மாரிதாஸ் மலைச்சாமி
திரு மாரிதாஸ் மலைச்சாமி Māridhās Malaisāmy | |
|---|---|
| பிறப்பு | மாரிதாஸ். ம 6 மார்ச் 1984 மதுரை, தமிழ்நாடு, இந்தியா[1] |
| தேசியம் | இந்தியன் |
| கல்வி | BE, ME |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 2017 |
| அறியப்படுவது | Youtube பதில்கள் |
| சமயம் | இந்து |
| யூடியூப் தகவல் | |
| தகவலோடைகள் | |
| சந்தாதாரர்கள் | 492,000 |
16 டிசம்பர் 2021 அன்று தகவமைக்கப்பட்டது | |
| வலைத்தளம் | |
| maridhasanswers.com | |
மாரிதாஸ் மலைச்சாமி (Māridhās Malaichāmy),[2] அவரது யூடியூப் சேனலான Maridhas Answers மூலம் அறியப்பட்டவர், தமிழ்நாட்டின் மதுரையைச் சேர்ந்த ஒரு யூட்டியூபர், பேராசிரியர், அரசியல் விமர்சகர் சமூக ஆர்வலர் மற்றும் நூலாசிரியர்.[3] அவர் தேசியவாத சித்தாந்தத்தை ஆதரிப்பவர்.[4][5][6][7][8]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]இவர் 6 மார்ச் 1984 இல் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் நகரில் தாய் அமுதா மற்றும் தந்தை மலைச்சாமி ஆகியோருக்கு பிறந்தார். அவர் தற்போது மதுரை அண்ணாநகரில் தனது அலுவலகத்தை தலைமையிடமாகக் கொண்டு வசித்து வருகிறார்.[9] இவருக்கு மகேஷ் மற்றும் சதீஷ் என்ற இரு சகோதரர்கள் உள்ளனர்.[10] பொறியியலில் மதுரை SACS MAVMM கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பும், காளையார்கோவில் புனித மைக்கேல் கல்லூரியில் முதுகலைப் பட்டமும் படித்தார்.
"நான் ஏன் நரேந்திர மோடியை ஆதரிக்கிறேன்", "உள்ளாட்சித் தேர்தல் மாணவர்கள் உணர வேண்டிய உண்மை என்ன?" மற்றும் "நகர்ப்புற நக்சலிட்டிகளை நான் ஏன் வெறுக்கிறேன்" என்ற புத்தகங்களை எழுதியுள்ளார்.[11][12] உள்ளூர் அரசியலிலும் அவர் நன்கு அறிந்தவர்.
யூடியூப் செயல்பாட்டாளர்
[தொகு]மரிதாஸ், பிரதமர் நரேந்திர மோதிக்கு ஆதரவு தெரிவித்தார். இருப்பினும், அவர் தனது மாணவர்களிடமும் ஆதரவாளர்களிடமும் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்குமாறு கேட்கவில்லை, ஆனால் எந்தக் கட்சியையும் கண்மூடித்தனமாக நம்புவதற்குப் பதிலாக, அவ்வாறு செய்வதற்கு முன் ஒரு முழுமையான ஆராய்ச்சி செய்யுமாறு கேட்டுக் கொண்டார். 27 ஆகஸ்ட் 2019 அன்று #ISupportMaridhas என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து மரிதாஸ் தமிழகத்தில் கவனம் பெற்றார்.[4] திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் திமுக ஆதரவாளர்களான சில ஊடக நிறுவனங்களை அவர் தொடர்ந்து விமர்சித்து வதந்தி பரப்பியதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன.[13][14][15][16]
கோவிட் வழக்குகள்
[தொகு]மார்ச் 2020 இல், இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் பரவுவதற்கு இஸ்லாமிய சமூகத்தையும் தப்லிகி ஜமாஅத்தையும் குற்றம் சாட்டி மரிதாஸ் காணொளிகளைப் பதிவேற்றியதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தினரால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.[17][18][19] இதனடிப்படையில் திருநெல்வேலி காவல்துறையினரால் மாரிதாஸ் மீது ஏப்ரல் 2020 இல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, டிசம்பர் 16, 2021 அன்று கைது செய்யப்பட்டார்.[20][21] பின்னர் 'அமைப்பை விமர்சனம் செய்வது சமயத்தை விமர்சனம் செய்வதன்று' என்று நீதிமன்றம் இந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.[22][23][24][25]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ குமார், என். வினோத் (13 December 2021). "YouTuber Maridhas has got Tamil Nadu BJP bickering". The Federal (Chennai: The Federal). https://thefederal.com/states/south/tamil-nadu/youtuber-maridhas-has-got-tamil-nadu-bjp-bickering/.
