மார்டின் டாங்கோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மார்ட்டின் எம் டாங்கோ (Martin M. Danggo) என்பவர் இந்தியாவின் மேகாலயா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் மேகாலய அரசில் பொதுப்பணித் துறை (சாலைகள்) அமைச்சராகப் பணியாற்றியுள்ளார். இவர் தென் மேற்கு காசி மலை மாவட்டத்தின் 35-ரானிகர் என்ற பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியை மேகாலயா சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தினார். [1] 1998 சட்டமன்றத் தேர்தலில் லாங்ரின் பழங்குடியினர் தொகுதிக்கான பிரதிநிதியாக மக்கள் ஜனநாயக இயக்கத்தின் சார்பில் டாங்கோ முதன்முதலில் சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [2] அவர் இந்திய தேசிய காங்கிரசுக்கு கட்சி மாறிய பின் 2003 ஆம் ஆண்டில் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். [3] 2018 ஆம் ஆண்டில் அவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி தேசிய மக்கள் கட்சியில் சேர்ந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

 

  1. "List Of Members Of The Eight Meghalaya Legislative Assembly". Meghalaya Legislative Assembly, Official website. மூல முகவரியிலிருந்து 2011-05-11 அன்று பரணிடப்பட்டது.
  2. "Meghalaya 1998".
  3. "Meghalaya 2003".
  4. "Ranikor, South Tura by-poll to be held on same day" (en) (2018-07-27).
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்டின்_டாங்கோ&oldid=3193003" இருந்து மீள்விக்கப்பட்டது