மாலிச் சிக்கல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வடக்கு மாலிச் சண்டை
லிபிய உள்நாட்டுப் போரின் தாக்கத்தின் பகுதி

சனவரி 10, 2013 நிலவரப்படியான போராளிகள் உரிமை கோரும் பகுதிகளைக் காட்டும் வரைபடம்
நாள் சனவரி 17, 2012 (2012-01-17)நடப்பில்
(11 ஆண்டு-கள், 10 மாதம்-கள் and 5 நாள்-கள்)
இடம் அசவாத் (வடக்கு மாலி)
பிரிவினர்
 மாலி

பிரான்சு ஆதரவாக :
மேஆநாபொச
ஐக்கிய அமெரிக்கா ஐக்கிய அமெரிக்கா[3][4][5]


அசவாத் தேசிய விடுதலை முன்னணி[6][7]

அசவாத் தனி நாடு இசுலாமியர்
 • அன்சர் தினே
 • மேற்காப்பிரிக்க ஒற்றுமை மற்றும் ஜிகாத் இயக்கம்[1]
 • இசுலாமிய மகரபில் அல் குவைதா (AQIM)
 • போக்கோ அராம்[2]
 • அன்சர் அல்-சாரியா
தளபதிகள், தலைவர்கள்
மாலி அமடூ டூமனி டூரே (until March)
மாலி சாடியோ கசாமா (மார்ச்சு வரை)
மாலி எல் ஆஜி அக் கமோ (மார்ச்சு வரை)
மாலி அமடூ சனோகோ (மார்ச்சு 2012 முதல்)

மொகமது லமைன் ஓல்டு சிதத் (NLFA)
உசைன் குலாம் (NLFA)[6]

அசவாத் மகமூது அக் அகலி
அசவாத் பிலால் அக் அசெரிஃப்
அசவாத் மூசா அக் அச்சரடூமேன்
அசவாத் அக் மொகமது நஜெம்[8]
இலியாத் அக் கலி[9]
ஒமார் ஓல்டு அமகா[10]
பலம்
7,000–7,800 இராணுவத்தினர்,
4,800 துணை இராணுவத்தினர்,
3,000 பிற படைத்துறையினர்

~500 (NLFA)[6]

3,000[11][12] 1,200+[13]
 • அராம்: 100[2]
 • டினே: 300[12]
இழப்புகள்
162+ கொல்லப்பட்டனர்,[14][15]

400 பிடிக்கப்பட்டனர்[16]
மொத்தம்:
1,000–1,500+ கொலை, பிடிப்பு அல்லது ஓடியது (ஏப்ரல் 2012இல்) [11]

165+ கொல்லப்பட்டனர்
(மாலி படையுடனான மோதலில்)[15][17][18]

5–123 கொல்லப்பட்டனர்
(இசுலாமியருடனான மோதலில்)[19][20]

69-114+ கொல்லப்பட்டனர்
[19][20]
குடிபெயர்வு: வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தோர் ~100,000[21]
உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தோர் 100,000+[22]
மொத்தம்: ~250,000[23]

மாலிச் சிக்கல் (Mali conflict) மேற்காப்பிரிக்க நாடான மாலியில் அசவாத் என்று அறியப்படும் வடக்கு மாலிப் பகுதிக்கு தன்னாட்சி அல்லது விடுதலை கோரி அரசுக்கெதிராக நடத்தப்பட்டு வரும் போராட்டத்தைக் குறிக்கிறது. சனவரி 17, 2012 முதல் பல்வேறு போராட்டக்குழுக்கள் இந்த உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றன. அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் (MNLA) துவாரெக் இனத்தவருக்கென தனிநாடு கோரி போராடி வருகிறது. இப்பகுதியினை ஏப்ரல் 2012இல் இந்த இயக்கம் கைப்பற்றியது. துவக்கத்தில் இந்த இயக்கத்திற்கு இசுலாமியக் குழு அன்சர் தினே ஆதரவளித்து வந்தது; ஆனால் அசவாத்திலிருந்து மாலிப்படைகள் துரத்தப்பட்ட பின்னர் அன்சர் தினே இசுலாமிய சாரியா சட்டத்தை செயல்படுத்தியதால் இரு குழுக்களுக்குமிடையே வேறுபாடு எழுந்தது. அதிலிருந்து அசவாத் விடுதலைக்கான தேசிய இயக்கம் அன்சர் தினேவுடனும் மற்றொரு இசுலாமிய குழுவான அல் குவைதாவின் மாலி பிரிவான மேற்காப்பிரிக்க ஒற்றுமை மற்றும் ஜிகாத்திற்கான இயக்கத்துடனும் மோதல்கள் நிகழ்த்தி வருகிறது.

