மார்தா சேஸ்
பிறப்பு | கிளீவ்லேன்ட் ஒஹியோ, ஐக்கிய அமெரிக்கா | நவம்பர் 30, 1927
---|---|
இறப்பு | 2003 ஆகஸ்ட் 8 லொரின் ஓஹியோ,அமெரிக்கா Lorain, Ohio, USA |
வதிவு | ஐக்கிய அமெரிக்கா |
குடியுரிமை | அமெரிக்கன் |
தேசியம் | அமெரிக்கர் |
Alma mater | வூஸ்டர் கல்லூரி, தென் கலிபோர்னியா பல்கலைக்கழகம் |
துறை ஆலோசகர் | கியூசெப் பெர்டான், மார்கரட்லீப் |
அறியப்பட்டது | ஹெர்சே- சேஸ் பரிசோதனை |
மார்தா கோவ்ஸ் சேஸ் (நவம்பர் 30, 1927 - ஆகஸ்ட் 8, 2003) மார்தா சி. எப்ஸ்டீன் எனவும் அறியப்படுகின்றார்.[1] இவர் அமெரிக்காவைச் சேர்ந்த மரபியலாளர். 1952 இல் ஆல்பிரட் ஹெர்சே உடன் இணைந்து உயிரணுக்களின் மரபணுப்பொருள் புரதமல்ல, டி.என்.ஏ என்பதை நிரூபிக்க உதவினார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்லூரி கல்வி
[தொகு]சேஸ் 1927 ஆம் ஆண்டு கிளீவ்லேண்ட் ஓஹியோவில் பிறந்தார். இவரது சகோதரர் ரூத் சாஸ் (தற்போது ரூத் டாஸியல்) ஆவார். 1950 ஆம் ஆண்டு சேஸ் வூஸ்டர் கல்லூரியில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்பு 1959 இல் ஆராய்ச்சி உதவியாளராகப் பணி புரிந்தார். 1964 ஆம் ஆண்டு தென் கலிபோர்னியாப் பல்கலைக்கழகத்தில் நுண்ணுயிரியலில் முனைவர் பட்டம் பெற்றார்.[2][3]
ஆராய்ச்சி மற்றும் வாழ்க்கை
[தொகு]1950 ஆம் ஆண்டு நுண்ணுயிரியலாளரும் மரபியலாளருமான ஆல்பிரட் ஹெர்சேயின் கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வுக்கூடத்தில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணி புரிந்தார். 1952 ஆம் ஆண்டு ஹெர்சே-சேஸ் பரிசோதனையில் மரபணுத் தகவல்கள் புரதத்தினால் அல்ல டி.என்.ஏ வினால் பரவுகின்றன என்பதை உறுதிப்படுத்தினார். கதிரியக்க பாஸ்பரசு மூலம் பெயரிடப்பட்ட நியுக்கிளிக் அமிலம் அல்லது புரதம் ஏதாவது ஒன்று தயாரிக்கப்பட்டு பாக்டிரியாபேஜ் டி2 (பாக்டிரியாவைப் பாதிக்கும் வைரசு) எசுரிச்சியா கோலை பக்டிரியாவில் செலுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. இப்பரிசோதனை முடிவில் நியுக்கிளிக் அமிலங்கள் பரவியதையடுத்து மரபணு தகவல்கள் டி.என்.ஏ வினால் பரவப்படுகின்றன என்பது உறுதிப்படுத்தப்பட்டது. ஹெர்சே-சேஸ் பரிசோதனையில் பாரம்பரியத் தகவல்கள் குறித்த சர்ச்சைகள் முடிவுக்கு வந்தன. ஹெர்சே 1969 இல் மருத்துவம் அல்லது [[உடலியல்|உடலியல்லுக்கான நோபல் பரிசை வென்றார். இப்பரிசுக்கு மார்தா சேஸ் பெயர் சேர்க்கப்படவில்லை.[1]
1953 ஆம் ஆண்டு கோல்ட் ஸ்பிரிங் ஹார்பர் ஆய்வகத்தில் இருந்து விலகி டென்னசியில் ஓக் பிரிட்ஜ் தேசிய ஆய்வகத்தில் குஸ் டொரர்மேன் உடன் பணிபுரிந்தார். 1950 களில் அவர் பேஜ்குழு உயிரியியலாளர்களின் சந்திப்புக்களில் பங்கேற்க கொல்ட் ஸ்பிரிங் ஹார்பருக்கு ஆண்டுதோறும் திரும்பினார். 1959 இல் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கியூசெப் பெர்டானின் ஆய்வுகூடத்தில் ஆய்வுகளில் ஈடுபட்டார். 1964 இல் பெர்டானின் சுவீடனுக்கு குடிபெயர்ந்த பின் மார்கரட் லீப் உடன் தமது ஆய்வுகளை நிறைவு செய்தார்.[4]
1950களின் பிற்பகுதியில் கலிபோர்னியாவில் சக விஞ்ஞானி ரிச்சர்ட் எப்ஸ்டின் என்பவரை மணமுடித்து மார்தா சி. எப்ஸ்டின் என்று பெயரை மாற்றினார். இத்தம்பதியினர் குறுகிய காலத்தில் விவாகரத்து பெற்றனர்.[1] 1960களில் தனிப்பட்ட காரணங்களால் தனது விஞ்ஞானப் பணிகளை முடித்துக் கொண்டார். பின்பு ஒஹியோ சென்று குடும்பத்தினருடன் வாழ்ந்தார். 2003 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 இல் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு இறந்தார்.[2]
இதழ்கள்
[தொகு]- Hershey, A. D. and Martha Chase. "Independent Functions of Viral Protein and Nucleic Acid in Growth of Bacteriophage." J. Gen. Physiol., 36 (1): 39-56, September 20, 1952, at Oregon State University website
குறிப்புகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 http://www.the-scientist.com/news/20030820/03/ பரணிடப்பட்டது 2005-11-25 at the வந்தவழி இயந்திரம் the scientist பார்த்த நாள் 2010-09-05
- ↑ 2.0 2.1 https://www.nytimes.com/2003/08/13/us/martha-chase-75-a-researcher-who-aided-in-dna-experiment.html the new york times
- ↑ http://digitallibrary.usc.edu/cdm/ref/collection/p15799coll18/id/368326 digitallibrary.usc.edu 2018-03-12
- ↑ https://www.worldcat.org/oclc/42462623