மாலகண்ட் மாவட்டம்
மாலகண்ட் மாவட்டம்
| |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் மாலகண்ட் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
நாடு | பாகிஸ்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
கோட்டம் | மாலகண்ட் |
தலைமையிடம் | பேட்கேலா |
அரசு | |
• வகை | மாவட்டம் |
பரப்பளவு | |
• மாவட்டம் | 952 km2 (368 sq mi) |
மக்கள்தொகை (2017)[1] | |
• மாவட்டம் | 7,17,806 |
• அடர்த்தி | 750/km2 (2,000/sq mi) |
• நகர்ப்புறம் | 67,686 |
• நாட்டுப்புறம் | 6,50,120 |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
தாலுகாக்கள் | 2 |
முக்கிய மொழி | பஷ்தூ மொழி (98.2%)[2] |
இணையதளம் | malakand |
மாலகண்ட் மாவட்டம் (Malakand District), பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் பேட்கேலா நகரம் ஆகும். மலைகள் சூழ்ந்த இம்மாவட்டத்தில் சுவாத் ஆறு பாய்கிறது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் தர்கை மற்றும் பேட்கேலா எனும் 2 தாலுகாக்களைக் கொண்டது.
நாடாளுமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மாவட்டம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திற்கு ஒரு உறுப்பினரை தேர்வு செய்கிறது.[3]
மாகாணச் சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]இம்மாவட்ட்ம் மாகாணச் சட்டமன்றத்திற்கு இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்கிறது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மாலகண்ட் மாவட்ட மக்கள் தொகை 7,17,806 ஆகும். அதில் ஆண்கள் 3,60,440 மற்றும் பெண்கள் 3,57,333 ஆக உள்ளனர். இம்மாவட்ட மக்களில் 90.57% விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். எழுத்தறிவு 61.83% ஆக உள்ளது. பஷ்தூ மொழி 98.38% விழுக்காட்டினர் பேசுகின்றனர். சிறுபான்மை சமயத்தவர்கள் 471 பேர் உள்ளனர்.[1]
மேற்கோளகள்
[தொகு]- ↑ 1.0 1.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
- ↑ 1998 District Census report of Malakand. Census publication. Vol. 76. Islamabad: Population Census Organization, Statistics Division, Government of Pakistan. 2000. p. 27.
- ↑ "Election Commission of Pakistan". Archived from the original on 2015-11-10. பார்க்கப்பட்ட நாள் 2015-11-06.
வெளி இணைப்புகள்
[தொகு]- Khyber.org website: Malakand பரணிடப்பட்டது 2017-11-22 at the வந்தவழி இயந்திரம்