மார்ஸ் ஒன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


மார்ஸ் ஒன் (Mars One) இது டச் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தொழில் அதிபர் பாஸ் லேன்ஸ்டார்ப் என்பவரால் துவங்கப்பட்டுள்ள திட்டம் ஆகும். அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகமான நாசா செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என அறிவித்ததன் விளைவாக இவரின் திட்டம் அமைந்துள்ளது.

திட்டம்[தொகு]

தற்காலிக குடியிருப்பைச் செவ்வாய் கிரகத்தில் ஏற்படுத்தி மக்களை அங்கு குடியேற்றுவதுதான் அவரின் திட்டத்தின் நோக்கம் ஆகும். 2012 மே மாதம் இத்திட்டம் வகுக்கப்பட்டது[1]. 2023ம் ஆண்டு இங்கிருந்து 4 பேர் 60 குழுக்களாக அனுப்பப்படுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பம்[தொகு]

மார்ஸ் ஒன் திட்டத்திற்காக அவர் கணினி மூலம் முன்பதிவு செய்ய அறிவித்திருந்தார். இதன் மூலம் அமெரிக்கர்கள் மட்டும் 48 ஆயிரம் பேரும், இந்தியர்கள் 20 ஆயிரம் பேரும் 2015 ம் ஆண்டு செல்ல விண்ணப்பித்திருந்தார்கள். ஆக மொத்தமாக 2 லட்சம் பேர் அடங்குவர்.

குடியிருப்பு[தொகு]

செவ்வாய் கிரகத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகளில் முதல் கட்டமாக 2500 கிகி எடை கொண்ட உதிரிப்பாகங்கள் 2016ம் ஆண்டுகளில் கொண்டு சேர்க்கப்படும் என அறிவித்தார்[2]. இது பல்நோக்கு குழு வாகனம் மூலம் கொண்டு சேர்க்கப்படும். 2016 அக்டோபரில் ஏவு வாகனம் ஏவப்படும். அதனை நேரடி ஒளிபரப்பாக தொலைக்கட்சியில் 365 நாளும் எல்லா வாரங்களிலும், 24 மணிநேரமும் ஒளிபரப்பப்படும் என அறிவித்தார்.

சாத்தியக் கூறுகள்[தொகு]

வாஷிங்டனில் அமைந்துள்ள அமெரிக்காவின் நாசா இதனைத் திட்டவட்டமாக மறுக்கிறது. செவ்வாய் கிரகத்தில் மனிதர் வாழும் சூழல் உள்ளதா என்பது பற்றிய முடிவு இன்னமும் எட்டப்படாத போது இது சாத்தியமில்லை என்று நாசா கூறியுள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "About". Mars One. பார்த்த நாள் 2013-08-06.
  2. "Road map". Mars One. பார்த்த நாள் 2013-08-06.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ஸ்_ஒன்&oldid=2756188" இருந்து மீள்விக்கப்பட்டது