மார்கரெட் ஹாமில்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்கரெட் ஹாமில்டன்
1995 இல் மார்கரெட் ஹாமில்டன்
பிறப்புமார்கரெட் ஹீல்பீல்ட்
ஆகத்து 17, 1936 (1936-08-17) (அகவை 87)
போவாலி, இண்டியானா,ஐக்கிய அமெரிக்கா.
கல்விஏர்ல்ஹாம் கல்லூரி
மிச்சிகன் பல்கலைக்கழகம்
பணிஹாமில்டன் டெக்னாலஜி நிறுவனத்தின் முதன்மைச் செயல் அலுவலர்.
கணினி அறிவியலாளர்
வாழ்க்கைத்
துணை
ஜேம்ஸ் காக்ஸ் ஹாமில்டன் (மணவிலக்கு)
பிள்ளைகள்லாரன் ஹாமில்டன்
உறவினர்கள்ஜேம்ஸ் காக்ஸ் சேம்பர்ஸ்
விருதுகள்சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம் [1]

மார்கரெட் ஹெபீல்ட் ஹாமில்டன் (Margaret Hamilton (scientist), ஆகஸ்ட் 17, 1936 பிறந்தார்) [2] ஒரு அமெரிக்கன் கணினி அறிவியலாளரும் , கணினி பொறியாளர் மற்றும் வணிக உரிமையாளரும் ஆவார். " மென்பொருள் பொறியியல் " என்ற சொல் இவரால் உருவாக்கப்பட்டதாகும். ஹாமில்டன் மாசாச்சூசெட்சு தொழில்நுட்பக் கழகத்தில் டிராப்பர் ஆய்வகத்தில் மென்பொருள் பொறியியல் பிரிவின் இன் இயக்குநராக இருந்தார் [3] இந்நிறுவனம் அப்போலோ விண்வெளித் திட்டத்தில் பயணித்த விமானத்திற்கான மென்பொருளை உருவாக்கிய நிறுவனமாகும்.[4] 1986 இல், இவர் கேம்பிரிட்ஜ், மாசசூசெட்ஸில் உள்ள ஹாமில்டன் டெக்னாலஜிஸ். ஐ என் சி. ஐ, டாட். இன். என்ற நிறுவனத்தை உருவாக்கி அதன் முதன்மை செயல் அலுவலராகவும் ஆனார் இந்த நிறுவனம் யுனிவர்சல் சிஸ்டம்ஸ் லாங்குவேஜ் என்ற மென்பொருள் வடிவமைப்பை விரிவாக்கம் செய்வதை அடிப்படையாகக் கொண்டது.[5]

ஹாமில்டன், அவர் ஈடுபட்டுப் பங்காற்றிய 130 க்கும் மேற்பட்ட ஆவணங்கள், 60 செயல் திட்டங்கள் மற்றும் ஆறு முக்கிய நிகழ்ச்சிகளைப் பற்றிய அறிக்கைகள் ஆகியவற்றை வெளியிட்டுள்ளார்

2016 ஆம் ஆண்டு நவம்பர் 22, அன்று, நாசாவின் அப்பல்லோ நிலாப் பயணங்கள் பற்றிய விமானப்பயண மென்பொருள் வளர்ச்சியை முன்னெடுத்துச் சென்றமைக்காக, அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது.[1][6]

இளமையும் கல்வியும்[தொகு]

மார்கரெட் ஹீபீல்ட், 1936, ஆகஸ்ட் 17 ஆம் நாள் இந்தியானாவின் பியோலியில் , கேனெத் ஹீபீல்ட் மற்றும் ரூத் எஸ்தர் ஹீபீல்ட் (என் பிரிடிங்டன்)[7] ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். 1954 இல் ஹான்காக் உயர்நிலைப் பள்ளியில் பட்டம் பெற்ற பிறகு, 1955 இல் மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் கணிதமும், 1958 இல் எர்ல்ஹாம் கல்லூரியில் சிறிய தத்துவத்தில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.[8][9] அவர் ஹார்வர்டில் தனது இளங்கலை பட்டப்படிப்பை படித்துக்கொண்டிருக்கும் பொழுதே தனது கணவரின் உதவியுடன் , பட்டம் பெறும் இறுதி இலக்குடன், உயர்நிலைப் பள்ளி கணிதத்தையும் பிரெஞ்சு மொழியையும் சுருக்கமாகக் கற்றுக் கொண்டார். பிராண்டேஸ் பல்கலைக்கழகத்தில் சுருக்க கணிதத்தில் பட்டப்படிப்பு படிப்பை மேற்கொள்வதற்கான நோக்கத்துடன் , மாசசூசெட்சின் பாஸ்டனுக்குச் சென்றார்.

சுருக்க கணிதத்தை தொடர விரும்பும் மார்கரெட்டுக்கு ஒரு பெண் கணிதப் பேராசிரியர் மாதிரியாக விளங்குவதாகச் சுட்டிக்காட்டுகிறார்.மார்கரட்டின் தந்தை ஒரு தத்துவஞானியும் கவிஞரும் ஆவார். மேலும் அவரது தாத்தா, குவாக்கர் மினிஸ்டர் பள்ளியின் பள்ளி தலைமை ஆசிரியர் ஆவார். இவர்கள் உட்பட தொழில்நுட்ப உலகிற்கு வெளியே மார்கரெட்டிற்கு பல ஊக்குவிப்பாளர்கள் இருந்தனர். இவர்களே இவர் தத்துவம் பயிலக் காரணமாக இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "White House honors two of tech's female pioneers". பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.
  2. American Women of Science Since 1900. ABC-CLIO.
  3. "Margaret Hamilton 2017 Fellow". Computer History Museum.
  4. NASA அலுவலகம் லாஜிக் வடிவமைப்பு "மார்கரெட் ஹாமில்டன் பற்றி" (கடைசியாக திருத்தப்பட்ட: பிப்ரவரி 03, 2010)
  5. Universal Systems Language: Lessons Learned from Apollo. 
  6. "President Obama Names Recipients of the Presidential Medal of Freedom". பார்க்கப்பட்ட நாள் 7 June 2017.
  7. "Ruth Esther Heafield". Wujek-Calcaterra & Sons. பார்க்கப்பட்ட நாள் December 15, 2014.
  8. "2009 Outstanding Alumni and Distinguished Service Awards". Earlham College. Archived from the original on மே 18, 2015. பார்க்கப்பட்ட நாள் December 15, 2014.
  9. "Pioneers in Computer Science". Archived from the original on 2016-09-17.
  10. "Margaret Hamilton: The Untold Story of the Woman Who Took Us to the Moon" (in en-US). Futurism. 2016-07-20. http://futurism.com/margaret-hamilton-the-untold-story-of-the-woman-who-took-us-to-the-moon/. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரெட்_ஹாமில்டன்&oldid=3821913" இலிருந்து மீள்விக்கப்பட்டது