உள்ளடக்கத்துக்குச் செல்

மார்பகப் புற்றுநோய் இயக்குநீர் காரணிகள் கூட்டுக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்பகப் புற்றுநோய் இயக்குநீர் காரணிகள் கூட்டுக்குழு (Collaborative Group on Hormonal Factors in Breast Cancer) என்பது பெண்களிடம் ஏற்படும் மார்பகப் புற்றுநோய்க்கான ஆபத்து காரணிகள் தொடர்பான உலகளாவிய தொற்றுநோயியல் ஆதாரங்களை மெட்டா-பகுப்பாய்வு எனப்படும் மேம்பட்ட ஆராய்ச்சியைச் செய்யும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் குழுவாகும். இக்குழு 1992 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.[1]

இந்தக் குழுவின் ஆரம்பகால வெளியீடுகளில், இயக்குநீர் அடிப்படையிலான கருத்தடை முறைகள் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆபத்து குறித்து 54 ஆய்வுகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட 1996 ஆம் ஆண்டின் மெட்டா-பகுப்பாய்வும்,[2] மாதவிடாய் நிறைவு கால இயக்குநீர் சிகிச்சை மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆபத்து குறித்து 51 ஆய்வுகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளப்பட்ட 1997 ஆம் ஆண்டின் மெட்டா-பகுப்பாய்வும் அடங்கும்..[3] இந்தக் குழுவின் சமீபத்திய வெளியீடுகளில் ஒன்றாக, 2019 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட, மாதவிடாய் நிறைவு கால இயக்குநீர் சிகிச்சையின் வகை மற்றும் அதை பயன்படுத்திய காலத்தை அடிப்படையாகக் கொண்டு மார்பகப் புற்றுநோய் ஆபத்தை மதிப்பிட்ட மெட்டா-பகுப்பாய்வு உள்ளது. மேலும், 2012 ஆம் ஆண்டில் 117 ஆய்வுகளை உள்ளடக்கிய ஒரு மெட்டா-பகுப்பாய்வின் மூலம், பெண்களுக்கு முதல் மாதவிடாய் ஏற்படும் வயது ஒவ்வோர் ஆண்டும் குறைவாக இருப்பதும், மாதவிடாய் நிறைவு ஏற்படும் வயது ஒவ்வோர் ஆண்டும் அதிகமாக இருப்பதும், மார்பகப் புற்றுநோயின் நிகழ்தகவை அதிகரிக்கச் செய்கின்றன என்று அந்தக் குழு முடிவு செய்தது.

முக்கியப் பணிகள்

[தொகு]

மார்பகப் புற்றுநோய்க்கான இயக்குநீர் சார்ந்த ஆபத்து காரணிகளை ஆய்வு செய்தல், உலகளாவிய ஆய்வுகளின் முடிவுகளை ஒருங்கிணைத்து பகுப்பாய்வு செய்தல், மருத்துவர்கள் மற்றும் பொதுச் சுகாதாரக் கொள்கை வடிவமைப்பாளர்களுக்கு அறிவியல் ஆதாரங்களை வழங்குதல், பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் மார்பகப் புற்றுநோய் தடுப்பு தொடர்பான அறிவை மேம்படுத்துதல் ஆகியவை இக்குழுவின் முக்கியப் பணிகளாகும்.

மேற்கோள்கள்

[தொகு]