மார்வி சர்மெட்
மார்வி சர்மெட் | |
|---|---|
| பிறப்பு | ماروی سرمد 11 சூன் 1970 சியால்கோட், பாக்கித்தான் |
| பணி | பத்திரிக்கையாளர், மனித உரிமை ஆர்வலர் |
| வாழ்க்கைத் துணை | சர்மெட் மன்சூர்[1] |
மார்வி சர்மெட் (Marvi Sirmed) பாக்கித்தானைச் சேர்ந்த அரசியல் வர்ணனையாளரும், பத்திரிகையாளரும் மற்றும் மனித உரிமை ஆர்வலரும் ஆவார். மேலும் இவர் ஒரு சமூக மக்களாட்சியாளராக அறியப்படுகிறார்.[2]
ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி
[தொகு]மார்வி சர்மெட் பாக்கித்தானின் பஞ்சாபில் உள்ள சியால்கோட்டில் 11 ஜூன் 1970 அன்று பிறந்தார்.[3] இவரின் தந்தைவழி குடும்பம் பாவல்பூரைச் சேர்ந்த விவசாயிக் குடும்பம்.[4] இவரின் தந்தை சௌத்ரி அன்வர் உல் அக் 2003 வரை பஞ்சாப் மக்கள் தொடர்பு அலுவக்த்தின் இயக்குநராக இருந்தார். தனது குழந்தைப் பருவத்தில் பெண்களுக்கான போராட்டங்களில் தனது தாயுடன் சென்றார்.[5]
கற்பித்தல் மற்றும் பத்திரிகைத் தொழிலில் நுழைவதற்கு முன்பு மார்வி ஒரு அறிவியல் மாணவியாக இருந்தார்.[4] இவர் முன்மருத்துவ மாணவராக இருந்தார், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் கல்வியில் முதுகலைப் பட்டம் பெற்றார். இலாகூரில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியராக பணிபுரிந்தார்.[3][4]
தொழில் வாழ்க்கை
[தொகு]மார்வி சர்மெட் ஒரு சமூக மக்களாட்சியாளராக அறியப்படுகிறார்.[6] பாக்கித்தானில் மதச்சார்பற்ற அரசியல் மற்றும் சிறுபான்மை உரிமைகளுக்காக வாதிடுகிறார். இவர் மேம்பட்ட குடும்ப வன்முறைச் சட்டம்[7][8] மற்றும் அரசாங்கத்தின் சமயச் சார்பின்மைக்காக வாதிடுகிறார்.[9]
1990 களில், தனது பத்திரிகை நடவடிக்கைகளுடன் தன்னார்வத் தொண்டு நிறுவன நடவடிக்கைகளிலும் ஈடுபடத் தொடங்கினார்.[4][6] 2004 ஆம் ஆண்டில் இவர் பாக்கித்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் வளர்ச்சித் திட்டத்தில் பணிபுரிந்த அதே நேரத்தில் பெண்களின் நிலை குறித்த தேசிய ஆணையம், பெண்கள் மேம்பாட்டுக்கான மத்திய அமைச்சகம் மற்றும் பாக்கிததான் நாடாளுமன்றத்திலும் பணியாற்றினார்.
