உள்ளடக்கத்துக்குச் செல்

மாரி. அறவாழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாரி. அறவாழி (பிறப்பு: பிப்ரவரி 6, 1935 இறப்பு: அக்டோபர் 3, 1999) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். மா.சேதுரத்தினம் எனும் இயற்பெயருடைய இவர் புனைபெயராக மாரி. அறவாழி எனும் பெயரினை வைத்துக் கொண்டார். சேலம் நகராட்சிக் கல்லூரியில் இடைநிலைக் கல்வியை முடித்த பின்பு இந்திய அஞ்சல் துறைப் பணியில் சேர்ந்தார். அஞ்சல் துறையில் பணியாற்றிக் கொண்டே இவர் படைத்த சிறுகதைகள் நானூற்றுக்கும் மேற்பட்டவை. இவை பல்வேறு இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. [மேற்கோள் தேவை] இவர் நாற்பது குமுகாயப் புதினங்களையும், ஒரு வரலாற்றுப் புதினத்தையும் படைத்துள்ளார்.[மேற்கோள் தேவை] சென்னைத் தொலைக்காட்சியில் ஒரு நாடகத்தையும், கட்டுரைகளையும் படைத்துள்ளார். இவரது பல சிறுகதைகள் ஆங்கிலம், இந்தி,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் ஆகிய மொழி இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. [மேற்கோள் தேவை]

எழுதியவற்றில் சில கதை நூல்கள்[தொகு]

ஆடக சுந்தரி (1989)

வேள்வி (1991)

தங்கம் எங்கே போகிறாள்? (1992)

இன்னொரு துவக்கம் (1994)

உயிர் வீணை (1996)

நீலா (1999)

புதைமணல் (1999)

சிறப்புகள்[தொகு]

  • கோடுகளும் புள்ளிகளும்,ஆடக சுந்தரி ஆகிய இரண்டு புதினங்களும் தமிழ்நாட்டு அரசின் சிறந்த படைப்புகளுக்கான பரிசைப் பெற்றன. [மேற்கோள் தேவை]
  • பேரறிஞர் அண்ணா ஆனந்த விகடனில் 'கருமி' என்ற பெயரில் வெளிவந்த இவரது சிறுகதையை செட்டிநாடு 'தனவணிகர்' நிகழ்ச்சியில் மேற்கோள் காட்டி உரையாற்றியிருக்கிறார்.[மேற்கோள் தேவை]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரி._அறவாழி&oldid=2637971" இலிருந்து மீள்விக்கப்பட்டது