உள்ளடக்கத்துக்குச் செல்

மார்தே வோகேலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்தே வோகேலி
Marthe Voegeli MD
கல்விஎம். டி., பாரிசு பல்கலைக்கழகம் பெர்லின் பல்கலைக்கழகம், முதுநிலை பட்டம் கொலம்பியா பல்கலைக்கழகம்
செயற்பாட்டுக்
காலம்
1921–1950
அறியப்படுவதுவெப்பம் சார்ந்த ஆண் கருத்தடை
மருத்துவப் பணிவாழ்வு
தொழில்மருத்துவர், மருத்துவ ஆராய்ச்சியாளர்

மார்தே வோகேலி (Marthe Voegeli) என்பவர் சுவிட்சர்லாந்து நாட்டினைச் சார்ந்த மருத்துவர். இவர் ஆண்களுக்கான கருத்தடை ஆராய்ச்சி துறையில் முன்னோடியாக இருந்தார்.

1930 மற்றும் 1950 க்குஇடையில், வோகேலி இந்தியாவில் தனது சொந்த மருத்துவமனையில் மருத்துவம் பார்த்து வந்தார். இந்த நேரத்தில், 9 தன்னார்வலர்கள் உதவியுடன், வெப்ப அடிப்படையிலான கருத்தடை செயல்முறையினை பரிசோதித்தார்.[1]

இந்த செயல்முறை எளிமையாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. இந்த சோதனையில் ஆண் ஒருவர் தனது விதைப்பையினை சூடான நீரில் 45 நிமிடங்களுக்கு அமிழ்த்தி வைத்திருப்பார். இதனை 3 வாரங்களுக்கு தொடர்ந்து செய்துவருவார். சோதனை முடிவில் கருவுறாமைக்கான காலம் பதிவு செய்யப்பட்டது.

வெவ்வேறு வெப்பநிலைகளில் சோதனை செய்யப்பட்டு மலட்டுத்தன்மையின் மாறுபட்ட முடிவுகள் அளவிடப்பட்டன. 116°F (46.7°C) வெப்ப நிலையில் 6 மாதங்களுக்குக் கருத்தடை பாதுகாப்பு கிடைத்தது. ஆனால் 110°F (43.3°C) வெப்பநிலையில் 4 மாதங்களுக்குக் கருத்தடை பலன் கிடைத்தது.

ஆண்களில் கருவுறுதல் திரும்பிய பிறகு, இயல்பான குழந்தைப் பருவ வளர்ச்சியுடன் ஆரோக்கியமான குழந்தைகளைக் கருவுறுதல் பதிவு செய்யப்பட்டது. [2]

வோகேலி 1950ல் மருத்துவத்திலிருந்து ஓய்வு பெற்றார், அடுத்த 20 ஆண்டுகளாக இம்முறையினை மக்களிடையே கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டார். இருப்பினும் இம்முறை பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்தே_வோகேலி&oldid=3112762" இலிருந்து மீள்விக்கப்பட்டது