மார்ட்டின் கெல்லர்ட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்ட்டின் பிராங் கெல்லர்ட்டு (Martin Frank Gellert) செக்கோசுலோவேகியாவில் பிறந்த அமெரிக்க மூலக்கூற்று உயிரியலாளர் ஆவார். இவர் 1929 ஆம் ஆண்டு பிறந்தார். அமெரிக்க உயிரி வேதியியல் மற்றும் மூலக்கூற்று உயிரியல் சங்கத்தின் தலைவராக இருந்தார். 1950 ஆம் ஆண்டு ஆர்வர்டு பல்கலைக்கழகத்தில் கெல்லர்ட்டு பட்டம் பெற்றார். 1956 ஆம் ஆண்டு கொலம்பியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். [1]

1985 ஆம் ஆண்டு தாமசு மேனியாடிசுடன் இணைந்து ரிச்சர்ட் லவுன்சுபெரி விருதை வென்றார், வளர்ச்சிக்கு இன்றியமையாதவை மற்றும் அடிப்படையானவையாகக் கருதப்படும் டி.என்.ஏ மறுசீரமைப்பு நுட்பங்களான "டி.என்.ஏவின் கட்டமைப்பு மற்றும் செயல்பாட்டைப் பற்றிய நமது புரிதலுக்கான அவர்களின் முக்கிய பங்களிப்புகள் இவ்விருதை அவருக்குப் பெற்றுத் தந்தன. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Martin F. Gellert. பரணிடப்பட்டது 2014-11-03 at the வந்தவழி இயந்திரம் ASBMB. Retrieved 6 September 2017.
  2. Richard Lounsbery Award. National Academy of Sciences. Retrieved 6 September 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டின்_கெல்லர்ட்டு&oldid=3224562" இலிருந்து மீள்விக்கப்பட்டது