இந்தச் சிக்கல் காரணமாக, மாலியின் அரசுத்தலைவர் தேர்தல்களுக்கு ஒரு மாதம் முன்னதாக, படைத்துறைப் புரட்சியால் மார்ச்சு 22, 2012 அன்று, அதிபர் அமடூ டூமனி டூரேயின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.[24] புரட்சிப் படையினர் மாலியின் மக்களாட்சியை நிலைநிறுத்தும் தேசியக் குழுவை நிறுவி நாட்டு அரசியலைப்பை இடைவிலக்கம் செய்தனர்.[25] இந்த நிலையற்ற தன்மையை பயன்படுத்திய போராளிகள் மாலியின் மூன்று பெரும் வடக்கு நகரங்களான —கிடால், காவ் மற்றும் டிம்பக்டூ— ஆகியவற்றை அடுத்தடுத்து மூன்று நாட்களில் கைப்பற்றினர்.[26] ஏப்ரல் 5 அன்று டூயென்சாவைக் கைப்பற்றிய பின்னர் அசவாத் விடுதலை இயக்கம் தனது இலக்குகளை நிறைவேற்றியதாகவும் மேலும் போரிடுவதை நிறுத்திக் கொள்வதாகவும் கூறியது. இதற்கு அடுத்த நாளன்று அசவாத்தை தனிநாடாக அறிவித்தது.[27]

மாலியின் படைகளுடன் ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொண்ட பிறகு அசவாத் விடுதலை இயக்கமும் இசுலாமியக் குழுக்களும் தங்களின் புதிய நாட்டின் குறிக்கோள்களைக் குறித்து வேறுபட்டனர்.[28] சூன் 27 அன்று, மேற்காப்பிரிக்க ஒற்றுமை மற்றும் ஜிகாத்திற்கான இசுலாமியக் குழுவும் அசவாத் விடுதலை தேசிய இயக்கமும் காவ் சண்டை எனக் குறிப்பிடப்படும் மோதலில் ஈடுபட்டனர்; இப்போரில் அசவாத் விடுதலை இயக்கத்தினரின் செயலாளர் நாயகம் பிலால் அக் அச்செரிஃப் காயமடைந்ததுடன் காவ் நகரும் இசுலாமியர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.[29] சூலை 17இல் அசவாத் இயக்கம் வடக்கு மாலியின் பிற நகரங்களை இசுலாமியப் போராளிகளிடம் இழந்தனர்.[30]

சனவரி 11, 2013இல் வெளிநாட்டு நிதி உதவியும் பிரெஞ்சுப் படையினரின் உதவியும் நாடிய மாலி நாட்டரசின் கோரிக்கையை நிறைவேற்ற தாம் ஒப்புவதாக பிரான்சிய அதிபர் பிரான்சுவா ஆலந்து அறிவித்தார்.[13]

சான்றுகோள்கள்[தொகு]

