மாறும் புவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மாறும் புவி:

   புவி தோன்றியதிலிருந்து பலவித மாறுதல்களை அடைந்து வந்திருக்கிறது.புவி உருவான முதல் நூறு கோடி ஆண்டுகள் எப்படி இருந்தது என்று தெரியவில்லை.பலவகை ஊகங்கள் இதைப்பற்றி உள்ளன.முதலில் உருகிய பாகுபோல் இருந்திருக்க வேண்டும்.புவி இருகிகொண்டிருந்த காலக்கட்டத்தில் ஏராளமான வெப்பத்தை வெளியிட்டு கொண்டிருந்தது.ஏராளமான கதிரியக்கப் பொருள்களும் விண்ணெரி கற்கள் இடைவிடாத தாக்குதல்களும் அன்றைய வெப்பத்திற்குச் சில காரணங்கள்.எப்படியோ 370 கோடி ஆண்டுகளுக்கு முன்பு புவியின் மேற்தோடு உருவாயிற்று.370 கோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த பாறைகள் இயல்மாறு பாறைகள் .புவியின் பரப்பில் நீர் இருந்ததற்கான அறிகுறிகள் இந்த பாறைகளில் இருந்தது.மேலும் அன்றைய வளிக்கோளத்தில் கரியமிலவாயு,தண்ணீர்,ஆவி,அம்மோனியா,மீதேன் ஆகியவைகள் அடங்கி இருந்திருக்கலாம் என்று கருதுகிறார்கள்.பிறகு பல ஆண்டுகளுக்கு பின் பாக்டீரியாவும் ஒரு செல் ஆல்கேயும் தோன்றின.பல வித மாறுதல்கள் தொடர்ந்து ஏற்பட்டு வந்தது.அதே சமயம் வளிக்கோளத்திலும் மாறுதல்கள் ஏற்பட்டன.
  கரியமில வாயுவும்,தண்ணீர் ஆவியும் சூரியனிலிருந்து வரும் கதிரியக்கக் கதிர்களைக் கவர்ந்து வெப்பத்தை அதிகபடுத்த ஆரம்பித்தன.அப்போது வளிக்கோலத்தில் மிகக் குறைந்த அளவு இருந்த ஆக்சிஜன்,புற ஊதாக்கதிர்கள் புவியை தாக்காமல் தடுத்தது.
  60 கோடி ஆண்டுகளுக்கு முன்பு எளிய உயிரினங்கள் தோன்ற ஆரம்பித்தன.மாண்டிலின்மேல் கண்டங்கள் மெதுவாக நகர ஆரம்பித்தன.கடல் பரப்பிலும் நிலப்பரப்பிலும் பல மாறுதல்கள் ஏற்பட்டன.இதே சமயத்தில் 40 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தாவரங்களும் பல உறுமலர்சியை பெற்றன.எரிமலையின் சீற்றம் பல மாறுதல்களை உண்டாக்கத் தொடங்கியது.கடல்கள் நிலப்பரப்பை ஆக்கிரமிக்கத் தொடங்கின.பல ஏரிகளையும் சதுப்பு நிலங்களையும் உருவாக்கின. வடகோளத்தில் ஓங்கி வளர்ந்த மரங்கள் நிறைந்த பெருங்க காடுகள் ஊர்வனவும் நீர்,நிலம்,வாழுயிரினமும் இக்காடுகளச் சுற்றி வளம் வந்துக் கொண்டிருந்தன.இந்த காலக் கட்டத்தை கார்பானிபெரெஸ் காலம் என்பர்.இதன் முடிவில் புவி எங்கும் குறிப்பாக தென்கோளத்தில் பனிப் படர்ச்சி ஆரம்பித்தது.இந்த பனிப்படர்ச்சி இந்த காலக்கட்டத்திற்கு அடுத்து அந்த பெர்மியன் காலத்திலும் தொடர்ந்தது.
  பனிப் படர்சியின் காரணமாக கடல் மட்டத்தில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டன.இந்த காலக் கட்டத்தில் சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முன் கண்டங்கள் இடப்பெயர்வு பெற்று ஒரு பெருங்கன்டமாக உருவாயிற்று. 
                                                                                                                                          
  18 முதல் 20 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பாங்கேயா கண்டம் பிரிய ஆரம்பித்தது. மீண்டும் கண்டங்கள் இடம்பெயர ஆரம்பித்தன.முதலில் கோண்ட்வானா பகுதியிலிருந்து தென் அமெரிக்கா பிரிந்து மேற்கு நோக்கி நகர ஆரம்பித்தது.இதன் விளைவாகத் தென் அட்லாண்டிக் மாக்கடல் உருவாகியது.பின்னர் இந்திய தனது நெடும்பயணத்தை ஆரம்பித்தது.வடக்கு திக்கில் நகர ஆரம்பித்தது.15 கோடி ஆண்டுகள் பயணம்செய்து முடிவில் ஆசிய கண்டத்துடன் வந்து ஒட்டிக்கொண்டுவிட்டது.இது சேர்ந்த இடத்தில இமயமலைத் தொடர் தலை தூக்கியது.
 புவி இரு பெரும் பிரிவுகளாக உள்ளது.நீர்ப் பரப்பு நிலப் பரப்பு என்பன அப்பிரிவுகள். இதில் நீர்ப்பரப்பு  சதவீதம்,நிலப்பரப்பு   சதவீதம்.

புவியியல் படி நிலபரப்பு ஏழு கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.அவை

 1.ஆசியா 
 2.ஆப்ரிக்கா 
 3.வட அமெரிக்கா 
 4.தென் அமெரிக்கா
 5.அண்டார்டிகா 
 6.ஐரோப்பா 
 7.ஓஷினியா ;ஆஸ்திரேலியா . என்பன ஆகும்.

பார்வை நூல் :புவி காற்று தண்ணீர் =என் .ஸ்ரீனிவாசன் =வித்யா பதிப்பகம்,சென்னை                                                 க்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாறும்_புவி&oldid=2379249" இருந்து மீள்விக்கப்பட்டது