உள்ளடக்கத்துக்குச் செல்

மார்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்தான் (ஆங்கிலம்: Mardan; உருது : مردان) என்பது பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள மார்தன் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமாகும்.[1] பெஷாவர் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள மர்தான் நகரமானது அருகிலுள்ள நகரமான பெஷாவருக்குப் பிறகு கைபர் பக்துன்க்வாவின் இரண்டாவது பெரிய நகரமாகும்.[2]

புவியியல்

[தொகு]

மர்தான் மாவட்டத்தின் தென்மேற்கில் 34 ° 12'0 வடக்கு 72 ° 1'60 கிழக்கு என்ற புவியியல் இருப்பிடத்தில் இந்நகரம் அமைந்திருக்கின்றது.[3] இது 283 மீட்டர் (928 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. மார்தான் கைபர் பக்துன்க்வாவின் மார்டன் மாவட்டத்தின் மாவட்ட தலைமையகம் ஆகும். இந்த நகரிற்கு தெற்கே ரிசல்பூர் நகரமும், மேற்கில் சர்சதா நகரமும், கிழக்கில் , யார் உசேன் நகரமும், வடக்கில் தக்த் பாஹி மற்றும் கட்லாங் ஆகிய நகரங்களும் அமைந்துள்ளன. இது கைபர் பக்துன்க்வாவில் 2 வது பெரிய நகரமாகவும்,[4] பாகிஸ்தானின் 19 வது பெரிய நகரமாகவும் திகழ்கின்றது.[5]

காலநிலை

[தொகு]

மார்தான் கோப்பனின் காலநிலை வகைப்பாட்டின் கீழ் சூடான அரை வறண்ட காலநிலையை (பி.எஸ்.எச் ) கொண்டுள்ளது. மர்தானில் சராசரி வெப்பநிலை 22.2 °C ஆகும். சராசரி ஆண்டு மழைவீழ்ச்சி 559 மி.மீ. ஆக பதிவாகின்றது. அக்டோபர் சராசரியாக 12 மி.மீ மழை வீழ்ச்சியைக் கொண்ட வறண்ட மாதமாகும். ஈரப்பதமான மாதம் ஆகத்து ஆகும். இம்மாதத்தில் , சராசரியாக 122 மி.மீ மழைவீழ்ச்சி பதிவாகின்றது. சூன் மாதம் வெப்பமான மாதமாகும். சூன் மாத சராசரி வெப்பநிலை 33.2. C ஆகும். குளிரான மாதமான சனவரி மாதத்தின் சராசரி வெப்பநிலை 10.0. C ஆகும்.[6]

வரலாறு

[தொகு]

மர்தான் தொல்பொருள் இடங்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. 1962 ஆம் ஆண்டில் சங்காவோ குகைகள் மர்தானுக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டன. இங்கு 30,000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய பேலியோலிதிக் காலத்திலிருந்த கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.[7] மர்தானுக்கு அருகிலுள்ள ஜமால் கர்ஹியைச் சுற்றியுள்ள பகுதியிலிருந்து மேலும் அகழ்வாராய்ச்சிகளில் மெசோலிதிக் காலத்தின் கலைப்பொருட்கள் மீட்கப்பட்டன.[7]

மர்தானைச் சுற்றியுள்ள பகுதி கிமு 1800 இல் காந்தாரா கல்லறை கலாச்சாரத்தின் தாயகத்தின் ஒரு பகுதியாக அமைந்தது. மார்தான் பண்டைய பௌத்த இராச்சியமான காந்தாராவின் ஒரு பகுதியாக திகழ்ந்தது. அருகிலுள்ள ஷாபாஸ் கர்ஹியில் உள்ள அசோகனின் பாறைகள் கி.மு. 200 ஆண்டுகளின் நடுப்பகுதியின் சேர்ந்தவை. அவை பண்டைய கரோஸ்தி எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன.[8] அருகிலுள்ள யுனெகோ உலக பாரம்பரிய தளமான தக்த்-இ-பாஹி கி.பி. 46 இல் மடமாக நிறுவப்பட்டது. இந்திய துணைக் கண்டத்தில் 0 என்ற எண்ணைப் பயன்படுத்தியதற்கான பதிவைக் கொண்ட பக்ஷாலி கையெழுத்துப் பிரதி 1891 ஆம் ஆண்டில் மர்தானுக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டது.[9] மேலும் இது கி.பி. 3 அல்லது 4 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. மார்தான் அருங்காட்சியகம் 1991 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.

