மார்ட்டன் சுகிமிடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்ட்டன் சுகிமிடு
Maarten Schmidt
பிறப்புதிசம்பர் 28, 1929 (1929-12-28) (அகவை 93)
குரோனிங்கன்
தேசியம்டச்சியர்
துறைவானியல்
பணியிடங்கள்கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம்
கல்வி கற்ற இடங்கள்இலெய்டன் வான்காணகம்
அறியப்படுவதுகுவேசார்கள் (துடிப்பண்டங்கள்)
விருதுகள்காவ்லி பரிசு (2008)

மார்ட்டன் சுகிமிடு (Maarten Schmidt) (பிறப்பு:திசம்பர் 28, 1929) ஒரு நெதர்லாந்தைச் சேர்ந்த டச்சு வானியலாளர் ஆவார். இவர் துடிப்பண்டங்களின் (குவேசார்களின்) தொலைவுகளை அளந்தார்.

இவர் நெதர்லாந்தில் உள்ள குரோனிங்கன் நகரில் பிறந்தார்.[1] இவர் ஜான் என்றிக் ஊர்த்துடன் பயின்றார். இவர் 1956 இல் இலெய்டன் பல்கலைக்கழகத்தில் தன் முனைவர் பட்டத்தைப் பெற்றார்.

இவர் 1959 இல் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்ந்து கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியலானார். தொடக்கத்தில் இவர் பால்வெளிகளின் பொருண்மைப் பரவலையும் இயக்கத்தையும் பற்றிய கோட்பாடுகளில் ஆய்வு செய்தார். இக்கல கட்ட்த்தில் இவர் சுகிமிடு விதியை உர்வாக்கினார். இவ்விதி உடுக்கண வளிம அடர்த்திக்கும் அவ்வளிமத்தில் விண்மீன் உருவாக்க வீதத்துக்கும் உள்ள உறவை விளக்குகிறது.[2][3] இவர் பின்னர் கதிர்வீச்சு வாயில்களின் ஒளிக் கதிர்நிரல்களை ஆய்வு செய்தார். இவர் 1963 இல் பலொமார் வான்கானக 200 அங்குலத் தொலைநோக்கியைப் பயன்படுத்தி, இந்த கதிர்வீச்சு வாயில்களுக்கு இணையான கட்புலப் பொருளை இன்ங்கண்டார். இது 3C 273 எனப்படுகிறது. இவர் இதன் கதிர்நிரல்களையும் ஆய்ந்தார். இது விண்ம்மீன் போலத் தோற்றமுடன் விளங்கியதால் அருகே உள்ள பொருளெனக் கருத நேர்ந்தாலும், 3C 273 எனப்படும் இதன் கதிர்நிரல்கள் மிக உயர்ந்த செம்பெயர்ச்சியை அதாவது 0.158 செம்பெயர்ச்சியைக் கொண்டிருந்ததால் நம் பால்வெளியாகிய பால்வழியினும் நெடுந்தொலைவில் அமைந்துள்ளதாக நிறுவப்பட்டது. இதனால் இது இயல்பிகந்த உயர்பொலிவு பெற்றுள்ளதாக்க் கொள்ளப்பட்டது. சுகிமிடு இதை வானியலாக 3C 273 a எனக் குறிப்பிட்டு பகுதி உடுக்கணப் பொருள் ("quasi-stellar" object or quasar) என இதற்குப் பெயரிட்டார். பிறகு இதுபோல ஆயிரக்கணக்கான வான்பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.

தகைமைகள்[தொகு]

விருதுகள்

 • எலன் பி. வார்னர் பரிசு (1964)
 • காலம் மார்ச்சு 11, 1966 இதழின் முகப்பட்டை[4]
 • என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை (1978)
 • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1980)
 • அரசு நெதர்லாந்து கலை, அறிவியல் கல்விக்கழக உயர் ஆய்வாளர் (1980)[5]
 • ஜேம்சு கிரைகு வாட்சன் பதக்கம் (1991)
 • புரூசு பதக்கம் (1992)
 • வானியற்பியலுக்கான காவ்லி பரிசு (2008)
 • நார்வே அறிவியல், இலக்கியக் கல்விக்கழக உறுப்பினர்.[6]

இவர்பெயர் இடப்பட்டவை

மேற்கோள்கள்[தொகு]

 1. "The Rumford Prize". Bulletin of the American Academy of Arts and Sciences (American Academy of Arts & Sciences) 22 (3): 8–9. January 1969. 
 2. Schmidt, Maarten (1959). "The Rate of Star Formation". The Astrophysical Journal 129: 243. doi:10.1086/146614. Bibcode: 1959ApJ...129..243S. https://archive.org/details/sim_astrophysical-journal_1959-03_129_2/page/243. 
 3. Kennicutt, Robert C. (1998). "The global Schmidt law in star-forming galaxies". The Astrophysical Journal 498 (2): 541. doi:10.1086/305588. Bibcode: 1998ApJ...498..541K. 
 4. "Maarten Schmidt - Mar. 11, 1966". Time. Archived from the original on 2013-08-27. https://web.archive.org/web/20130827202529/http://www.time.com/time/covers/0,16641,19660311,00.html. 
 5. "M. Schmidt". Royal Netherlands Academy of Arts and Sciences. 27 ஜனவரி 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 3 August 2015 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Gruppe 2: Fysikkfag (herunder astronomi, fysikk og geofysikk)" (Norwegian). Norwegian Academy of Science and Letters. 27 செப்டம்பர் 2011 அன்று மூலம் பரணிடப்பட்டது. 7 October 2010 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: Unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:Kavli Prize laureates

"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்ட்டன்_சுகிமிடு&oldid=3591077" இருந்து மீள்விக்கப்பட்டது