மார்ட்டின் பெட்ரோவ்
| மார்ட்டின் பெட்ரோவ் | |
|---|---|
| நாடு | பல்காரியா |
| பிறப்பு | அக்டோபர் 3, 2000 சோஃபியா |
| பட்டம் | பேராதன் (2022)[1] |
| பிடே தரவுகோள் | 2547 (திசம்பர் 2021) |
| உச்சத் தரவுகோள் | 2556 (ஏப்ரல் 2022) |
மார்ட்டின் பெட்ரோவ் (Martin Petrov) என்பவர் பல்கேரிய நாட்டைச் சேர்ந்த ஒரு சதுரங்க வீரராவார். 2000 ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் 3 ஆம் தேதியன்று பல்கேரியாவின் சோபியா நகரத்தில் இவர் பிறந்தார். 2022 ஆம் ஆண்டில் பிடே அமைப்பு இவருக்கு சதுரங்க கிராண்டுமாசுட்டர் என்ற பட்டத்தை வழங்கியுள்ளது.
சதுரங்க வாழ்க்கை
[தொகு]2019 ஆம் ஆண்டு சனவரி மாதத்தில் நடைபெற்ற 94 ஆவது ஏசுட்டிங்சு காங்கிரசு சதுரங்கப் போட்டியில் டேனியல் கோர்மல்லி, ஒலெக் கோர்னீவ், சருனாசு சுல்சுகிசு, அலெக்சாண்டர் செர்னியாவ் மற்றும் கோனார் மர்பி ஆகியோருடன் இணைந்து முதலிடத்தைப் பிடித்தார்.[2]
2020 ஆம் ஆண்டு மார்ச்சு மாதத்தில் பல்கேரிய சதுரங்க வெற்றியாளர் பட்டத்தை வென்றார். இப்போட்டியின் போது கிராண்டுமாசுட்டர்களான மோம்சில் நிகோலோவ் மற்றும் கிராசிமிர் ருசேவ் ஆகியோரை தோற்கடித்தார்.[3]
2022 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் நடைபெற்ற டர்கு மியூரசு திறந்தநிலை போட்டியில் ஆரம்பத்தில் மூன்றாவது இடத்தைப் பிடித்த ஆறு வீரர்களில் சமநிலை முறிவு ஆட்டத்திற்குப் பிறகு இவர் மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.[4]
2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பல்கேரிய சதுரங்க வெற்றியாளர் போட்டியில் நர்க்யுல் சலிமோவா மற்றும் மோம்சில் பெட்கோவ் ஆகியோருடன் இணைந்து இரண்டாவது இடத்தைப் பிடித்த பிறகு நான்காவது இடத்தைப் பிடித்தார்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "FIDE Title Application (GM)" (PDF).
- ↑ Pereira, Antonio (January 7, 2019). "Six-way tie at the top of 94th Hastings Congress".
- ↑ "84-th Bulgarian Individual Chess Championship 2020 - Men".
- ↑ Bulmaga, Irina (June 15, 2022). "Targu Mures: Nisipeanu wins ahead of 13-year old Ukrainian IM".
- ↑ Ahmed, Shahid (February 4, 2023). "19-year-old Nurgyul Salimova finishes second at Bulgarian Championship 2023 in the Open section".