மார்க் அந்தோணி பேசிகிரிடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மார்க் அந்தோணி லைச்டர் பேசிகிரிடல்(10 செப்டம்பர் 1912 – 22 சூன் 1999) ஒரு ஆங்கிலோ ஆஸ்திரேலியரான இவர் மார்க்சியம் சார்ந்த புரட்சியாளர் ஆவார். இவர் இலங்கையில் வாழ்ந்த இலங்கை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஐரோப்பிய இனக்குழுவினரில் ஒருவர் ஆவார்.

மார்க் அந்தோணி பேசிகிரிடல்
தாய்மொழியில் பெயர்மார்க் அந்தோணி லைச்டர் பேசிகிரிடல்
பிறப்பு10 செப்டம்பர் 1912
இலண்டன்
இறப்பு22 சூன் 1999

பிறப்பு[தொகு]

மார்க் அந்தோணி லைச்டர் பேசிகிரிடல் இலண்டனில் 1912 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10 ஆம் நாள் பிறந்தார். இன்னா மார்ஜோரி லைச்டர், ஜேம்ஸ் சைமர் பேசிகிரிடல் ஆவர். தெற்கு இலண்டனில் உள்ள கெண்ணிங்டனில் பள்ளி படிப்பை தொடர்ந்தார். அவர் தனது தாயுடன் ஆத்திரேலியாவில் குடியேறினார். 1925 ஆம் ஆண்டில் அவரின் தாய் தொழிற் கட்சி (ஐக்கிய இராச்சியம்) இல் பெண்கள் வாக்குரிமை மூலம் இணைந்து இருந்தார். இவர் 1925 இல் ஹோலர்போன் பெருநகரத்திற்கு வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்க் சிட்னி கலை பள்ளியில் பயின்று அவுட்பேக் என்று சொல்லக்கூடிய ஆத்திரேலியாவின் தொலைதூர வரண்ட நிலபகுதியின் வேளாண்மையாளராக இருந்தார். 1935 ஆம் ஆண்டுகளில் அந்நாட்டின் இளம் கம்யூனிஸ்ட் லீக் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

இலங்கை வருகை[தொகு]

1936 ஆம் ஆண்டில் அவர் எஸ் எஸ் பெண்டிகோ கப்பலில் இலங்கைக்கு சென்றார். இலங்கையின் மாத்தளைக்கு அருகிலுள்ள மடுகல்லெல்லில் உள்ள ரெலுகாஸ் தோட்டத்திற்கு சென்று தேயிலை நடவு மற்றும் வணிகம் செய்வதைப்பற்றி மார்க் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். இங்கு தேயிலை தோட்ட கூலியாட்களாக பணிபுரிந்த தமிழ் மக்களிடையே பணியாற்றினார். அங்கே இம் மக்கள் அத்தியாவசிய அடிப்படை சுகாதாரம், கல்வி இன்றி சிறு வரிசை வீடுகளில் வசித்துவந்தனர். இது இங்கிலாந்தில் கால்நடைகளை வளர்க்கும் இடத்தை விட மோசமாக இருந்தது. இவர்களை மனித தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டனர் இதனால் இந்தத் தொழிலாளர்கள் மத்தியில் போராட்டம் பெருகியது. மார்க் தொழிலாளர்களுடன் கூட்டுறவு கொள்வதற்காகவும், தொழிலாளர்கள் போராட்டத்தை ஆதரிக்கும் செயலில் ஈடுபட்டதர்க்காகவும் அவர் நீக்கப்பட்டார். பின்னர் லங்கா சமசமாஜக் கட்சியில் இணைந்தார்.[1]

கட்சி பணிகள்[தொகு]

1936 ஆம் ஆண்டு நவம்பர் 28 ஆம் நாள் கொழும்புவில் நடைபெற்ற லங்கா சமசமாஜக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டார்.[2] அக்கட்சியின் தலைவர் கால்வின் ஆர்.டி. செல்வா அவர்கள் மார்க்கை ஒரு வெள்ளைத் தோழர் ஒரு தெரு முனையில் நடைபெற்ற ஒரு கட்சி கூட்டத்தில் கலந்துகொள்வது இதுவே முதல் தடவையாகும். மார்க் ஸ்ரீலங்காவில் தனது முதலாவது பொது உரையை தொடங்கினார். அது ஆங்கிலேய முதலாளிகள் ஸ்ரீலங்கா தொழிலாளர்களை பிளவுபடுத்துவதற்கும், ஒருவர் மற்றொருவருக்கு எதிராகவும் செயல்பட குழிபறிக்க முயற்சிப்பதாக எச்சரித்தனர். 1937 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் நாள் ஆங்கிலேய காவல் ஆணையர் சர் ஹெர்பர்ட் டவுபிகின் என்பவர் இலங்கைத் தீவை விட்டு புறப்படும் நிகழ்வை கொண்டாட கொழும்பில் காலிமுகத் திடல் பொதுக் கூட்டமொன்றை ஏற்பாடு செய்ததில் அவர் ஆர்வத்துடன் பங்கெடுத்துக் கொண்டார். 1915 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கிலேயர் கலகம் முதல் ஆங்கிலேய காவல் ஆணையர் சர் ஹெர்பர்ட் டவுபிகின் என்பவரின் அட்டூழியங்களுக்கு எதிராக லங்கா சமசமாஜக் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது. 1924 முதல் இலங்கை சட்டசபையிலும், பின்னர் இலங்கை அரசாங்க சபையிலும் உறுப்பினராக இருந்த கோ. நடேசய்யர் என்பவரால் அட்டன், இலங்கை பகுதியின் இலங்கை அரசாங்க சபைக்கு உரிப்பினராக்கப்பட்டார். நாவலப்பிட்டியின் தொழிலாளர்கள் இயக்கத்தின் மூலம் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நலன் மற்றும் இயக்க செயலாளர்களின் எதிர்காலப் பனியை ஆராய்ந்தார்.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. *Vinod Moonesinghe, 'Sri Lanka: Mark Bracegirdle and the revolt against empire', Socialist Worker, No 2035 (27 January 2007)
  2. *Wesley S Muthiah, 'Mark Anthony Lyster Bracegirdle (1912–1999): A Traitor to the Imperialist Cause', What Next, No 14 (1999)
  3. Lerski, Origins of Trotskyism in Ceylon இலங்கை வரலாறு