உள்ளடக்கத்துக்குச் செல்

மார்க்விஸ் தெ புஸ்ஸி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்க்விஸ் தெ புஸ்ஸி-காஸ்டெல்னாவ்
பிரெஞ்சு இந்தியா
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு(1785-01-07)சனவரி 7, 1785
புதுச்சேரி (நகரம்), பிரெஞ்சு இந்தியா, பிரான்சிய இராச்சியம்

சார்லஸ் ஜோசப் பட்டீசியர், மார்க்விஸ் தெ புஸ்ஸி-காஸ்டெல்னாவ் ( Charles Joseph Patissier, Marquis de Bussy-Castelnau ) (8 பிப்ரவரி 1718 அல்லது 8 பிப்ரவரி 1720 - 7 சனவரி 1785) சார்லஸ் ஜோசப் பட்டீசியர் தெ புஸ்ஸி என்பவர் 1783 முதல் 1785 வரை இந்தியாவில் பிரெஞ்சு குடியேற்றங்களின் பாண்டிச்சேரியின் தலைமை ஆளுநராக இருந்தார். இவர் கிழக்கிந்தியத் தீவுகளில் தூப்ளேவின் கீழ் தனித்துவத்துடன் பணியாற்றியதற்காக செயிண்ட் லூயிஸின் ஆணையைப் பெற்றார். 1748 ஆம் ஆண்டில், பிரிட்டனிடமிருந்து பாண்டிச்சேரியை மீட்க பங்களித்தார். இந்த பணிக்காக இவர் நன்னம்பிக்கை முனைக்கு அப்பாலுள்ள அனைத்து பிரெஞ்சு படைகளின் தளபதியாக நியமிக்கப்பட்டார். அமெரிக்கப் புரட்சியின் ஒரு பகுதியாக இந்திய படையெடுப்புகளின் போது பியர் ஆண்ட்ரே டி சஃப்ரனுடன் தனது நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, பிரித்தானிய படைகளுக்கு எதிராக அதிக எண்ணிக்கையில் போராடினார்.

யானம்

[தொகு]

பொப்பிலி ஆட்சியாளர்களுக்கு எதிரான போராட்டத்தில் இவர் செய்த உதவிக்கு நன்றியுடன் மன்னர் விஜயநகரம் பூசபதி பெத்த விஜயராமராஜு (1670-1756) யானம் பகுதியை இவருக்கு வழங்கினார். 1750ஆம் ஆண்டில், புஸ்ஸி தனது இராணுவத்துடன் ஐதராபாத்தில் இருந்தபோது, ​​பல வீரர்கள் பெரியம்மை நோயால் இறந்தனர். தனது இராணுவத்தை மீண்டும் கட்டியெழுப்ப சிரமப்பட்ட புஸ்ஸிக்கு விஜயநகர மன்னர் விஜயராமராஜு உதவினார்.

கர்நாடகப் போர்கள்

[தொகு]

1753 ஆம் ஆண்டில், பிரெஞ்சு துருப்புக்களுக்கு ஆதரவாக தக்காண சுபேதார் சலாபத் ஜங், புஸ்ஸியுடன் ஒரு ஒப்பந்தத்தை வெளியிட்டார். ஸ்ரீகாகுளம், ஏலூரு மற்றும் ராஜமன்றி ஆகிய பகுதிகளை இவருக்கு அளித்து பிரெஞ்சு துருப்புக்களை பராமரிப்பதற்காக ஆண்டுக்கு ரூ.2, 00,000 தொகையியும் வழங்கினார். இதன் மூலம் தக்காணத்தில் அவரது அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ள புஸ்ஸி உதவினார். கோரமண்டல் கடற்கரையில் பிரெஞ்சு நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதில் இவர் முக்கிய பங்கு வகித்தார். மைசூரைச் சேர்ந்த ஐதர் அலியும் சில ஆண்டுகள் இவரது தலைமையின் கீழ் இருந்தார்.

பொப்பிலி போர்

[தொகு]

1756 இல், புஸ்ஸி ராஜமன்றிக்கு சென்றார். அங்கு, விஜயராமராஜு புஸ்ஸியை அன்புடன் வரவேற்றார். விஜயநகர மன்னர்களுக்கும் பொப்பிலி ஆட்சியாளர்களுக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் 1757 ஜனவரி 23 அன்று பொப்பிலி போருக்கு வழிவகுத்தன. அந்தப் போரில், புஸ்ஸி விஜயராமராஜுவின் பக்கத்திலிருந்து போராடினார். பொப்பிலி கோட்டை போரில் முற்றிலுமாக இடிக்கப்பட்டது. பல பொப்பிலி வீரர்கள் கொல்லப்பட்டனர். யானமில் இன்று கூட புஸ்ஸி என்ற பெயரில் ஒரு தெரு உள்ளது.

முகலாயப் பேரரசர் இரண்டாம் ஆலங்கிருடனான உறவுகள்

[தொகு]

1755 ஆம் ஆண்டில், புது தில்லியின் சிம்மாசனத்தில் ஏறிய முகலாய பேரரசர் இரண்டாம் அலங்கிர், மராட்டிய படைகளை அடக்குவதற்கு பிரெஞ்சு துருப்புக்களின் உதவியைக் கேட்டு புஸ்ஸிக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில் ஆலங்கிர் ஆயிரம் பிரெஞ்சு துருப்புக்களை அனுப்ப முடியுமா? எனக் கேட்டிருந்தார். பிரெஞ்சுக்காரர்களின் பராமரிப்பிற்காக மிகப்பெரிய தொகையை வழங்குவதாக உறுதியளித்தார், மேலும் பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு ஆதரவாக கர்நாடகப் போர்கள்ளில் மோதல்களைத் தீர்ப்பதாகவும் உறுதியளித்தார் [1]

குடும்பம்

[தொகு]

மார்ச் 1754 இல் தூப்ளேவின் இளைய வளர்ப்பு மகள் மேரியை மணந்தார். 1759இல் ஒரு மகள் பிறந்தவுடன் பாரிஸில் இறந்து போனார்.

இறப்பு

[தொகு]

இவர், 7 ஜனவரி 1785இல் பாண்டிச்சேரியில் இறந்தார்.

மேலும் காண்க

[தொகு]

குறிப்புகள்

[தொகு]
  1. Regani, Sarojini (1988). Nizam-British Relations, 1724-1857 - Sarojini Regani - Google Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170221951. பார்க்கப்பட்ட நாள் 2012-08-02.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்க்விஸ்_தெ_புஸ்ஸி&oldid=3150493" இலிருந்து மீள்விக்கப்பட்டது