உள்ளடக்கத்துக்குச் செல்

மாரா பிரதேசம்

ஆள்கூறுகள்: 1°46′31.44″S 34°9′11.52″E / 1.7754000°S 34.1532000°E / -1.7754000; 34.1532000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாரா பிரதேசம்
பிரதேசம்
மேலிருந்து கீழ்:
செரெங்கெட்டி தேசியப் பூங்கா, மாரா ஆற்றின் முதலைகள்மற்றும் முசோமா நகரத்தின் காட்சி
தான்சானியாவில் மாரா பிரதேசத்தின் அமைவிடம்
தான்சானியாவில் மாரா பிரதேசத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 1°46′31.44″S 34°9′11.52″E / 1.7754000°S 34.1532000°E / -1.7754000; 34.1532000
நாடு தன்சானியா
Zonelake
தலைநகரம்முசோமா
மாவட்டங்கள்
பட்டியல்
  • புண்டா மாவட்டம்
  • பூத்தியாமா மாவட்டம்
  • முசோமா மாவட்டம்
  • ரோரியா மாவட்டம்
  • செரெங்கெட்டி மாவட்டம்
  • தாரிமே மாவட்டம்
அரசு
 • மண்டல ஆணையாளர்மரு. ராபேல் செகெங்கி
பரப்பளவு
 • மொத்தம்21,760 km2 (8,400 sq mi)
மக்கள்தொகை
 (2022)
 • மொத்தம்23,72,015[1]
இனக்குழுக்கள்
 • மசாய் இனக்குழு மற்றும் பிறர்சுவாகிலி மொழி, லூவா மொழி, குர்யா மொழி & சுக்குமா மொழி
 • உள்ளூர் பழங்குடி மக்கள்சனகி மக்கள், குர்மி மக்கள், இகோமா மக்கள், கிசு மக்கள்,குவாயா மக்கள், ஜிதா மக்கள்,சுபா மக்கள்
நேர வலயம்ஒசநே+3 (கிழக்கு ஆப்பிரிக்க சீர் நேரம்)
அஞ்சல் குறியீடு
31xxx
இடக் குறியீடு028
ஐஎசுஓ 3166 குறியீடுTZ-13 [2]
மனித மேம்பாட்டுச் சுட்டெண் (2021)0.541[3]
low
இணையதளம்Official website
சின்னங்கள்
பறவை
தரைப்பருந்து
மீன்
ஹாப்லோக்ரோமிஸ் மீன்
மரம்
விசில் அடிக்கும் மரம்

மாரா பிரதேசம் (Mara Region), தான்சானியா நாட்டின் 31 நிர்வாகப் பிரதேசங்களில் ஒன்றாகும். மாரா பிரதேசத்தின் தலைநகரம் முசோமா ஆகும். மாரா பிரதேசம் 21,760 km2 (8,400 sq mi) பரப்பளவு கொண்டது.[4]தான்சானியா நாட்டின் வடக்கில் அமைந்த மாரா பிரதேசம், கென்யா நாட்டின் மசாய் மாரா தேசியப் பூங்காவின் தெற்கு எல்லையில் அமைந்துள்ளது.

சிறப்புகள்

[தொகு]

மாரா பிரதேசத்தில் உலகப் பாரம்பரியக் களமான புகழ்பெற்ற திறந்த வெளி செரெங்கெட்டி தேசியப் பூங்கா அமைந்துள்ளது. இதன் வடக்கே மசாய் மாரா தேசியப் பூங்கா உள்ளது. மாரா பிரதேசத்தில் மாரா ஆறு பாய்கிறது. மாரா பிரதேசததின் கிழக்கில் விக்டோரியா ஏரி அமைந்துள்ளது. இப்பிரதேசத்தில் பெரும்பான்மையாக மசாய் மக்கள் வாழ்கின்றனர். செரெங்கெட்டிதேசியப் பூங்காப் பகுதியில் பிறந்த ஜூலியஸ் நைரேரே தான்சானியா நாட்டின் முதல் அதிபர் ஆவார்.