 1. Couamba Sylla (4 April 2012). "Tuareg-jihadists alliance: Qaeda conquers more than half of Mali". middle-east-online.com இம் மூலத்தில் இருந்து 22 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6IIzCv6HI?url=http://www.middle-east-online.com/english/?id=51578. பார்த்த நாள்: 6 April 2012. 
 2. 2.0 2.1 "Traore readies to take over in Mali". News24. 12 April 2012. http://www.news24.com/Africa/News/Traore-readies-to-take-over-in-Mali-20120411. பார்த்த நாள்: 12 April 2012. 
 3. "Malian forces battle Tuareg rebels". South African Press Association. News24. 4 March 2012. http://www.news24.com/Africa/News/Malian-forces-battle-Tuareg-rebels-20120304. பார்த்த நாள்: 22 March 2012. 
 4. "Logistics: American Robots Sustain The Siege of Tessalit". Strategypage.com. 8 March 2012. http://www.strategypage.com/htmw/htlog/articles/20120308.aspx. பார்த்த நாள்: 22 March 2012. 
 5. "Mali junta quits as regional troops prepare to target Tuareg rebels". The Observer. 7 April 2012. http://www.guardian.co.uk/world/2012/apr/07/mali-junta-step-down-rebels?newsfeed=true. பார்த்த நாள்: 7 April 2012. 
 6. 6.0 6.1 6.2 Par Europe1.fr avec AFP. "Mali: nouveau groupe armé créé dans le Nord – Europe1.fr – International". Europe1.fr. http://www.europe1.fr/International/Mali-nouveau-groupe-arme-cree-dans-le-Nord-1027345/. பார்த்த நாள்: 9 April 2012. 
 7. Felix, Bate; Diarra, Adama (10 April 2012), New north Mali Arab force seeks to "defend" Timbuktu, Reuters, archived from the original on 25 ஜூலை 2012, retrieved 12 ஜனவரி 2013 {{citation}}: Check date values in: |accessdate= and |archive-date= (help)
 8. MISNA (20 January 2012). "Mali: Fighting In North; The New Touareg War". Eurasiareview.com. http://www.eurasiareview.com/20012012-mali-fighting-in-north-the-new-touareg-war/. பார்த்த நாள்: 7 March 2012. 
 9. Daniel, Serge (30 March 2012). "Mali's isolated junta seeks help to stop Tuareg juggernaut". ModernGhana.com. http://www.modernghana.com/news/386487//malis-isolated-junta-seeks-help-to-stop-tuareg-jug.html. பார்த்த நாள்: 1 April 2012. 
 10. "Mali Tuareg rebels' call on independence rejected". BBC. 6 April 2012. http://www.bbc.co.uk/news/world-africa-17640223. பார்த்த நாள்: 6 April 2012. 
 11. 11.0 11.1 Jeremy Keenan (20 March 2012). "Mali's Tuareg rebellion: What next?". Al Jazeera. http://www.aljazeera.com/indepth/opinion/2012/03/20123208133276463.html. பார்த்த நாள்: 23 March 2012. 
 12. 12.0 12.1 Sofia Bouderbala (2 April 2012). "Al-Qaeda unlikely to profit from Mali rebellion: experts". The Daily Star இம் மூலத்தில் இருந்து 2 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120402204323/http://www.dailystar.com.lb/News/International/2012/Apr-02/168928-al-qaeda-unlikely-to-profit-from-mali-rebellion-experts.ashx#axzz1quEeCoBI. பார்த்த நாள்: 3 April 2012. 
 13. 13.0 13.1 "France begins Mali military intervention". Al Jazeera. 11 January 2013. http://www.aljazeera.com/news/africa/2013/01/2013111135659836345.html. பார்த்த நாள்: 11 January 2013. 
 14. Bisseleua, Herve (2012-04-12). "Making sense of Mali". Haaretz.com. http://www.haaretz.com/opinion/making-sense-of-mali-1.423899. பார்த்த நாள்: 2013-01-12. 
 15. 15.0 15.1 "Fierce clashes between Malian army and Tuareg rebels kill 47". The Daily Telegraph. 19 January 2012 இம் மூலத்தில் இருந்து 14 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6BPQ1JyfE?url=http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/mali/9026722/Fierce-clashes-between-Malian-army-and-Tuareg-rebels-kill-47.html. பார்த்த நாள்: 7 March 2012. 
 16. "Des prisonniers crient leur détresse – Actualité" (in French). El Watan. 8 April 2012 இம் மூலத்தில் இருந்து 9 ஏப்ரல் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120409135846/http://www.elwatan.com/actualite/des-prisonniers-crient-leur-detresse-08-04-2012-165945_109.php. பார்த்த நாள்: 9 April 2012. 
