மாலதி சௌத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாலதி தேவி சவுத்ரி (Malati Devi Choudhury) (26 ஜூலை 1904– 15 மார்ச் 1998) ஓர் இந்திய குற்றவியல் உரிமைகள் மற்றும் சுதந்திர ஆர்வலர் மற்றும் காந்தியவாதி ஆவார் . இவர் 1904 இல் ஒரு உயர் நடுத்தர வர்க்க பிரம்மோ குடும்பத்தில் பிறந்தாள். இவரது தாய் பாரிஸ்டர் குமுத் நாத் சென் , மாலதி இரண்டரை வயதாக இருந்த போது இவரது தாய் இறந்தார். பின்னர், சினேகலாதா சென் இவரை வளர்த்தார்.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

மாலதியின் குடும்பம் முதலில் டாக்காவின் பிக்ராம்பூரில் உள்ள கமரகண்டாவைச் சேர்ந்தது (இப்போது பங்களாதேசத்தில் உள்ளது), பின்னர், இவரது குடும்ப உறுப்பினர்கள் பீகாரின் சிமுல்தலாவில் குடியேறினர். இவரது தாய்வழி தாத்தா பிகாரி லால் குப்தா, ஐசிஎஸ், பரோடாவின் திவான் ஆனார். ரணாஜித் குப்தா, ஐசிஎஸ், மேற்கு வங்கத்தின் முன்னாள் தலைமைச் செயலாளர், மற்றும் பிரபல நாடாளுமன்ற உறுப்பினரும் இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சருமான இந்திரஜித் குப்தா ஆகியோர் இவரது தாய்வழி உறவினர்கள் ஆவர். இவரது வளார்ப்புத் தாயார் சினேகலதா எழுத்தாளராக இருந்தார், மேலும் தாகூரின் சில படைப்புகளை மொழிபெயர்த்திருந்தார், இது இவரது ஜுகலாஞ்சலி நூலில் இடம்பெற்றுள்ளது.

மாலதி சவுத்ரி ரவீந்திரநாத் தாகூரின் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்துடன் இணைந்தவுடன் முற்றிலும் மாறுபட்ட வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டார். 'சாந்திநிகேதனின் நினைவுகள்' என்ற தலைப்பிலான ஒரு கட்டுரையில், இவரது தாயார் பின்வருமாறு எழுதினார்: "மாலதி மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார் மற்றும் ஒரு மாணவராக விஸ்வ-பாரதியில் இவரது இல்லத்தில் இருந்து மிகவும் பயனடைந்தார். குருதேவின் தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் போதனைகள், இவரது தேசபக்தி மற்றும் இலட்சியவாதம், மாலதியின் வாழ்நாள் முழுவதும் செல்வாக்கு செலுத்தி வழிகாட்டியது.

தாகூர் மற்றும் மகாத்மா காந்தி ஆகியோரால் ஈர்க்கப்பட்டார்.[1] இவர்களிடம் இருந்து கல்வி, வளர்ச்சி, கலை மற்றும் கலாச்சாரத்தின் சில அரிய மதிப்புகள் மற்றும் கொள்கைகளைக் கற்றுக் கொண்டார்,இது இவளுடைய வாழ்க்கையில் வழிகாட்டும் கொள்கைகளாக இருந்தது; காந்தியின் சுதந்திரப் போராட்டத்தில் தன்ன இணைத்துக் கொண்டார்.

