மாறுநிலை மாக் எண்

காற்றியக்கவியலில் மாறுநிலை மாக் எண் (Critical Mach number) என்பது வானூர்தியைச் சுற்றி ஏதேனும் ஓர் இடத்தில் பாய்வின் திசைவேகம் ஒலியின் விரைவை எட்டும்போது வானூர்தியின் திசைவேகம் (மாக் எண்ணில்) ஆகும்.[1]
இதன் பண்புகள், விளைவுகள்:
- இழுவைக் குணகம் திடீரென அதிகரிக்கிறது, அதனால் வானூர்தி மீதான இழுவை அதிகளவு அதிகரிக்கிறது.[2]
- ஒலியொத்தவேகம் மற்றும் மீயொலிவேகத்தில் பறப்பதற்காக வடிவமைக்கப்படாத வானூர்திகளில், கட்டுப்பாட்டு அமைப்புகள் மீதான பாய்வுகளின் பண்புமாற்றம் வானூர்தியின் ஒட்டுமொத்த கட்டுப்பாட்டைப் பெருமளவு பாதிக்கிறது.[2]
குறிப்புதவிகள்[தொகு]
- Clancy, L.J. (1975) Aerodynamics, Pitman Publishing Limited, London ISBN 0-273-01120-0