மாரியானோ ரஜோய்
மாரியானோ ரஜோய் | |
---|---|
எசுப்பானிய பிரதமர் | |
பதவியில் 21 திசம்பர் 2011 | |
ஆட்சியாளர் | ஆறாம் பிலிப்பு |
Succeeding | ஜோசு லூயி ரோட்ரிகோசு சபடேரோ |
எதிர்க்கட்சித் தலைவர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 17 April 2004 | |
முன்னையவர் | ஜோசு லூயி ரோட்ரிகோசு சபடேரோ |
பின்னவர் | ஆல்பிரெடோ பெரெசு ருபால்காபா (தெரிவு) |
பிரெசிடென்சி அமைச்சர் | |
பதவியில் 9 சூலை 2002 – 3 செப்டம்பர் 2003 | |
பிரதமர் | யோசே மாரியா அசுனர் |
முன்னையவர் | யுவான் ஓசே லூகாசு |
பின்னவர் | யாவியர் அரெனாசு |
பதவியில் 27 ஏப்ரல் 2000 – 27 பெப்ரவரி 2001 | |
பிரதமர் | யோசே மாரியா அசுனர் |
முன்னையவர் | பிரான்சிஸ்கோ அல்வரெசு காசுகோசு |
பின்னவர் | யுவான் ஓசே லூகாசு |
உள்துறை அமைச்சர் | |
பதவியில் 27 பெப்ரவரி 2001 – 9 சூலை 2002 | |
பிரதமர் | ஓசே மாரியா அசுனர் |
முன்னையவர் | ஜைம் மேயர் ஒரேயா |
பின்னவர் | ஏஞ்செல் அசெபெசு |
முதல் எசுப்பானிய துணைப் பிரதமர் | |
பதவியில் 27 ஏப்ரல் 2000 – 3 செப்டம்பர் 2003 | |
பிரதமர் | ஓசே மாரியா அசுனர் |
முன்னையவர் | பிரான்சிஸ்கோ அல்வேரசு காசுகோசு |
பின்னவர் | ரோட்ரிகோ ராதோ |
கல்வி மற்றும் பண்பாட்டு அமைச்சர் | |
பதவியில் 20 சனவரி 1999 – 27 ஏப்ரல் 2000 | |
பிரதமர் | ஓசே மாரியா அசுனர் |
முன்னையவர் | எசுபெரன்சா அகுய்ர் |
பின்னவர் | பிலர் டெல் காஸ்டிலோ (கல்வி, பண்பாடு மற்றும் விளையாட்டு) |
பொதுநிர்வாக அமைச்சர் | |
பதவியில் 4 மே 1996 – 20 சனவரி 1999 | |
பிரதமர் | ஓசே மாரியா அசுனர் |
முன்னையவர் | யோன் லெர்மா |
பின்னவர் | ஏஞ்செல் அசெபெசு |
நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 மார்ச் 2004 | |
தொகுதி | மாட்ரிட் |
பதவியில் 22 சூன் 1986 – 14 மார்ச் 2004 | |
தொகுதி | பொன்டெவெத்ரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மாரியானோ ரஜோய் பிரேய் மார்ச்சு 27, 1955 சாந்தியாகோ தே கோம்போசுதேலா, பிரெஞ்சு எசுப்பானியா |
அரசியல் கட்சி | மக்கள் கட்சி (1989–நடப்பு) |
பிற அரசியல் தொடர்புகள் | மக்கள் கூட்டணி (1989 முன்பு) |
துணைவர் | எல்விரா ஃபெர்னாண்டசு பால்போயா(1996–இன்றுவரை) |
பிள்ளைகள் | மாரியானோ, யுவான் |
முன்னாள் கல்லூரி | சாந்தியாகோ தே கோம்போசுதேலா பல்கலைக்கழகம் |
தொழில் | பத்திரப் பதிவாளர் |
கையெழுத்து | |
இணையத்தளம் | கட்சி இணையதளம் |
மாரியானோ ரஜோய் பிரேய் (Mariano Rajoy Brey, எசுப்பானிய ஒலிப்பு: [maˈɾjano raˈxoi̯]; பிறப்பு 27 மார்ச் 1955) எசுப்பானியத்தின் மக்கள் கட்சி (எசுப்பானியம்: Partido Popular )யைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் திசம்பர் 21, 2011 அன்று முதல் நாட்டின் பிரதமராக பதவி வகிப்பவரும் ஆவார்.[1] சாந்தியாகோ தே கோம்போசுதேலா, கலீசியாவில் பிறந்த ரஜோய், சாந்தியாகோ தே கோம்போசுதேலா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். தமது 24வது அகவையிலேயே எசுப்பானியாவின் குடிசார் சேவைப் பணிக்கான நுழைவுத்தேர்வில் வெற்றிபெற்று மிகச்சிறிய வயதில் பத்திரப் பதிவாளராக பணியாற்றினார்.
ஹோயே மாரியா அசுனார் அமைச்சரவையில் பல அமைச்சுப்பதவிகளில் பணியாற்றியுள்ள ரஜோய் 2004 எசுப்பானியத் தேர்தல்களில் பிரதமர் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் 2004ஆம் ஆண்டு நிகழ்ந்த மாட்ரிட் தொடர்வண்டி குண்டுவெடிப்புகளின் பின்னணனியில் அந்தத் தேர்தலில் எதிர்கட்சியாக விளங்கிய எசுப்பானிய சோசலிச தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெற்றார். 2011ஆம் ஆண்டுத் தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ எசுப்பானியாவின் புதிய பிரதமராக மாரியானோ ரஜோய் பதவியேற்பு, விக்கிசெய்திகள், திசம்பர் 23, 2011.