மார்க் ஓனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2011 ஆண்டில் மார்க் ஓனா

மார்க் ஓனா எசாங்குய் (Marc Ona Essangui) சுற்றுச்சூழல் தன்னார்வ தொண்டு நிறுவனமான பிரைன்பாரெசுட்டு அமைப்பின் நிறுவனர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வலையமைப்பான சுற்றுச்சூழல் காபோனின் தலைவர் ஆவார். காபோன் என்பது உலகின் இரண்டாவது பெரிய மழைக்காட்டுப் பகுதியாகும்.

பூமத்திய ரேகை மழைக்காடு சுற்றுச்சூழல் அமைப்புகளை அச்சுறுத்தும் மேற்கு மத்திய ஆப்பிரிக்காவில் உள்ள காபோனில் ஒரு சீன சுரங்கத் திட்டத்தின் பின்னணியில் உள்ள ஒப்பந்தங்களை அம்பலப்படுத்த மார்க் ஓனா எசாங்குய் தலைமை தாங்கினார். ஓனா எசாங்குய் கருத்துப்படி, முன்மொழியப்பட்ட பெலிங்கா வளர்ச்சித் திட்டம் என்ற 3.5 பில்லியன் டாலர் திட்டத்திற்கு ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதற்காக உள்ளூர் சமூகங்கள் கலந்தாலோசிக்கப்படவில்லை. திட்டம் அவர்களின் சூழலில் என்ன பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் அவர்கள் அறிந்திருக்கவில்லை. வளர்ச்சிக்கு அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் ஒரு நாட்டில், காடுகளையும் அதன் மக்களையும் பாதுகாக்க ஓனா அயராமல் குரல் கொடுத்தார்.

ஓனாவின் சுற்றுச்சூழல் பாதுகப்பு பணிக்காக 2009 ஆம் ஆண்டுக்கான ஆப்பிரிக்கா கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது. [1] நிதி பற்றாக்குறை காரணமாக பெலிங்கா வளர்ச்சித் திட்டம் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. [2]

குடியரசுத் தலைவர் அலி போங்கோ ஒந்திம்பாவின் மூத்த ஆலோசகரான லிபன் சோலேமானை அவதூறு செய்ததற்காக, மார்ச் 2013 ஆம் ஆண்டு ஓனா எசாங்குய்யிற்கு ஆறு மாத இடைநீக்கம் செய்யப்பட்ட சிறைத்தண்டனையும், சுமார் 10,000 அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. [3]

சனவரி 2020 முதல், ஆப்பிரிக்காவில் மக்களாட்சிக்கான தூர்னன்சு லா பேச் இயக்கத்தின் தலைவராக மார்க் ஓனா எசாங்குய் உள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 2009 Goldman Environmental Prize Recipient Marc Ona Essangui
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2011-07-18. பார்க்கப்பட்ட நாள் 2021-07-18.
  3. Reuters
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்_ஓனா&oldid=3567334" இலிருந்து மீள்விக்கப்பட்டது