உள்ளடக்கத்துக்குச் செல்

மார்கரெட் பவமணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மார்கரெட் பவமணி
பிறப்பு1897
பாப்பினிச்சேரி, கண்ணூர் மாவட்டம், கேரளம்
அறியப்படுவதுகேரள மகிளா தேச சேவிகா சங்கத்தின் தலைவர்
அரசியல் இயக்கம்வெள்ளையனே வெளியேறு இயக்கம், சுதேசி இயக்கம்
வாழ்க்கைத்
துணை
பெஞ்சமின் பவமணி

மார்கரெட் பவமணி (Margaret Pavamani) இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த இந்திய விடுதலை வீரரும், சமூக சேவகரும் ஆவார். இவர் உப்புச் சத்தியாகிரக இயக்கத்தில் ஒரு முக்கிய நபராக இருந்தார்.[1] இவர் பிரபல வழக்கறிஞரும் சுதந்திர போராட்ட வீரருமான பெஞ்சமின் பவமணியின் மனைவி ஆவார்.

வாழ்க்கை

[தொகு]

மார்கரெட் 1897 ஆம் ஆண்டு கேரளத்தின் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பாப்பினிச்சேரியில் பிறந்தார். இவர் கோழிக்கோட்டில் வழக்கறிஞராக இருந்த பெஞ்சமின் பவமணியின் மனைவி ஆவார். 1930 இல் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார்.[2]

ஏப்ரல் 25,1931 அன்று ஏ. வி. குட்டிமாலு அம்மாலுடன் சேர்ந்து திருச்சூர் நகரில் நடுத்தர வர்க்க குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் குழுவுடன் மறியல் போராட்டத்தை ஏற்பாடு செய்தார். மலபாரில் நடந்த இயக்கத்தில் பெண்களின் பங்களிப்பைத் திரட்டுவதில் இவரது முயற்சிகள் முக்கியப் பங்கு வகித்தன. கள்ளக்கடைகள் மற்றும் வெளிநாட்டு ஆடைகளை விற்கும் கடைகளையும் தீவிரமாக முற்றுகையிட்டார். இந்த நோக்கத்திற்காக 1932 இல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இவர் கோழிக்கோடு நகராட்சி மன்ற உறுப்பினராகப் பணியாற்றினார். 1931 ஆம் ஆண்டில், பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதையும் சமூகப் பிரச்சினைகளில் அவர்களின் ஈடுபாட்டை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்ட[3] கேரள மகிளா தேச சேவிகா சங்கத்தின் [4] தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அமைப்பு பெண்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்தவும், சுதந்திரத்திற்கான பரந்த போராட்டத்தில் பங்கேற்கவும் ஒரு தளமாக மாறியது.[5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gandhi and the Mass Movements (in ஆங்கிலம்). Atlantic Publishers & Distri.
  2. The History of Freedom Movement in Kerala: 1885-1938 (in ஆங்கிலம்). Government of Kerala. 1970. p. 222.
  3. "Verkot Hose, calicut". indianculture.gov.in. Retrieved 2024-12-30.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. "BA HISTORY" (PDF). UNIVERSITY OF CALICUT. Retrieved 2024-12-31.{{cite web}}: CS1 maint: url-status (link)
  5. "Margaret Pavamani". amritmahotsav.nic.in.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மார்கரெட்_பவமணி&oldid=4365149" இலிருந்து மீள்விக்கப்பட்டது