உள்ளடக்கத்துக்குச் செல்

மார்கழி இசை விழா (சென்னை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் தொடங்கி டிசம்பர் மாதம் முழுதும் கருநாடக இசைக் கச்சேரிகள் நடத்தப்படுகின்றன.[1] இவ்விதம் நடக்கும் இசை விழாவே டிசம்பர் இசை விழா அல்லது மார்கழி இசைவிழா என்றழைக்கப்படுகிறது. இவ்விழா நடக்கும் இப்பருவம், டிசம்பர் சீசன் எனப் பரவலாக சொல்லப்படுகிறது. மெட்ராஸ் மியூசிக் சீசன் என்றும் அக்காலம் முதற்கொண்டு சொல்லப்பட்டு வருகிறது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாது வெளிநாடுகளிலிருந்தும், கலைஞர்கள் மற்றும் நேயர்கள் பெருமளவில் இவ்விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

வரலாறு

[தொகு]

1927 ஆம் ஆண்டு மியூசிக் அகாதெமி தொடங்கப்பட்டதைக் குறிக்கும் முகமாக இசை விழா கொண்டாடப்பட்டது. ஒரு மாத காலம் நீடிக்கும் இந்த விழாவில் கச்சேரிகள், ஹரி கதைகள், செயல் விளக்கத்துடன்கூடிய இசை விரிவுரைகள், விருது மற்றும் பட்டம் வழங்குதல் போன்றவை பாரம்பரியமாக நிகழ்த்தப்படுகின்றன. காலப்போக்கில் நடனம் மற்றும் நாடகங்களும் இவ்விழாவில் இடம்பெற்றன.

சிறப்பு

[தொகு]

டிசம்பர் இசை விழா, தற்போது பெரிய அளவில் வளர்ச்சியுற்று உலகின் மிகப்பெரிய கலை விழாவாக விளங்குகிறது.[2] ஒரு புள்ளி விவரம்:
டிசம்பர் 2004 - ஜனவரி 2005 பருவத்தில் 1200 கலை நிகழ்ச்சிகள், 600 கலைஞர்களால் நிகழ்த்தப்பட்டன.
700 - வாய்ப்பாட்டு நிகழ்ச்சிகள்
250 - இசைக்கருவி நிகழ்ச்சிகள்
200 - நடன நிகழ்ச்சிகள்
50 - நாடகம் மற்றும் பிற நிகழ்ச்சிகள்

கலை மன்றங்களின் பட்டியல்

[தொகு]

நிகழ்ச்சிகள் கலை மன்றங்களால் ஏற்பாடு செய்யப்படுகின்றன. பிரபலமான கலை மன்றங்கள் இங்கு பட்டியலிடப்பட்டுள்ளன:

மேற்கோள்கள்

[தொகு]
  1. "இசை அரங்கங்கள்". விளக்கம். தி இந்து தமிழ். 9 திசம்பர் 2017. பார்க்கப்பட்ட நாள் 9 திசம்பர் 2017.
  2. "' MUSIC MUSINGS ' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் எழுதப்பட்ட ஒரு தலையங்கம்". Archived from the original on 2005-02-07. பார்க்கப்பட்ட நாள் 2012-02-02.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கழி_இசை_விழா_(சென்னை)&oldid=3646960" இலிருந்து மீள்விக்கப்பட்டது