மார்வி , 2010 இல் பாக்கித்தான் அரசாங்கத்தின் தேசிய மனித உரிமைகள் விருதையும், 2012 இல் நாடாளுமன்றத்தின் நண்பர் விருதையும் பெற்றார்.[10] பாக்கித்தான் மனித உரிமைகள் ஆணையத்தின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராக இருந்த இவர், அனைவருக்கும் பைட்ஸ் என்ற குழுவின் தலைவராகவும் பணியாற்றுகிறார்.[10] மார்வி ஜனநாயகத்திற்கான தேசிய அறக்கட்டளையின் உறுப்பினராக உள்ளார்.[10] 2016 முதல் சுதந்திரமாகப் பணியாற்றும் பத்திரிகையாளராக இருந்து வருகிறார்.[3]
எதிர்வினைகள்
[தொகு]மனித உரிமைகள் மற்றும் மதச்சார்பற்ற ஜனநாயகத்திற்கான வெளிப்படையான வழக்கறிஞராக, மார்வி பழமைவாதிகளிடையே சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். நவம்பர் 2007 இல் அப்போதைய இராணுவ சர்வாதிகாரி பெர்வேஸ் முஷாரஃப் பாக்கித்தானில் அறிவித்த அவசரநிலையை எதிர்த்து இவர் கைது செய்யப்பட்டார்.[6]
பாக்கித்தானில் உள்ள அமெரிக்கத் தூதரகம் எல்ஜிபிடி மக்களை ஒரு நிகழ்வுக்கு அழைத்தபோது, அவர்களின் முடிவை ஆதரித்த மார்வி யூடியூப்பில் தாக்குதல்களை சந்தித்தார்.[11] யூடியூபில் ஒளிபரப்பப்பட்ட மற்றொரு தொலைக்காட்சி விவாதத்தில், செர்மெட் மீண்டும் எல்ஜிபிடி உரிமைகளைப் பாதுகாப்பதற்காகப் பேசினார். இதனால் இவருக்கு கொலை மிரட்டல் மற்றும் பாலியல் வன்முறை ஆகிய இரண்டையும் எதிர் கொண்டார்.[11]
தாக்குதல்கள்
[தொகு]2012 லும் மற்றும் 2018 லும், இவர் அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுடப்பட்டார். ஆனால் காயமின்றி தப்பினார்.[1][12][13] இவரது வீடு மூன்று முறை வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டுள்ளது. கடவுச்சீட்டு மற்றும் ஆவணங்கள் களவாடப்பட்டன.[14][15][16]
சொந்த வாழ்க்கை
[தொகு]மார்வி பத்திரிகையாளர் சிர்மெட் மன்சூரை மணந்தார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Journalist couple shot at in Pakistan, both unhurt". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 2 November 2012 இம் மூலத்தில் இருந்து 23 May 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130523092551/http://www.hindustantimes.com/world-news/Pakistan/Journalist-couple-shot-at-in-Pakistan-both-unhurt/Article1-954047.aspx.
- ↑ "Marvi Sirmed". Pride of Pakistan. Retrieved 2020-03-16.
- ↑ 3.0 3.1 3.2 "'Hijab is Still a Shit' Marvi Sirmed". Next TV (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-03-09. Retrieved 2020-03-16.
- ↑ 4.0 4.1 4.2 4.3 admin (2020-03-05). "Shocking History You Don't Know About Marvi Sirmed". Reviewit.pk (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-03-16.
- ↑ "Marvi Sirmed Reflects on Future of Pakistan @TAG TV". TAG TV (in ஆங்கிலம்). Retrieved 2020-03-16.
- ↑ 6.0 6.1 6.2 "Marvi Sirmed". Pakistan Herald. Retrieved 2020-03-16.
- ↑ "Time to pass the domestic violence bill – The Express Tribune" (in en-US). The Express Tribune. 12 April 2012. https://tribune.com.pk/story/363696/time-to-pass-the-domestic-violence-bill/.
- ↑ "Beating up women still not a crime". www.thenews.com.pk (in ஆங்கிலம்). Retrieved 1 November 2017.
- ↑ "Secularism, 'patriotism' and Marvi Sirmed" (in en-US). https://blogs.tribune.com.pk/story/8027/secularism-patriotism-and-marvi-sirmed/.
- ↑ 10.0 10.1 10.2 "Marvi Sirmed – NATIONAL ENDOWMENT FOR DEMOCRACY". www.ned.org. Retrieved 2020-03-16.
- ↑ 11.0 11.1 Chris, Cynthia; Gerstner, David A. (2013-02-15). Media Authorship (in ஆங்கிலம்). Routledge. ISBN 978-1-136-48571-8.
- ↑ "Well-known Pakistani journalist Marvi Sirmed shot at". 2 November 2012. http://www.ndtv.com/article/world/well-known-pakistani-journalist-marvi-sirmed-shot-at-287824.
- ↑ "Columnist Marvi Sarmad escapes attempt on life". https://www.thenews.com.pk/archive/print/626255-columnist-marvi-sarmad-escapes-attempt-on-life.
- ↑ "Journalist Marvi Sirmed's home ransacked; electronic devices, travel documents stolen". DAWN.COM. 22 June 2018. https://www.dawn.com/news/1415427/journalist-marvi-sirmeds-home-ransacked-electronic-devices-travel-documents-stolen.
- ↑ "SAMC seeks probe into 'robbery' - The Express Tribune". The Express Tribune. 10 October 2010. https://tribune.com.pk/story/60717/samc-seeks-probe-into-robbery/.
- ↑ "Robbery at journalist's home condemned". DAWN.COM. 10 October 2010. https://www.dawn.com/news/570169.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official website at the வந்தவழி இயந்திரம் (பரணிடப்பட்டது ஏப்ரல் 27, 2021)