தட்ப வெப்பம்

[தொகு]

மாரா பிரதேசத்தின் அதிகபட்ச வெப்பம் 29.32 °C மற்றும் குறைந்தபட்ச வெப்பம் 27.68 °C கொண்டுள்ளது. இப்பிரதேசம் இரண்டு மழைக்காலங்களும், இரண்டு வறட்சி காலங்களும் கொண்டது. பிப்ரவரி முதல் சூன் வரை நீண்ட மழைக்காலமும்; சூன் முதல் செப்டம்பர் வரை குறைந்தபட்ச மழைக்காலமும் கொண்டுள்ளது. இதன் ஆண்டு சராசரி மழைப்பொழிவு 1,250-2,000 மிமீ ஆகும்.

பொருளாதாரம்

[தொகு]
செரெங்கெட்டி தேசியப் பூங்கா

தங்கச் சுரங்கங்களை அகழ்தல், மீன் பிடித்தல், கால்நடை மேய்ச்சல், சுற்றுலா, தானியங்களை பயிர் இடுதல், கால்நடை வளர்ப்பு ஆகியவை மாரா பிரதேச மக்களின் முக்கியப் பொருளாதாரம் ஆகும்.[5]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

மாரா பிரதேசத்தில் மசாய் இனக்குழு, சுவாகிலி, லூவா, குர்யா, சுக்குமா,, குர்மி, இகோமா, கிசு,குவாயா, ஜிதா மற்றும் சுபா பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். தான்சானியா நாட்டின் 2016ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, மாரா பிரதேச மக்கள் தொகை 19,24,230 ஆகும்.[6]:{{{3}}}[7]:{{{3}}}

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]

மாவட்டங்கள்

[தொகு]

மாரா பிரதேசம் ஒரு நகராட்சி, இரண்டு பேரூராட்சிகள் மற்றும் 6 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[6]:{{{3}}}

மாராவின் மாவட்டங்கள்
Map மாவட்டம் மக்கள் தொகை
(2012)
முசோமா நகரம் 134,327
புண்டா நகரம் 134,327
தாரிமே நகரம் 134,327
புண்டா மாவட்டம் 335,061
பூத்தியாமா மாவட்டம் 241,732
முசோமா கிராமிய மாவட்டம் 178,356
ரோரியா மாவட்டம் 265,241
செரெங்கெட்டி மாவட்டம் 249,420
தாரிமே கிராமிய மாவடடம் 339,693
'மொத்தம் 1,924,230

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.nbs.go.tz/statistics/subtopic/initial-reports
  2. "IS0 3166". ISO. Retrieved 2022-10-09.
  3. "Sub-national HDI - Area Database - Global Data Lab". hdi.globaldatalab.org (in ஆங்கிலம்). Archived from the original on 23 September 2018. Retrieved 2020-02-26.
  4. "Mara Region Size".
  5. Mara Investment Guide 2020 (PDF) (Regional Guide) (in ஆங்கிலம்). Mara Region: United Nations, Mara Region. 2020. Archived (PDF) from the original on 11 June 2022. Retrieved 17 August 2022.
  6. 6.0 6.1 2016 Makadirio ya Idadi ya Watu katika Majimbo ya Uchaguzi kwa Mwaka 2016, Tanzania Bara [Population Estimates in Administrative Areas for the Year 2016, Mainland Tanzania] (PDF) (Report) (in ஸ்வாஹிலி). Dar es Salaam, Tanzania: National Bureau of Statistics. 2016-04-01. Archived (PDF) from the original on 2021-12-27. Retrieved 2022-07-03.
  7. 2012 Population and Housing Census - Population Distribution by Administrative Areas (PDF) (Report) (in ஆங்கிலம்). Dar es Salaam, Tanzania: National Bureau of Statistics. 2013-03-01. Archived (PDF) from the original on 2022-03-26. Retrieved 2022-07-03.

பிழை காட்டு: <ref> tag with name "Mara_Britannica" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Mara_Profile2003" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Ag_cenusus08" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Ndembwike_08" defined in <references> is not used in prior text.
பிழை காட்டு: <ref> tag with name "Serengeti_1" defined in <references> is not used in prior text.

பிழை காட்டு: <ref> tag with name "Mara_hist" defined in <references> is not used in prior text.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாரா_பிரதேசம்&oldid=4398459" இலிருந்து மீள்விக்கப்பட்டது