உள்ளடக்கத்துக்குச் செல்

மார்க் கார்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க் கார்னி
Mark Carney
2015 இல் கார்னி
24-ஆவது கனடா பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 14, 2025
ஆட்சியாளர்மூன்றாம் சார்லசு
தலைமை ஆளுநர்மேரி சைமன்
முன்னையவர்ஜஸ்டின் துரூடோ
கனடா லிபரல் கட்சித் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மார்ச் 9, 2025
முன்னையவர்ஜஸ்டின் துரூடோ
இங்கிலாந்து வங்கியின் ஆளுநர்
பதவியில்
சூலை 1, 2013 – மார்ச் 15, 2020
முன்னையவர்சர் மேர்வின் கிங்
பின்னவர்ஆன்ட்ரூ பெயிலி
கனடா வங்கியின் ஆளுநர்
பதவியில்
பெப்ரவரி 1, 2008 – சூன் 3, 2013
பிரதமர்இசுட்டீவன் கார்ப்பர்
மத்திய வங்கிப் பணிகள்
நிதி நிலை வாரியத்தின் தலைவர்
பதவியில்
நவம்பர் 4, 2011 – நவம்பர் 26, 2018
கனடா வங்கியின் துணை ஆளுநர்
பதவியில்
ஆகத்து 10, 2003 – நவம்பர் 15, 2004
வேறு பணிகள்
காலநிலை நடவடிக்கை மற்றும் நிதிக்கான ஐநா சிறப்புத் தூதர்
பதவியில்
திசம்பர் 1, 2019 – சனவரி 15, 2025
நியமிப்புஅந்தோனியோ குத்தேரசு
மூத்த இணை நிதி அமைச்சர்
பதவியில்
நவம்பர் 15, 2004 – பெப்ரவரி 4, 2007
பிரதமர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
மார்க் யோசப் கார்னி

மார்ச்சு 16, 1965 (1965-03-16) (அகவை 60)
போர்ட் சிமித், கனடா
குடியுரிமை
  • கனடா
  • அயர்லாந்ந்து (1965–2025)
  • ஐக்கிய இராச்சியம் (2018–2025)
அரசியல் கட்சிலிபரல்
துணைவர்
டயானா பொக்சு (தி. 1994)
[1]
பிள்ளைகள்4
முன்னாள் மாணவர்
கையெழுத்து
இணையத்தளம்www.markcarney.ca
அறிவியல் பணி
துறைபொருளியல்
ஆய்வேடுபோட்டியின் மாறும் நன்மை (1995)
ஆய்வு நெறியாளர்மார்கரெட் ஏ. மெயர்

மார்க் யோசப் கார்னி (Mark Joseph Carney; பிறப்பு: 16 மார்ச் 1965) என்பவர் கனடிய அரசியல்வாதியும் பொருளியலாளரும் ஆவார். இவர் மார்ச் 2025 முதல் கனடாவின் 24-ஆவது பிரதமராகவும், கனடா லிபரல் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் முன்னதாக கனடா வங்கியின் ஆளுநராக 2008 முதல் 2013 வரையும், இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக 2013 முதல் 2020 வரையும் பணியாற்றினார்.

மார்க் கார்னி கனடாவின் வடமேற்கு ஆள்புலத்தில் போர்ட் சிமித் நகரில் பிறந்து ஆல்பர்ட்டா எட்மண்டனில் வளர்ந்தார்.[2] 1988 ஆம் ஆண்டு ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்,[3] பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து, 1993 இல் முதுகலைப் பட்டமும், 1995 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.[4] 2003 ஆம் ஆண்டு கனடா வங்கியில் துணை ஆளுநராகச் சேருவதற்கு முன்பு கோல்ட்மேன் சாக்சில் பல்வேறு பதவிகளை வகித்தார்.[5] 2004 ஆம் ஆண்டு, கனடா நிதித் துறைக்கான மூத்த இணை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு, கார்னி கனடா வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார், அங்கு உலகளாவிய நிதி நெருக்கடியின் போது கனேடிய பணவியல் கொள்கைக்கு பொறுப்பேற்றார். 2013 ஆம் ஆண்டு வரை அவர் கனேடிய மத்திய வங்கியை வழிநடத்தினார், பின்னர் அவர் இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார், அங்கு அவர் பிரித்தானிய மத்திய வங்கியின் பிரெக்சிட்டு, கோவிட்-19 தொற்றுநோயின் தொடக்கக் கட்ட நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கினார்.[6]

