உள்ளடக்கத்துக்குச் செல்

மாலிக் ரிகான் தர்கா, சிரா

ஆள்கூறுகள்: 13°44′06.3″N 76°54′31.9″E / 13.735083°N 76.908861°E / 13.735083; 76.908861
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலிக் ரிகான் தர்கா, சிரா
மாலிக் ரிகானின் கல்லறை
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்சிரா, கர்நாடகா, இந்தியா
புவியியல் ஆள்கூறுகள்13°44′06.3″N 76°54′31.9″E / 13.735083°N 76.908861°E / 13.735083; 76.908861
சமயம்இசுலாம்
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்தும்கூர் மாவட்டம்
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டுபொ.ச 1651

மாலிக் ரிகன் தர்கா (Malik Rihan Dargah) மாலிக் ரிகான் கல்லறை என்றும் அழைக்கப்படும் இது இந்தியாவின் கர்நாடகாவில் உள்ள சிராவில் உள்ள ஒரு கல்லறை ஆகும். இதில் 17ஆம் நூற்றாண்டில் சிரா மாகாணத்தின் ஆளுநராக இருந்த மாலிக் ரிகானின் கல்லறை உள்ளது. இது ஒரு சதுரத் திட்டத்தைக் கொண்டுள்ளது. மேலும் தக்காணக் கட்டிடக்கலையில் இந்தோ சரசனிக் பாணியை விளக்குகிறது.[1] [2]

அமைவிடம்[தொகு]

இந்த கல்லறை இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் தும்கூர் மாவட்டத்திலுள்ள சிரா நகரில் அமைந்துள்ளது. இது தேசிய நெடுஞ்சாலையிலுள்ள (NH-48) (பெங்களூரிலிருந்து புனே வரை) ஒரு நகராட்சி நகரமாகும். மேலும் இது பெங்களூரிலிருந்து 123 கிலோமீட்டர்கள் (76 மைல்) தொலைவில் உள்ளது.

வரலாறு[தொகு]

ஔரங்கசீப் பீஜப்பூர் சுல்தான்களை பதவி நீக்கம் செய்து முகலாய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்துவதற்கு முன்பு சிரா 1638 முதல் 1687 வரை பீஜப்பூர் சுல்தான்களின் கட்டுப்பாட்டின் கீழ் பிராந்தியத்தின் கிழக்கு விளிம்பிற்கு அருகில் இருந்தது. மைசூர் சுல்தானகத்தை உருவாக்க, உடையார்களிடம் வேலை தேடுவதற்கு முன்பு ஐதர் அலி தனது வாழ்க்கையைத் தொடங்கிய இடமாகவும், பின்னர் அவர்களை பதவி நீக்கம் செய்ய ஒரு சதியை ஏற்பாடு செய்த இடமாகவும் சிரா இருந்தது. ஐதரின் மகன் திப்பு சுல்தான், பெரும்பாலான முஸ்லிம்களை சிராவிலிருந்து ஸ்ரீரங்கப்பட்டணம் தீவில் அவர் நிறுவிய புதிய நகரத்திற்கு மாற்றும்படி கட்டாயப்படுத்தினார். இது சிராவின் பெரும் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.[3]

பீஜப்பூர் சுல்தானகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, மாலிக் ரிகான் 1638 முதல் 1651 வரை பிஜப்பூர் சுல்தான்களால் சிராவின் சுபாதாராக (ஆளுநர்) நியமிக்கப்பட்டார். இந்த கல்லறை இவரது கல்லறைக்கு மேல் 1651இல் கட்டி முடிக்கப்பட்டது.[1] [2]

அக்டோபர் 2012 இல், உயர்நீதிமன்ற உத்தரவின்படி, இந்தக் கல்லறை, கர்நாடகா மாநிலத்தால் வக்ஃப் சட்டம், 1995இன் பிரிவு 65இன் கீழ் கொண்டுவரப்பட்டது.[4]

அம்சங்கள்[தொகு]

முதேஜர் பாணியில் 1651இல் கட்டப்பட்ட கல்லறை சதுர வடிவத்தைக் கொண்டுள்ளது. இது ஒரு மைய மண்டபத்தையும் கொண்டுள்ளது. செதுக்கப்பட்ட அறைகளுடன் கூடிய தங்குமிடம் உள்ளது. மேலே உள்ள குவிமாடம் "முக்கால் பகுதி அரைக்கோளமாக" உள்ளது.[1] இது சரசனிக் பாணியை விளக்குகிறது. [2]

இந்திய தொல்லியல் துறையின் (ASI) கீழ் பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இருக்கும் இந்த கல்லறை , சிரா, ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அருகில் அமைந்துள்ளது.

பிற கட்டமைப்புகள்[தொகு]

அருகிலுள்ள ஜும்ஆ பள்ளிவாசல்

கஸ்தூரி இரங்கப்ப நாயக்கன் கோட்டையைத் தவிர, கல்லறைக்கு அருகில் உள்ள ஜும்ஆ பள்ளிவாசலும் 1696இல் கட்டப்பட்டது. பள்ளிவாசலின் முகப்பில் ஐந்து வளைவுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. வளைவுகளுக்கு மேல் அலங்கரிக்கப்பட்ட பாரபெட் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. மசூதியின் கூரை மூன்று குவிமாடங்களால் ஆனது.[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 George Michell (1 May 2013). Southern India: A Guide to Monuments Sites & Museums. Roli Books Private Limited. pp. 192–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7436-903-1.
  2. 2.0 2.1 2.2 Sira monuments, Mysore Archaeological Report 1917, pp. 11–12
  3. Rice, B. L. (2001), Gazetteer of Mysore. Asian Educational Services, pp. 198–199
  4. "Hazrath Malik Rehan Darga ... vs Karnataka State Board Of Wakfs". Karnataka High Court. 8 October 2012. பார்க்கப்பட்ட நாள் 14 April 2016.