மாலிக் தினார் பள்ளிவாசல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(மாலிக் தினார் மசூதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாலிக் தினார் பள்ளிவாசல் (Malik Dinar Mosque) என்பது தென்னிந்தியாவின் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தியாவின் பழமையான பள்ளிவாசல்களில் ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

காசர்கோடு மேற்கு கடற்கரையில் பல ஆண்டுகளாக இசுலாத்தின் மையமாக பெருமளவில் முக்கியத்துவத்தைப் பெற்றது இது. இது இந்தியாவில் இசுலாத்தை பரப்ப வந்த மாலிக் தினார் என்பவரால் நிறுவப்பட்டதாக நம்பப்படும் முதல் பத்து பள்ளிவாசல்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இருப்பிடம்[தொகு]

மாவட்டத்தில் மிகச் சிறந்ததும், கவரக்கூடிய ஒன்றான இந்த பள்ளிவாசல் தளங்கரையில் அமைந்துள்ளது. தளங்கரை கடற்கரையானது காசர்கோடு நகரின் மேற்குப் பகுதியில் தொடருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது.

புனிதக் கல்லறை[தொகு]

இந்த பள்ளிவாசல் வளாகத்தில் தாஃபியீன்களில் (இஸ்லாமிய தீர்க்கதரிசி முகம்மதுவின் தோழர்களைப் பார்த்த மக்கள்) ஒருவரான மாலிக் தினாரின் கல்லறை உள்ளது. இந்த இடம் முஸ்லிம்களால் புனிதமானதாக கருதப்படுகிறது. [1] காசர்கோட்டில் உள்ள மற்றொரு குறிப்பிடத்தக்க பள்ளிவாசல், நகரத்தின் மையத்தில் உள்ள தெருவாத்து பள்ளிவாசல் ஆகும்.

யாத்ரீக மையம்[தொகு]

தளங்கரை பள்ளிவாசல் காசர்கோடு மாவட்டத்தின் ஒரு முக்கிய யாத்ரீக மையமாகும்.

மாலிக் தீனார் உருசு[தொகு]

மாலிக் தினார் உருசு என்பது இங்கு நிகழ்த்தப்படும் ஒரு முக்கிய ஆண்டு விழாவாகும். இது கேரளாவிற்கு மாலிக் தினார் வந்ததைக் கொண்டாடும்விதமாக இந்திய முஸ்லிம்கள் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு முக்கிய விழாக்களில் ஒன்றாகும். இது புனித முகர்ரம் மாதத்தில் நடத்தப்பட்டு ஒரு மாதம் நீடிக்கும். இதில் சியாரத் (கல்லறைக்கு வருகை), கொடி ஏற்றம் மற்றும் அன்னதானம் போன்ற பல்வேறு சடங்குகள் நடக்கின்றன. [2]

குறிப்புகள்[தொகு]

  1. Pg 58, Cultural heritage of கேரளம்: an introduction, A. Sreedhara Menon, East-West Publications, 1978
  2. "Official Website of Malik Deenar". Archived from the original on 2015-08-01. பார்க்கப்பட்ட நாள் 2012-10-05.