 17. "Mali says 20 rebels killed, thousands flee". Reuters. 5 February 2012 இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6CO8l5DrN?url=http://www.reuters.com/article/2012/02/05/mali-rebels-attack-idAFL5E8D407420120205. பார்த்த நாள்: 7 March 2012. 
 18. "Heavy fighting in north Mali, casualties reported". Reuters. 7 February 2012 இம் மூலத்தில் இருந்து 27 டிசம்பர் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171227124222/http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/mali/9026722/Fierce-clashes-between-Malian-army-and-Tuareg-rebels-kill-47.html. பார்த்த நாள்: 11 January 2013. 
 19. 19.0 19.1 "Mali: au moins 35 morts dans les affrontements islamistes/Touareg à Gao" (in French). Agence France-Presse. Google News. 30 June 2012 இம் மூலத்தில் இருந்து 22 ஜனவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130122182826/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5jd17HpOQd9fm43sEXIKYc2Okw-IQ?docId=CNG.d0196da202fadb24721b10ebdc7572ae.b61. பார்த்த நாள்: 30 June 2012. 
 20. 20.0 20.1 "Islamists seize north Mali town, at least 21 dead in clashes". Google.com. 2012-06-27 இம் மூலத்தில் இருந்து 2013-02-01 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130201201046/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hBFw8aQMUwyILkE0faoge_v3a2Tw?docId=CNG.5a399b35f2fd7797cbca9a2f17c8ca72.5a1. பார்த்த நாள்: 2013-01-12. 
 21. "Mali: Timbuktu heritage may be threatened, Unesco says". BBC. 3 April 2012. http://www.bbc.co.uk/news/world-africa-17596831. பார்த்த நாள்: 4 April 2012. 
 22. "Tuareg rebels take Mali garrison town, say sources". Trust.org. 11 March 2012 இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6COegnEDL?url=http://www.trust.org/alertnet/news/tuareg-rebels-take-mali-garrison-town-say-sources/. பார்த்த நாள்: 11 March 2012. 
 23. Meo, Nick (7 April 2012), "Triumphant Tuareg rebels fall out over al-Qaeda's jihad in Mali", The Telegraph
 24. "Mali soldiers say president toppled in coup – Africa". Al Jazeera. 22 March 2012. http://www.aljazeera.com/news/africa/2012/03/201232251320110970.html. பார்த்த நாள்: 22 March 2012. 
 25. Associated Press, "Coup Leader Reinstates Mali's Constitution", Express, 2 April 2012. p. 8.
 26. Serge Daniel (4 April 2012). "Mali junta denounces 'rights violations' by rebels". Agence France-Presse. Google இம் மூலத்தில் இருந்து 1 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130201201147/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5grilySJ5EdrgURoNp1mt3AIJhTgg?docId=CNG.915a5505555757d7df5029b5b99451cc.261. பார்த்த நாள்: 6 April 2012. 
 27. "Tuareg rebels declare the independence of Azawad, north of Mali". Al Arabiya. 6 April 2012. http://english.alarabiya.net/articles/2012/04/06/205763.html. பார்த்த நாள்: 6 April 2012. 
 28. "Mali: Islamists seize Gao from Tuareg rebels". BBC News. 27 June 2012. http://www.bbc.co.uk/news/world-africa-18610618. பார்த்த நாள்: 27 June 2012. 
 29. Serge Daniel (27 June 2012). "Islamists seize north Mali town, at least 21 dead in clashes". Agence France-Presse. Google News இம் மூலத்தில் இருந்து 1 பிப்ரவரி 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130201201046/http://www.google.com/hostednews/afp/article/ALeqM5hBFw8aQMUwyILkE0faoge_v3a2Tw?docId=CNG.5a399b35f2fd7797cbca9a2f17c8ca72.5a1. பார்த்த நாள்: 27 June 2012. 
 30. Nossiter, Adam (18 July 2012). "Jihadists' Fierce Justice Drives Thousands to Flee Mali". The New York Times. 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலிச்_சிக்கல்&oldid=3575730" இருந்து மீள்விக்கப்பட்டது