- ↑ Regi, Abhay. "The Hindu Right's purge of progressive Tamil television newsrooms". The Caravan (in ஆங்கிலம்). Retrieved 2021-12-17.
- ↑ Neelakandan, Aravindan. "Arrest Of Ace YouTuber Maridhas No Surprise As DMK Back To Old Ways". Swarajyamag (in ஆங்கிலம்). Retrieved 2022-01-17.
- ↑ 4.0 4.1 கரிகாலன், இரா செந்தில். "மாரிதாஸ் கைதுக்கு எதிர்ப்பு: சீமான் எழுப்பும் குரலுக்குப் பின்னால் இருப்பது என்ன?". Vikatan. Retrieved 2022-01-03.
- ↑ "Madras High Court Issues Notice to Right-wing YouTuber Maridhas". NewsClick (in ஆங்கிலம்). 2020-07-30. Retrieved 2022-01-03.
- ↑ "HC notice to police on YouTuber plea | Madurai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-01-03.
- ↑ "யூடியூபர் மாரிதாஸ் மீதான வழக்கு ரத்து: உயர் நீதிமன்றம் உத்தரவு". Hindu Tamil Thisai. Retrieved 2022-01-17.
- ↑ "Maridhas Wiki, Biography, Age, Family, Images & More". wikimylinks (in அமெரிக்க ஆங்கிலம்). 2020-04-06. Retrieved 2022-01-17.
- ↑ "மாரிதாஸ்". Vikatan.com. Vikatan. n.d. Retrieved 16 December 2021.
- ↑ Kiran, Jessica (2020-07-14). "Maridhas social activist Wiki ,Bio, Profile, Unknown Facts and Family Details revealed". TheNewsCrunch (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-01-17.
- ↑ "நான் ஏன் நரேந்திர மோதியை ஆதரிக்கிறேன்? திரு.மாரிதாஸின் நூல் குறித்த ஒரு சிறு அறிமுகம்". திண்ணை. Retrieved 24 August 2025.
- ↑ Kumar, Harish (2019-08-27). "Maridhas Wiki, Biography, Age, Family, Images & More". News Bugz (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-01-17.
- ↑ "மாரிதாஸ் பரப்பிய வதந்திகள், பொய்களின் தொகுப்பு !". You Turn (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-12-17. Retrieved 2022-01-03.
- ↑ "சமச்சீர் கல்வி தொடங்கி பள்ளிக் கழிப்பறை வரையில் மாரிதாஸ் கூறிய பொய்கள் !". You Turn (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-07-22. Retrieved 2022-01-03.
- ↑ "Blogger sued by TV channel and editor over 'baseless allegations'". Deccan Herald (in ஆங்கிலம்). 2020-07-29. Retrieved 2022-01-02.
- ↑ "'No compromise with YouTuber Maridhas': Senior journalist M Gunasekaran". The News Minute (in ஆங்கிலம்). 2021-03-05. Retrieved 2022-01-02.
- ↑ "YouTuber Maridash held again for controversial video linking Muslims with Covid-19". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-12-17. Retrieved 2025-08-24.
- ↑ Staff, T. N. M. (2021-12-09). "YouTuber Maridhas arrested for 'TN turning into Kashmir' comment after chopper crash". The News Minute (in ஆங்கிலம்). Retrieved 2025-08-24.
- ↑ Staff, T. N. M. (2021-12-16). "Maridhas arrested again, this time for 2020 video on Muslims, COVID-19". The News Minute (in ஆங்கிலம்). Retrieved 2025-08-24.
- ↑ Thirumurthy, Priyanka (2020-04-05). "TN police book YouTuber Maridhas for communal videos on COVID-19". The News Minute (in ஆங்கிலம்). Retrieved 2025-08-24.
- ↑ Service, Express News (2021-12-16). "YouTuber Maridhas arrested again for video connecting Tablighi Jamaat with Covid spread". The New Indian Express (in ஆங்கிலம்). Retrieved 2025-08-24.
- ↑ The Hindu.
- ↑ Dec 23, Kaushik Kannan / TNN /; Ist, 17:00. "Madras high court quashes yet another FIR against YouTuber Maridhas | Chennai News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-01-17.
{{cite web}}:|first3=has numeric name (help); Missing|author2=(help)CS1 maint: numeric names: authors list (link) - ↑ "Madras HC quashes one more FIR lodged against YouTuber Maridhas". The New Indian Express. Retrieved 2022-01-17.
- ↑ manimegalai.a. "Maridhas Released : சண்டையில் எந்த சமரசமும் இருக்காது.. சிறையிலிருந்து வெளியே வந்ததும் தெறிக்கவிட்ட மாரிதாஸ்.!". Asianet News Network Pvt Ltd. Retrieved 2022-01-17.