மார்லே முக்கோணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மார்லே முக்கோணம்[தொகு]

1899 ஆம் ஆண்டில் பிராங்க் மார்லே(Frank Morley) என்ற கணித அறிஞர்,அழகு பொருந்திய ஒரு வடிவியல் கருத்தை வழங்கி, கணித உலகையே வியப்பில் ஆழ்த்தினார்.முக்கோணத்தைப் பற்றிய அந்த முடிவு 'மார்லே அற்புதம்' (Morley's Miracle) என வடிவியலில் போற்றப்படுகிறது. தளத்தில் அமைந்த ஒரு முக்கோணத்தில் மூன்று பக்கங்களும், மூன்று கோணங்களும் இருக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த மூன்று கோணங்களை,மூன்று சம பிரிவுகளாகப் பிரிக்கும் கோடுகளைக் கருதிக் கொள்ளவும்.இந்தக் கோடுகளுக்கு முச்சமவெட்டிகள்(Angle Trisectors) என்று பெயர். இந்த முச்சமவெட்டிகள் சந்திக்கும் புள்ளிகளை இணைத்தால் முக்கோணத்தின் உட்புறத்தில் ஓர் அழகிய சமபக்க முக்கோணம் (Equivaleral Triangle) உருவாகும். முக்கோணம் எந்த வடிவில் இருந்தாலும், இந்தப் பண்பு பொருந்தும்.இதனாலேயே கணித அறிஞர்கள் இந்தப் பண்பிற்கு 'மார்லே அற்புதம்' எனப் பெயரிட்டனர்.

மேற்கோள்[தொகு]

மார்லே முக்கோணம் சார்ந்த கூடுதல் தகவல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்லே_முக்கோணம்&oldid=2387292" இருந்து மீள்விக்கப்பட்டது