மார்ட்டின் லூதர் கிங் நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ட்டின் லூதர் கிங் நாள்
Martin-Luther-King-1964-leaning-on-a-lectern.jpg
1964இல் மார்ட்டின் லூதர் கிங்
அதிகாரப்பூர்வ பெயர்மார்ட்டின் லூதர் கிங்கின் பிறந்தநாள்
பிற பெயர்(கள்)எம்எல்கே டே, அருள்திரு முனைவர். மார்ட்டின் லூதர் கிங் இளையவர் நாள்
கடைபிடிப்போர்ஐக்கிய அமெரிக்கா
வகைதேசிய நாள்
நாள்சனவரியின் மூன்றாம் திங்கட்கிழமை
2023 இல் நாள்[[சனவரி Expression error: Unexpected < operator.]]

மார்ட்டின் லூதர் கிங் நாள் (Martin Luther King, Jr. Day) அருள்திரு முனைவர் மார்ட்டின் லூதர் கிங் இளையவரின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில் ஐக்கிய அமெரிக்காவில் கூட்டமைப்பு அரசு விடுமுறையாக கடைபிடிக்கப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் கிங்கின் பிறந்த நாளான சனவரி 15ஐ ஒட்டி வருகின்ற சனவரி மாதத்தின் மூன்றாவது திங்கட்கிழமை அன்று கொண்டாடப்படுகிறது.

கிங் அமெரிக்க கூட்டமைப்பு மற்றும் மாநில சட்டங்களில் இனப்பாகுபாடுகளை வெற்றிகரமாக எதிர்த்த ஆப்பிரிக்க-அமெரிக்கரின் குடியுரிமை இயக்கத்தில் அகிம்சை வழியை பரப்பியவராவார். 1968ஆம் ஆண்டில் அவர் கொலைசெய்யப்பட்ட பின்னர் அவரது நினைவாக ஓர் கூட்டமைப்பு விடுமுறை கோரும் இயக்கம் ஏற்பட்டது. 1983ஆம் ஆண்டில் ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ரோனால்டு ரேகன் இந்த விடுமுறையைச் சட்டமாக்கினார்[1][2] . 1986ஆம் ஆண்டு சனவரி 20 அன்று முதன்முதலாக கடைபிடிக்கப்பட்டது. துவக்கத்தில் இதனை ஐக்கிய அமெரிக்காவின் சில மாநில அரசுகள் இதே பெயரில் கடைபிடிக்க விரும்பாது மாற்றுப் பெயர்களில்[3] அல்லது பிற விடுமுறைகளுடன் இணைத்து கடைபிடித்தன. 2000ஆம் ஆண்டு முதன்முறையாக ஐக்கிய அமெரிக்காவி அனைத்து 50 மாநிலங்களிலும் அதிகாரபூர்வமாக இந்நாள் கடைபிடிக்கப்பட்டது.

ரோனால்டு ரேகன் மார்ட்டின் லூதர் கிங்கின் மனைவியுடன் இந்நாளைக் குறித்த கையொப்பமிடும் விழாவில்

மேற்கோள்கள்[தொகு]

  1. Woolley, John T. (November 2, 1983). "Ronald Reagan: Remarks on Signing the Bill Making the Birthday of Martin Luther King, Jr., a National Holiday". The American Presidency Project. ஜனவரி 17, 2011 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. January 16, 2011 அன்று பார்க்கப்பட்டது. Unknown parameter |coauthor= ignored (உதவி); Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)
  2. வார்ப்புரு:USStatute
  3. Petrie, Phil W. (May–June 2000). "The MLK holiday: Branches work to make it work". The New Crisis. November 12, 2008 அன்று பார்க்கப்பட்டது. Italic or bold markup not allowed in: |publisher= (உதவி)

வெளியிணைப்புகள்[தொகு]