மார்கரெட் எம். எசுலேவுட்டு
தோற்றம்
மார்கரெட் எம். எசுலேவுட்டு (Margaret M. Heslewood) என்பவர் ஆசுத்திரேலிய நாட்டைச் சேர்ந்த ஒரு தாவரவியலாளர் ஆவார். மார்கரெட் மேரி எசுலேவுட்டு என்ற பெயராலும் அறியப்படுகிறார். நியூ சவுத் வேல்சின் தேசிய மூலிகை மையத்தில் பணிபுரியும் இவர், பிரையோபைட்டுகளில், குறிப்பாக ஈரமான இடங்களில் வளரும், சிறிய, பச்சை நிற ஈரலுருத் தாவரங்கள் வகைபிரிப்பில் கவனம் செலுத்துகிறார்.[1]
ஆத்திரேலிய தாவரவியலாளர் மார்கோ எஃப். துரெட்டோவுடன் இணைந்து, உருடேசியே குடும்பத்தைச் சேர்ந்த பூக்கும் தாவர இனமான சயனோதம்னசின் ஏற்றுக்கொள்ளப்பட்ட 23 இனங்களில் 21 இனங்களை இவர் ஆராய்ச்சி செய்து விவரித்துள்ளார்.[2]
ஒரு தாவரவியல் பெயரை மேற்கோள் காட்டும்போது இந்த நபரை ஆசிரியர் என்று குறிக்க நிலையான ஆசிரியர் சுருக்கமான எசுலேவுட்டு என்ற பெயர் பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Margaret Heslewood". Botanic Gardens of Sydney (in ஆங்கிலம்). Retrieved 2025-07-03.
- ↑ "Cyanothamnus Lindl". Plants of the World Online (in ஆங்கிலம்). Retrieved 2025-07-03.