மாலினி பட்டாச்சார்யா
தோற்றம்
கௌரவப் பேராசிரியர் மாலினி பட்டாச்சார்யா Malini Bhattacharya | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளு மன்றம் | |
பதவியில் 1989–1996 | |
முன்னையவர் | மம்தா பானர்ஜி |
பின்னவர் | கிருட்டிணா போசு |
தொகுதி | ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 அக்டோபர் 1943 டாக்கா, வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்பொழுது டாக்கா ,வங்காள தேசம்) |
அரசியல் கட்சி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்) |
முன்னாள் மாணவர் |
|
மூலம்: [1] |
மாலினி பட்டாச்சார்யா (Malini Bhattacharya) பிரித்தானிய இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1943 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 14 ஆம் தேதியன்று பிரித்தானிய இந்தியாவின் வங்காள மாகாணத்தில் இவர் பிறந்தார். இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவின் உறுப்பினராக இவர் இந்திய அரசியலில் இயங்கினார். மேற்கு வங்காள மாநிலத்தின் இயாதவ்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]
ஓர் எழுத்தாளர், அறிஞர், மொழிபெயர்ப்பாளர், நாடக ஆசிரியர் மற்றும் மகளிர் இயக்கத்தில் ஆர்வலர் என பன்முகங்களுடன் திகழ்ந்தார். ஓய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியரான இவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் மகளிர் ஆய்வுகள் பள்ளியின் இயக்குநராகவும் இருந்தார்.[4][5][6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Lok Sabha Members Bioprofile Malini Bhattacharya". Lok Sabha. Archived from the original on 10 August 2016. Retrieved 21 June 2016.
- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1996. p. 211. Retrieved 21 June 2016.
- ↑ Mainstream. N. Chakravartty. 2003. p. 30. Retrieved 21 June 2016.
- ↑ BHATTACHARYA, MALINI. "On being a woman in Parliament". Frontline (in ஆங்கிலம்). Retrieved 2020-08-03.
- ↑ RAJALAKSHMI, T. K. "Reinventing violence". Frontline (in ஆங்கிலம்). Retrieved 2020-08-03.
- ↑ "৮ই মার্চ ও যৌথ আন্দোলনের কিছু ফসল". Ebong Alap / এবং আলাপ (in அமெரிக்க ஆங்கிலம்). 2018-03-07. Retrieved 2020-08-03.