மத்திய வங்கியை விட்டு வெளியேறிய பிறகு, கார்னி புரூக்ஃபீல்ட் சொத்து மேலாண்மையில் தலைவராகவும், புளூம்பெர்க் எல்.பி.யின் இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.[7] மார்க் காலநிலை நடவடிக்கை, நிதி ஆகியவற்கான ஐநா சிறப்பு தூதராகவும் நியமிக்கப்பட்டார்.[8] கோவிடு-19 தொற்றுநோய்களின் போது கனடியப் பிரதமர் ஜஸ்டின் துரூடோவின் பல முறைசாரா ஆலோசகர்களில் ஒருவராகவும் கார்னி பணியாற்றினார், செப்டம்பர் 2024 இல் லிபரல் கட்சியின் பொருளாதார வளர்ச்சி பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கனடாவின் லிபரல் கட்சியின் தலைமைப் பதவியை நாடுவதற்கான தனது விருப்பத்தை அவர் அறிவித்தார், மார்ச் மாதத்தில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றார்.[9] 2025 மார்ச் 14 அன்று கனடாவின் 24-ஆவது பிரதமராக 30-ஆவது கனேடிய அமைச்சரவையுடன் கார்னி பதவியேற்றார்.[10][11][12]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Diana Fox Carney". Skoll. Retrieved January 19, 2025.
  2. Mah, Bill (November 26, 2012). "Mark Carney: From Edmonton Journal paperboy to Bank of England". The Edmonton Jounal. Archived from the original on February 5, 2019. Retrieved October 4, 2018.
  3. "Mark Carney – Governor, Bank of England". bankofengland.co.uk. Archived from the original on September 10, 2019. Retrieved July 20, 2016.
  4. CBC News Staff (October 4, 2007). "Mark Carney named next Bank of Canada governor" (in en) (news brief). CBC News (Ottawa: The Crown). https://www.cbc.ca/news/business/mark-carney-named-next-bank-of-canada-governor-1.638514. பார்த்த நாள்: June 24, 2016. 
  5. Peter S. Goodman (September 16, 2016). "As Britain Confronts 'Brexit,' a Canadian Takes Center Stage: Mark Carney". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து September 6, 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200906072540/https://www.nytimes.com/2016/09/16/business/international/bank-of-england-brexit-carney.html?mcubz=0. 
  6. Vieira, Paul (October 4, 2007). "Carney vaults over heir apparent for Bank of Canada top job". National Post இம் மூலத்தில் இருந்து May 20, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110520082801/http://www.financialpost.com/story.html?id=4e6b4073-de51-4ab2-b79c-626e93627b45&k=8869. 
  7. Thomas, Daniel; Nicolaou, Anna (August 21, 2023). "Bloomberg overhauls management team with Mark Carney to lead new board". பைனான்சியல் டைம்ஸ். https://www.ft.com/content/4e298ff7-8d34-4498-8908-dc945e2bc93e. 
  8. "Mark Carney". Glasgow Financial Alliance for Net Zero (in அமெரிக்க ஆங்கிலம்). June 8, 2021. Archived from the original on February 6, 2024. Retrieved February 9, 2024.
  9. "Liberal leadership race: Mark Carney elected in a landslide". CBC News. March 9, 2025 இம் மூலத்தில் இருந்து March 9, 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250309224817/https://www.cbc.ca/news/politics/livestory/liberal-leadership-race-mark-carney-elected-in-a-landslide-9.6678061. பார்த்த நாள்: March 9, 2025. 
  10. Tasker, John Paul (March 14, 2025). "Carney sworn in as prime minister with a reworked cabinet filled with new faces". CBC. https://www.cbc.ca/news/politics/carney-swearing-in-pm-cabinet-1.7482871. பார்த்த நாள்: March 14, 2025. 
  11. Kestler-D'Amours, Jillian; Harb, Ali (March 14, 2025). "Canada live news: Mark Carney sworn in as prime minister amid Trump threats". Al Jazeera. https://www.aljazeera.com/news/liveblog/2025/3/14/canada-live-news-trudeau-stepping-down-carney-to-be-sworn-in-as-pm. பார்த்த நாள்: March 14, 2025. 
  12. Isai, Vjosa (March 14, 2025). "Mark Carney Becomes Canada's Prime Minister at Crucial Moment" (in en-US). The New York Times இம் மூலத்தில் இருந்து March 14, 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250314184903/https://www.nytimes.com/2025/03/14/world/canada/canada-prime-minister-mark-carney-trump.html. 

மேலும் படிக்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_கார்னி&oldid=4227717" இலிருந்து மீள்விக்கப்பட்டது