மாலதி மைத்திரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாலதி மைத்ரி (பி. 1968) ஒரு தமிழ்க் கவிஞர், எழுத்தாளர். பெண்ணியத்தை கருபொருளாகக் கொண்ட கவிதைகளுக்காக அறியப்பட்டவர். விளிம்பு நிலை அரசியல், மனித உரிமை அரசியல் செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபடுபவர். 'அணங்கு' எனும் பெண்ணிய இலக்கிய இதழினை நடத்தி வருகிறார் மற்றும் தமிழின் முதல் பெண்ணியப் பதிப்பகம் அணங்கின் பதிப்பாளர்.

சங்கராபரணி (2001), நீரின்றி அமையாது உலகு (2003), நீலி (2005), எனது மதுக்குடுவை (2012), முள்கம்பிகளால் கூடு பின்னும் பறவை (2017), கடல் ஒரு நீலச்சொல் (2019) என்பவை இவரது கவிதைத் தொகுதிகள். விடுதலையை எழுதுதல் (2004), நம் தந்தையரைக் கொல்வதெப்படி (2008), வெட்டவெளி சிறை (2014) என்பவை இவரது கட்டுரை நூல்கள். பறத்தல் அதன் சுதந்திரம் (2004) மற்றும் அணங்கு (2005) நூல்களின் தொகுப்பாசிரியர்.

ப[பகுப்பு:தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள்]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலதி_மைத்திரி&oldid=2906689" இருந்து மீள்விக்கப்பட்டது