புள்ளிவிபரங்கள்

[தொகு]

2017 ஆம் ஆண்டின் மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி , 2017 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மார்தான் நகரின் மக்கட்தொகை 358,604 ஆகும். மர்தான் நகரம் பஷ்டூன்களின் யூசப்சாய் பழங்குடியினரின் தாயகம் ஆகும். கணிசமான எண்ணிக்கையிலான மொஹமண்ட் மற்றும் உத்மன்கேல் பழங்குடியினர்கள் நகரத்தில் குடியேறினர்.[10]

1998 மக்கட் தொகை கணக்கெடுப்பின்படி மர்தானில் மொத்த வீடுகளின் எண்ணிக்கை 29,116 ஆகும். மொத்த மக்கட் தொகை 245,926 ஆகும். இதில் 52.56% (129,247) ஆண்களும், 47.44% (116,679) பெண்களும் காணப்படுகின்றனர்.[11]

பொருளாதாரம்

[தொகு]

மர்தான் வளர்ந்து வரும் தொழிற்துறை மையத்தின் ஒரு பகுதியாகும். இங்கு ஜவுளி மற்றும் சமையல் எண்ணெய் ஆலைகள் என்பன அமைந்துள்ளன. இது தெற்காசியாவின் மிகப் பெரிய அளவில் சர்க்கரை உற்பத்தி செய்யப்படும் பகுதியாகும்.[12] ரஷாகாய் அருகே பல பில்லியன் டாலரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார தாழ்வாரத்தின் (சிபிஇசி) ஒரு பகுதியான பொருளாதார மண்டலத்தை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. ரஷாகாய் நவ்ஷெரா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும் மர்தானுடனான அதன் அருகாமையினால் இத்திட்டம் மார்தான் நகரத்திற்கு நேரடியாக பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.[13]

சான்றுகள்

[தொகு]
  1. "NRB: Local Government Elections". archive.is. 2012-08-05. Archived from the original on 2012-08-05. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  2. "The Implacable Taliban, Repeating History in Afghanistan". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  3. "Maps, Weather, and Airports for Mardan, Pakistan". archive.is. 2007-10-25. Archived from the original on 2007-10-25. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  4. "University Student the Latest Victim of Pakistan's 'Blasphemy' Vigilantism". The Wire. Archived from the original on 2019-12-03. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  5. ""POPULATION SIZE AND GROWTH OF MAJOR CITIES". Archived from the original (PDF) on 2018-12-25. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  6. "Mardan climate: Average Temperature, weather by month, Mardan weather averages - Climate-Data.org". en.climate-data.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  7. 7.0 7.1 "Ahmed, Mukhtar (29 May 2014). Ancient Pakistan - An Archaeological History: Volume I: The Stone Age". {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  8. Centre, UNESCO World Heritage. "Shahbazgarhi Rock Edicts". UNESCO World Heritage Centre (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  9. "Carbon dating finds Bakhshali manuscript contains oldest recorded origins of the symbol 'zero'". Bodleian Libraries. பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  10. ""AREA & POPULATION OF ADMINISTRATIVE UNITS BY RURAL/URBAN: 1951-1998 CENSUSES (PDF)"" (PDF). Archived from the original (PDF) on 2020-06-20. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  11. ""POPULATION SIZE AND GROWTH OF MAJOR CITIES (PDF)". Archived from the original (PDF) on 2018-12-25. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  12. "Mardan | Pakistan". Encyclopedia Britannica (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
  13. "Rashakai Economic Zone | Technology City | RSEZ | CPEC City". Rashakai Economic Zone (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-12-03.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்தான்&oldid=3692187" இலிருந்து மீள்விக்கப்பட்டது