மார்கியைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Markeyite
பொதுவானாவை
வகைகார்பனேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCa9(UO2)4CO3)13 • 28H2O
இனங்காணல்
படிக அமைப்புசெஞ்சாய்சதுரம்
மேற்கோள்கள்[1]

மார்கியைட்டு (Markeyite) என்பது Ca9(UO2)4CO3)13 • 28H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும் யுரேனைல் கார்பனேட்டு கனிமம் என்று வகைப்படுத்தப்படும் இது அமெரிக்காவின் யூட்டா மாநிலத்திலுள்ள மார்கி சுரங்கத்தில் கண்டறியப்பட்டது. கனிமவியலாளர் அந்தோனி ஆர்.காம்ஃப் அமெரிக்காவின் லாசு ஏஞ்சல்சு மாகாணத்திலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இக்கனிமத்தின் கட்டமைப்பைக் கண்டறிந்தார். [2]

இந்த கனிமத்திற்கான இணையான ஒரு வகை பொருள் அமெரிக்காவின் லாசு ஏஞ்சல்சு மாகாணத்திலுள்ள இயற்கை வரலாற்று அருங்காட்சியகம் மற்றும் உருசியாவின்[3] அறிவியல் கல்விக்கழகத்திலுள்ள பெர்சுமேன் கனிமவியல் அருங்காட்சியகம் ஆகியவற்றின் தொகுப்புகளில் உள்ளது.

இருப்பிடம்[தொகு]

அமெரிக்காவின் மார்கி சுரங்கம், சிவப்பு பள்ளத்தாக்கு, வெண் பள்ளத்தாக்கு மாவட்டம், சான் யுவான் கோ, யூட்டா போன்றவை இக்கனிமத்தின் இருப்பிடங்களாக கருதப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Markeyite".
  2. "Markeyite: Markeyite mineral information and data". www.mindat.org. பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
  3. "Markeyite | Carbon Mineral Challenge". mineralchallenge.net (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-09-04.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கியைட்டு&oldid=2962010" இலிருந்து மீள்விக்கப்பட்டது