மார்ரீ பள்ளிவாசல்

ஆள்கூறுகள்: 29°39′05″S 138°03′47″E / 29.651346°S 138.063082°E / -29.651346; 138.063082
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ரீ பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம் ஆத்திரேலியா
சமயம்இசுலாம்
மண்டலம்ஆஸ்திரேலியா
மாநிலம்தெற்கு ஆஸ்திரேலியா
மாவட்டம்ஸ்டூவார்ட்
மாநகராட்சிமார்ரீ
நிலைசெயல்பாடில் உள்ளது.

மார்ரீ பள்ளிவாசல் (Marree Mosque) ஆஸ்திரேலியா நாட்டின் தெற்கு ஆஸ்திரேலியா மாநிலத்தில் ஸ்டூவார்ட் மாவட்டத்தில் மார்ரீ நகரில் உள்ள பள்ளிவாசல் ஆகும். இப்பள்ளிவாசல் கி.பி.1882 இல் கட்டப்பட்டது.[1]. இப்பள்ளிவாசல் ஆஸ்திரேலியா நாட்டின் பழமையான பள்ளிவாசல் ஆகு‌ம்.

வரலாறு[தொகு]

1884 இல் பள்ளிவாசலுக்கு வெளியே உளூ செய்ய கட்டப்பட்ட ஹவுஸ்

இப்பள்ளிவாசல் ஆஸ்திரேலியா நாட்டிற்கு குடியேறிய ஆப்கானியர்களால் கட்டப்பட்டது.[2] இந்த ஆப்கானியர்கள் சுதந்திரத்திற்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான் நாட்டிலிருந்து குடியேறிய இசுலாமியர்கள் ஆவர்.இந்த பிராந்தியத்தில் அவர்கள் ஒட்டகம் ஓட்டுநர்களாக பணியாற்றினர்.[3] சுமார் 3000 பேர் 1930 இல் பெட்ரோலிய வாகனங்கள் வரும்வரை இவ்வாறான பணிகள் செய்தனர்.[2][3]

இப்பள்ளிவாசல் ஒட்டக வளர்ப்பு தொழில் செய்தவரான அப்துல் காதிர் என்பவரால் கட்டப்பட்டது.[4] முல்லா ஆசிம் என்பவர் இப்பள்ளிவாசலில் 20-ஆம் நூற்றாண்டு ஆரம்ப கால இமாம் ஆவார். [5]

2003 இல் இப்பள்ளிவாசல் புதுப்பிக்க பட்டது.[2]


மேற்கோள்கள்[தொகு]

  1. Australia. Parliament. Senate. Parliamentary debates (Hansard).: Senate. Commomwealth Govt. Printer. https://books.google.com/books?id=-8NDAQAAIAAJ. பார்த்த நாள்: 9 September 2012. 
  2. 2.0 2.1 2.2 Leonore Loeb Adler; Uwe Peter Gielen (2003). Migration: Immigration and Emigration in International Perspective. Greenwood Publishing Group. பக். 278–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-275-97666-8. https://books.google.com/books?id=Yw-_K6ek5IUC&pg=PA278. பார்த்த நாள்: 9 September 2012. 
  3. 3.0 3.1 Adler, L. L. & Gielen, U. P.. Migration: Immigration and Emigration in International Perspective. Greenwood Publishing Group.. https://books.google.com/books/about/Migration.html?id=Yw-_K6ek5IUC. பார்த்த நாள்: 15 March 2015. 
  4. Pip Wilson (30 October 2006). Faces in the Street. Lulu.com. பக். 546–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4303-0021-2. https://books.google.com/books?id=NcO7t8G-yQ8C&pg=PA546. பார்த்த நாள்: 9 September 2012. 
  5. Philip Jones; Anna Kenny (1 February 2010). Australia's Muslim Cameleers: Pioneers of the Inland, 1860s-1930s. Wakefield Press. பக். 124–. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-86254-872-5. https://books.google.com/books?id=6p-V7d-eLE0C&pg=PA124. பார்த்த நாள்: 9 September 2012. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ரீ_பள்ளிவாசல்&oldid=3925556" இலிருந்து மீள்விக்கப்பட்டது