உள்ளடக்கத்துக்குச் செல்

மார்ட்டின் வால்ட்சீமுல்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
19ம் நூற்றாண்டில் வரையப்பட்ட வால்ட்சீமுல்லரின் உருவப்படம்

மார்ட்டின் வால்ட்சீமுல்லர் (1470 - 1520) என்பவர் ஒரு ஜெர்மன் வரைபடவியலாளர் மற்றும் மனிதநேய அறிஞர் ஆவார். 1507 ஆம் ஆண்டில் வரையறுக்கப்பட்ட உலக வரைபடத்தில் இத்தாலிய ஆய்வாளர் அமெரிகோ வெஸ்புசி நினைவாக புதிய உலகின் ஒரு பகுதிக்கு பெயரிட அமெரிக்கா என்ற வார்த்தையை முதன்முதலில் பதிவு செய்த பெருமை அவருக்கும் அவரது ஒத்துழைப்பாளரான மத்தையஸ் ரிங்மேனுக்கும் உரியது. வால்ட்சீமுல்லர் தெற்கு அமெரிக்காவை ஆசியாவிலிருந்து பிரிக்கப்பட்ட ஒரு கண்டமாக வரைபடமாக்கிய முதல் நபராகவும், அச்சிடப்பட்ட பூகோளத்தை உருவாக்கிய முதல் நபராகவும், ஐரோப்பாவின் அச்சிடப்பட்ட சுவர் வரைபடத்தை உருவாக்கிய முதல் நபராகவும் விளங்குகிறார். டோலமியின் புவியியலின் 1513ம் ஆண்டு பதிப்பின் பிற்சேர்க்கையாக அச்சிடப்பட்ட அவரது வரைபடங்களின் தொகுப்பு நவீன அட்லஸின் முதல் எடுத்துக்காட்டு என்று கருதப்படுகிறது.