உள்ளடக்கத்துக்குச் செல்

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி என்பது தமிழ்நாட்டில் செயல்பட்டுவரும் தேர்தலில் ஈடுபடாத ஒரு கட்சியாகும். இதை வே. ஆனைமுத்து பெரியார் மறைந்து சில ஆண்டுகள் கழித்து 1976 இல் ’பெரியார் சம உரிமைக் கழகம்’ என்ற பெயரில் தோற்றுவிககப்பட்டுப் பின்னர் 1988 இல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இது விகிதாச்சார இடஒதுக்கீடு கோரி தொடர்ந்து போராடி வருகிறது.

இந்த அமைப்பின் பொதுச் செயலாளராகச் செயல்படும் தோழர் வே. ஆனைமுத்து மண்டல் குழு அமைக்கப் படவும், அக்குழுவின் அறிக்கை வெளியிடப்படவும் காரணமாக இருந்தார். இவற்றிற்கு, தமிழ் நாட்டில் மட்டுமில்லாமல் வட இந்தியாவிலும் இவர் போராட்டங்கள் நடத்தியதும், அப்போதைய பிரதமர், குடியரசுத் தலைவர், அமைச்சர்கள் ஆகியோரையும், அதிகாரிகளையும் சந்தித்து இவர் தன் கோரிக்ககை மனுவை அளித்ததே காரணம். அவ்வாறே, தமிழ் நாட்டில் எம்.ஜி.ஆர் ஆட்சிக் காலத்தில் இடஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை எதிர்த்து போராடினார். பின்னர் மக்களவைத் தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு அந்த பொருளாதார அளவுகோலை எம்.ஜி.ஆர் நீக்கினார். இதன் தொடர்ச்சியாக இட ஒதுக்கீட்டின் அளவை 68% அளவாக உயர்த்தினார். இதற்கு அப்போதைய அமைச்சர் பன்ருட்டி எஸ். ராமச்சந்திரன் வாயிலாக முயற்சி செய்தவர் வே. ஆனைமுத்துவே.

2010ஆம் ஆண்டில் தோழர் வே. ஆனைமுத்து தொகுத்த பெரியாரின் எழுத்தும், பேச்சும் கொண்ட 20 தொகுப்பு நுல்களை முதல்வர் கலைஞர் வெளியிட்டுள்ளார்.