மார்கெல் கிட்டெல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Marcel Kittel
மார்கெல் கிட்டெல்

மார்கெல் கிட்டெல் (Marcel Kittel) என்பவர் ஒரு செருமானிய மிதிவண்டிப் பந்தய வீரராவார். இளநிலைப் பிரிவில், 23 வயதிற்குட்பட்டோர் பிரிவில் உலகளவில் வெண்கலப் பதக்கம் வென்றார். தன்னுடைய இவ்வெற்றிக்குப் பிறகு இவர் விரைவோட்ட வீரராகப் பங்கேற்க முடிவு செய்தார். இதனால் ஐந்து போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்றார். 2011 ஆம் ஆண்டில் உலகளவில் இரண்டாவது வெற்றியாளர் என கணிக்கப்பட்டார்.[1] இவர் 2011-ஆம் ஆண்டில் ஒரு தொழில்முறை வீரர் ஆனபோது, அவர் விரைவோட்டங்களில் நிபுணத்துவம் பெற்றார், மூன்று பேரோட்டப் போட்டிகளில் 19 நிலைகளை வென்றார். மேலும், இவர் தனது தொழில்முறை வாழ்க்கையில் 89 வெற்றிகளைப் பெற்றார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Ballinger, Alex (9 May 2019). "Marcel Kittel quits Katusha-Alpecin". Cycling Weekly (TI Media). https://www.cyclingweekly.com/news/racing/marcel-kittel-quits-katusha-alpecin-422725. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கெல்_கிட்டெல்&oldid=3510697" இலிருந்து மீள்விக்கப்பட்டது