மாலதி 1921 ஆம் ஆண்டில் சாந்திநிகேதனுக்கு வந்தார், அப்போது இவளுக்கு பதினாறு வயதுதான், அங்கே ஆறு வருடங்களுக்கும் மேலாக இருந்தார். அந்த நாட்களில் சாந்திநிகேதன் சிறியதாகவும் அழகாகவும் இருந்தது. நோட்டுன் பாரி (புதிய வீடு) என்ற விடுதியில் இவர் வயதில் ஒன்பது பெண்கள் வாழ்ந்து வந்தனர். இவர்கள் மஞ்சுஸ்ரீ, சுரேகா (பின்னாளில் இவளது மருமகள்), ஈவா, சத்யபதி, லதிகா, சரஜு, தபசி, அமிதா (பேராசிரியர் அமர்தியா சென்னின் தாய்) மற்றும் மாலதி. இவர்கள் மரங்களுக்கு அடியில் திறந்த வகுப்புகளில் கலந்து கொண்டனர், கைவினைப்பொருட்கள், இசை, நடனம், ஓவியம் மற்றும் தோட்டக்கலை கற்றனர்.லியோனார்ட் நைட் எல்ம்கிர்ச்ட், எனும் ஆங்கிலேயர், விவசாய கழகம் பொறுப்பாளராக சிறீநிகேதனில் இருந்தார். மற்றொரு ஆங்கிலேயரான திரு. பியர்சன் இவர்களுக்கு கற்பித்தார். இவர்தான் மாலதியை பழங்குடியினருக்காக வேலை செய்யத் தூண்டினார். குருதேவ் தனது 'பாலகா' புத்தகத்திலிருந்து கவிதைகளைப் படித்தபோது, பாலகாவைப் பற்றி வகுப்புகள் எடுத்து, கவிதைகளின் முக்கியத்துவத்தை இவர்களுக்கு விளக்கினார். குருதேவின் அழைப்பின் பேரில் இந்தியாவுக்கு வந்த மிஸ் ஸ்டெல்லா கிரமிசு இவர்களுக்கு இந்தியக் கலை மற்றும் நடனக் கலைகளைக் கற்றுக் கொடுத்தார். மாலதியும் இவருடைய நண்பர்களும் சாந்திநிகேதனில் மிகவும் மகிழ்ச்சியான நாட்களைக் கழித்தனர். அங்கு ஒரு இளம் மாணவியாக, குருதேவின் நடன நாடகங்கள் மற்றும் இசை அமர்வுகளில் சுறுசுறுப்பாக பங்கேற்றார்.

சமூகப் பணி மற்றும் அரசியல்[தொகு]

சரளா தேவி, ரமாதேவி சவுத்ரி மற்றும் பிற பெண் சுதந்திர ஆர்வலர்களுடன் இவர் பல முறை (1921, 1936, 1942 இல்) கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டார் [2]

சுதந்திரத்திற்கு முன்பே, இவர் 1946 இல் ஒரிசாவில் அங்கூலில் பாஜிரவுத் சத்ரவர்களையும், 1948 இல் அங்கலில், உத்கல் நவஜீவன் மண்டலத்தையும் நிறுவினார்.[3]

சான்றுகள்[தொகு]

  1. Here commitment to the teachings of Tagore was evident in her acceptance speech on receiving the Tagore Literacy Award given by the Indian Adult Education Association in 1995. She said: "I feel doubly honoured to receive the Award, which is named after Kabiguru Rabindranath Tagore, to commemorate his memorable achievements in bringing a synthesis among culture, music and aesthetics in evolving and practising his unique philosophy and principles of education. Like Rousseau, Gurudev did not want purposefulness, belonging to the adult mind, to be forced upon the children in school. He believed that once purposefulness was introduced, it brought torture to the child, as it went against the purpose of nature. According to Tagore, nature was the greatest of all teachers for the child. He had tremendous faith in the educational value of natural objects. Natural events like the beautiful sunrise and sunset, blossoming of flowers and singing of birds are the learning resources for children possessing the natural gift of learning things very easily. He had a great faith in the children’s natural way of learning. He did not insist on forced mental feeding as a result of which lessons become a form of torture. Gurudev considered artificial feeding of the mind to be of man’s most cruel and wasteful mistakes. According to him, the greatest possible gift for children was their own freedom to grow. Tagore also wanted the children to have another kind of freedom – the freedom of sympathy with all humanity, a freedom from all national and racial prejudices. Thus, his philosophy of education is based on the ideal of the spiritual unity of all races." She had also said, " Rabindranath was always following the ideal to realize, in and through education, the essential unity of man. The way in which he achieved that unity gave him a deep insight into the object of education and its problems."
  2. Women and Social Change in India by Snehalata Panda - 1992 - Page 14
  3. "Freedom fighter who made State her home". dailypioneer.com. 2012. பார்க்கப்பட்ட நாள் 1 January 2013. She established the Bajiraut Chhatravas for the poor tribals, Utkal Navajeevan Mandal and the Postbasic School at Champatimunda near Angul
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாலதி_சௌத்ரி&oldid=3480935" இலிருந்து மீள்விக்கப்பட்டது