உள்ளடக்கத்துக்குச் செல்

மாலாஸ்ரீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலாஸ்ரீ
பிறப்புஸ்ரீதுர்கா
10 ஆகத்து 1973 (1973-08-10) (அகவை 51)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்பெங்களூர், கருநாடகம், இந்தியா
தேசியம்இந்தியன்
மற்ற பெயர்கள்மாலாஸ்ரீ
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1979 முதல் தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
ராமு (திரைப்படத் தயாரிப்பாளர்)
பிள்ளைகள்2
உறவினர்கள்சுபஸ்ரீ (சகோதரி)

மாலாஸ்ரீ (Malashri) என்று அழைக்கப்படும் ஸ்ரீதுர்கா ஆகஸ்ட் 10, 1973இல் பிறந்த ஒரு இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர், ஆந்திரத் திரைப்படத்துறை மற்றும் தமிழகத் திரைப்படத்துறை , கூடுதலாக கன்னடத் திரையுலகில் பணியாற்றியவர். இவர் ஒரு இந்திய குடும்பப்பெண் கதாபாத்திரத்தில் நடித்துப் புகழ் பெற்றவர். ஊடகங்களில் அவர் பிரபலமாக கனசினா ராணி (ட்ரீம் கேர்ள்) என்று அழைக்கப்பட்டார்.[1] 1980 மற்றும் 1990 களில் அவர் முன்னணி நடிகையாக இருந்தவர். அவர் கர்நாடகாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படுகிறார்.

மாலாஸ்ரீ, ஒரு குழந்தை நட்சத்திரமாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் 34 திரைப்படங்களில் நடித்துள்ளார். கன்னடத் திரைப்படமான நஞ்ஜுண்டி கல்யாண (1989) திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். இத் திரைப்படம், கன்னட சினிமாவில் முதல் நடிகைகளில் ஒருவராக அவரை உயர்த்தியது. அவரது திரைப்படங்கள் வாயிலாக கன்னடப் படவுலகில் ஒரு முன்னணி நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். "கஜபதி கர்வபங்கா" (1989), போலீசினா ஹேந்தி (1990), கிட்டூரினா ஹூலி (1990), ராணி மகாராணி (1990), ஹ்ருதய ஹெடித்து (1991) போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கவை ஆகும். ஹ்ருதய ஹெடித்து படத்திற்காக அவருக்கு சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது கிடைத்தது. மேலும்,அவர் நடித்த கங்கா (2015) படத்திற்காக, சிறந்த நடிகைக்கான கர்நாடக மாநில திரைப்பட விருதைப் பெற்றார்.[2]

தொழில்

[தொகு]

மாலாஸ்ரீ தனது தாயின் திரைப்படங்களின் இயக்குனர்களால் கவரப்பட்ட பின்னர் குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் ஒரு குழந்தை நடிகராக 34 திரைப்படங்களில் தோன்றினார், அதில் அவர் 26 திரைப்படங்களில் ஒரு சிறுவனின் வேடத்தில் நடித்திருந்தார்.[3]மஜா டாக்கீஸ்" என்கிற ஒரு நிகழ்ச்சியில், தான் ஒரு குழந்தையாக இருந்தபோது, நடிகர் அமிதாபச்சனின் ரசிகராக இருந்ததாகவும், மற்றும் அவரை போலவே உடுத்தி, சிறுவனைப் போல இருந்ததால், இயக்குனர்கள் தங்கள் படங்களில் நடிக்க வைத்ததாகக் கூறியுள்ளார். இவற்றில் 1979இல் வெளியான தமிழ்த் திரைப்படங்களான இமயம் மற்றும் நீல மலர்கள் ஆகியவை அடங்கும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The name is star, super star". The Times of India. 11 November 2008.
  2. கர்நாடகா மாநில திரைப்பட விருதுகள், 2015: முழு பட்டியல்
  3. "I played a boy in 26 films: Malashri". The Times of India. 29 March 2013 இம் மூலத்தில் இருந்து 29 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131029205623/http://articles.timesofindia.indiatimes.com/2013-03-29/news-interviews/38124978_1_malashri-mother-four-films. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலாஸ்ரீ&oldid=3915943" இலிருந்து மீள்விக்கப்பட்டது