மாலதி பாசப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலதி பாசப்பா
Malathi Basappa
அழகுப் போட்டி வாகையாளர்
பிறப்பு1950 (அகவை 73–74)
மைசூர், கருநாடகம்,
 இந்தியா
தொழில்வடிவழகி, மெய்வல்லுநர்
பட்ட(ம்)ங்கள்பாரத சுந்தரி 1972
Major
competition(s)
இந்திய அழகிப் போட்டி, உலக அழகிப் போட்டி

மாலதி பாசப்பா (Malathi Basappa) இந்திய வடிவழகி மற்றும் அழகு ராணியாவார். 1950 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். 1972 ஆம் ஆண்டில் பாரத சுந்தரியாக மாலதிக்கு முடிசூட்டப்பட்டது. இதே ஆண்டு நடைபெற்ற உலக அழகிப் போட்டிக்கு மாலதி பாசப்பா இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார். இப்போட்டியில் 4 ஆவது இடத்தைப் பிடித்தார்.[1][2]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

பாசப்பா இந்தியாவின் மைசூர் நகரில் பிறந்தார். ஓர் அரசியல் கௌரவ பட்டதாரியான இவர் தேசிய அளவிலான கூடைப்பந்து வீராங்கனையாகவும், பரதநாட்டிய நடனக் கலைஞராகவும் இருந்தார். இந்தியாவின் வடிவழகியான இவர் பாரத சுந்தரி 1972 என்ற போட்டியில் பங்கேற்றார். அந்த நாட்களில் ஃபெமினா இந்திய அழகி அமைப்பு உலக அழகிப் போட்டிக்கான உரிமையை வைத்திருக்கவில்லை.[3] போட்டியில் வென்ற இவருக்கு இந்திய அழகி என்ற பொருளில் பாரத சுந்தரி 1972 என்று முடிசூட்டப்பட்டது. இதே ஆண்டு மாலதி பாசப்பா உலக அழகிப் போட்டியிலும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Miss World 1972". veestarz.com. Archived from the original on 26 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Pageantopolis: Miss World 1972". pageantopolis.com. Archived from the original on 14 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014.
  3. "Miss India contests: History". Indpedia.com. Archived from the original on 25 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 17 July 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலதி_பாசப்பா&oldid=3859728" இலிருந்து மீள்விக்கப்பட்டது