-6.
- ↑ Maynard Andrew Amerine; Maynard Alexander Joslyn (January 1970). Table Wines: The Technology of Their Production. University of California Press. pp. 760–1. ISBN 978-0-520-01657-6.
- ↑ Ike Jeon (16 December 1994). Analyzing Food for Nutrition Labeling and Hazardous Contaminants. CRC Press. pp. 186–7. ISBN 978-0-8247-9349-4.