மாரி, துருக்குமனித்தான்

ஆள்கூறுகள்: 37°36′N 61°50′E / 37.600°N 61.833°E / 37.600; 61.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மேரி, துர்க்மெனிஸ்தான்
மேரி, துர்க்மெனிஸ்தான் is located in துருக்மெனிஸ்தான்
மேரி, துர்க்மெனிஸ்தான்
மேரி, துர்க்மெனிஸ்தான்
துருக்மெனிஸ்தானில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 37°36′N 61°50′E / 37.600°N 61.833°E / 37.600; 61.833
நாடுதுருக்மெனிஸ்தான்
மாகாணம்மேரி
அரசு
 • ஹக்கீம்காககெல்டி குர்பனோவ்
ஏற்றம்223 m (732 ft)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்126,000
நேர வலயம்UTC+5

மேரி (Mary, முன்னர் மெர்வ், மேரு மற்றும் மார்கியானா என்று அழைக்கபட்டது) என்பது துர்க்மெனிஸ்தானின் காராகும் பாலைவனத்தின் ஒரு பாலைவனச்சோலையில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இது முர்கப் ஆற்றுப்பகுதியில் அமைந்துள்ளது. மேலும் இது மேரி மாகாணத்தின் தலைநகரமாகும். 2010 ஆம் ஆண்டில், மேரியின் மக்கள் தொகை 126,000 என்று இருந்தது. இதுவே 1989 ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது 92,000 என இருந்தது.[1] பண்டைய நகரமான மெர்வின் இடிபாடுகள் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ளன.

வரலாறு[தொகு]

பண்டைய நகரமான மெர்வ் பட்டுப் பாதையில் ஒரு பலைவனச் சோலை நகரமாக இருந்தது. இது 12 ஆம் நூற்றாண்டில் மங்கோலியர்களால் அழிக்கப்பட்டு இதன் மக்கள் துடைத்தழிக்கபட்டனர். பட்டுப் பாதையில் அமைந்திருப்பதால், காலப்போக்கில் இது புத்துயிர் பெற்றது. 19 ஆம் நூற்றாண்டில் நாடோடிகளான தெக் போக்கிரிகளால் மீண்டும் அழிக்கப்பட்டது.

இது 1884 இல் உருசியப் பேரரசால் கைப்பற்றபட்டது. இதன் விளைவாக ஆப்கானிஸ்தான், பிரித்தானிய படைகள் மற்றும் உருசிய பேரரிசின் படைகளுக்கு இடையே பஞ்ச்தே சம்பவம் ( குஷ்கா போர் ) நிகழ தூண்டுகோளானது. நவீன குடியேற்றம் அந்த ஆண்டின் பிற்பகுதியில் உருசிய இராணுவ மற்றும் நிர்வாக பதவி உருவாக்கபட்டது.

கிரிமியன் போருக்குப் பின்னர் பிரித்தானிய மற்றும் உருசிய துருப்புகளுக்கு இடையேயான முதல் நேரடி மோதலில் 1918 ஆகத்தில் 40 பஞ்சாபி துருப்புக்கள் மற்றும் ஒரு பிரித்தானிய அதிகாரி அடங்கிய இயந்திரத் துப்பாக்கிப் பிரிவைக் கொண்ட பிரித்தானிய இந்திய இராணுவத்தின் ஒரு படை மெர்விற்கு அருகிலுள்ள போல்ஷிவிக்குகளை எதிர்த்தது.[2]

பரந்த அளவில் நீர்ப்பாசனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பருத்தி உற்பத்தி மையமாக சோவியத் ஒன்றியத்தால் மேரி உருவாக்கப்பட்டது. 1968 ஆம் ஆண்டில், நகருக்கு மேற்கே 20 கிலோமீட்டர் தொலைவில் இயற்கை எரிவளியின் பெரும் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டது.[சான்று தேவை]

சோவியத் ஒன்றியத்தின் சரிவு மற்றும் துர்க்மெனிஸ்தானின் விடுதலை அறிவிப்புக்குப் பிறகு, 1992 மே 18 அன்று மேரி நகரானது மேரி மாகாணத்தின் தலைநகராக மாறியது.

2000 களில், நகரில் பல வீதிகள் மற்றும் பெரிய குடியிருப்பு வசதிகள் நிர்மாணிக்கபட்டன. நகரில் புதிய வானூர்தி நிலைய முனையம், துர்க்மென் மாநில மின் பொறியியல் நிறுவனம், அரங்கம், நூலகம், வரலாற்று அருங்காட்சியகம், ருஹியேட் அரண்மனை, மார்குஷ் ஹோட்டல், ஒரு மருத்துவ சோதனை மையம், ஈனே மஹ்ரி மருத்துவ மையம், குர்பங்குலி ஹஜ்ஜி பள்ளிவாசல், ஒரு விளையாட்டு அரங்கம், ஒரு குதிரையேற்ற வளாகம், ஒரு உள்ளரங்க நீச்சல் குளம், ஒரு தொடருந்து நிலையம் எனவும் பெருமளவிலான வீட்டு கட்டுமானமும் இன்னும் தொடர்கிறது.[3]

2012 ஆம் ஆண்டில், இந்த நகரம் சிஐஎஸ் அமைப்பால் கலாச்சார தலைநகரங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது.[4]

பொருளாதாரம்[தொகு]

மேரி நகரானது துர்க்மெனிஸ்தானின் நான்காவது பெரிய நகரம் ஆகும். இது நாட்டின் இரண்டு பெரிய ஏற்றுமதி தொழில்களான இயற்கை எரிவளி மற்றும் பருத்தி தொழில்களுக்கான ஒரு பெரிய தொழில்துறை மையமாகவும் உள்ளது. மேலும் இது பருத்தி, தானியங்கள், தோல், கம்பளி ஆகியவற்றிற்கான வர்த்தக மையமாகும்.

கலாச்சாரம்[தொகு]

மேரியில் உலகின் மிகப்பெரிய யூர்ட்

மேரி அதன் பிராந்திய அருங்காட்சியகத்திற்காக பெயர் பெற்றது. இந்த நகரம் பண்டைய நகரமான மெர்வின் சிதைவுகள் உள்ள இடங்களுக்கு அருகில் உள்ளது.

விளையாட்டு[தொகு]

நகரத்தின் முக்கிய கால்பந்து அணி மேரி ஸ்டேடியத்தில் விளையாடும் மெர்வ் மேரி ஆகும்.

குறிப்பிடத்தக்க நபர்கள்[தொகு]

  • அக்மமெடோவ் மைராட்கெல்டி, அரசியல்வாதி
  • காதிர் சப்பர்லியேவ், அரசியல்வாதி
  • யெலினா பொன்னர், மனித உரிமை ஆர்வலர்
  • எட்வார்ட் அசாடோவ், கவிஞர் மற்றும் எழுத்தாளர்

காட்சியகம்[தொகு]

குறிப்புகள்[தொகு]

  1. Population census 1989 பரணிடப்பட்டது 18 சனவரி 2012 at the வந்தவழி இயந்திரம், Demoscope Weekly, No. 359–360, 1–18 January 2009 (search for Туркменская ССР) (in உருசிய மொழி)
  2. On Secret Service East of Constantinople by Peter Hopkirk, John Murray, 1994
  3. "Гостеприимство древнего и вечно юного города". Archived from the original on 2019-04-02. பார்க்கப்பட்ட நாள் 2020-12-21.
  4. Туркменский город Мары получил сертификат культурной столицы СНГ
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரி,_துருக்குமனித்தான்&oldid=3925549" இலிருந்து மீள்விக்கப்பட்டது