மார்ஸ் எக்ஸ்பிரஸ்
கணினி வரைகலை மூலம் உருவாக்கப்பட்ட மார்ஸ் எக்ஸ்பிரஸ் | |
திட்ட வகை | செவ்வாய் கோளை சுற்றுவது |
---|---|
இயக்குபவர் | ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் |
காஸ்பார் குறியீடு | 2003-022A |
இணையதளம் | mars |
திட்டக் காலம் | சுமார்: அனுப்பப்பட்டு21 ஆண்டுகள், 4 மாதங்கள், 13 நாட்கள் செவ்வாயில்20 ஆண்டுகள், 9 மாதங்கள், 20 நாட்கள் /small> |
விண்கலத்தின் பண்புகள் | |
ஏவல் திணிவு | 1,123 கிலோகிராம்கள் (2,476 lb) |
உலர் நிறை | 666 கிலோகிராம்கள் (1,468 lb) |
திறன் | 460 வாட் |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | 2 சூன் 2003, 17:45:26 UTC |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
Reference system | Areocentric |
வட்டவிலகல் | 0.943 |
அண்மை | 298 கிலோமீட்டர்கள் (185 mi) |
கவர்ச்சி | 10,107 கிலோமீட்டர்கள் (6,280 mi) |
சாய்வு | 86.3 பாகை |
சுற்றுக்காலம் | 7.5 மணிநேரம் |
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் சார்பாக செவ்வாய் கோளை ஆராய அனுப்பப்பட்ட விண்கலமே மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஆகும்.
உருவாக்கம்
[தொகு]இங்கிலாந்து,செருமனி உட்பட பல ஐரோப்பிய நாடுகளின் பங்களிப்போடு , ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமான இ.எஸ்.ஓ.சி-யால் மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் உருவானது.ஆறு கோடியே இருபது லட்சம் அமெரிக்க டாலரினால் இது தயாரிக்கப்பட்டது.2003-ம் ஆண்டு சூன் இரண்டு அன்று மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலம் அனுப்பப்பட்டது.ஸ்டார் செம் என்னும் ராக்கெட் இதனை தூக்கி சென்றது.ஆறு மாத பயணத்திற்குப் பின் திசம்பர் 25-ஆம் திகதி செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்ட பாதையில் நூழைந்தது மார்ஸ் எக்ஸ்பிரஸ்.
பீகிள்-2
[தொகு]மார்ஸ் எக்ஸ்பிரஸுடன் வின்ஞானிகள் பீகிள் என்ற ரோபோவையும் அனுப்பி வைத்தார்கள்.இது ஒரு மீட்டர் உயரம் உள்ள ரோபோவாகும்.இதை வடிவமைத்தவர் இங்கிலாந்தை சேர்ந்த காலின் பிலிஜ்ஜர் ஆவார்.பீகில்-2 பத்திரமாக பாராசூட் உதவியுடன் தரை இரக்கப்பட்டது.ஆனால் அது எலக்ரானிக் பாகங்களில் ஏற்பட்ட கோளாரினால் அது செயலிழந்து.
சாதனை
[தொகு]ரோபோ செயலிழந்தாலும் மார்ஸ் எக்ஸ்பிரஸ் ஒன்பது ஆண்டுகளாக செவ்வாயை ஆராய்ந்து வருகிறது.செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தில் பனிப்பிரதேசம் இருப்பதற்கான அறிகுறிகளை 2004 சனவரியில் கண்டுபிடித்தது.அதில் 87 சதவிகிதம் கார்பன்-டை-ஆக்சைடும்,13 சதவிகிதம் பனியும் இருப்பது தெரியவந்துள்ளது.மீத்தேன்,அம்மோனியா போன்ற வாயுக்கள் அங்கு இருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]தினத்தந்தி சிறுவர் மலர் 27-9-2013 இதழ்