மாரங்கோ (குதிரை)
மாரங்கோ (Marengo (c. 1793–1831) என்பது நெப்போலியனின்.புகழ்பெற்றக் குதிரை ஆகும். புகழ்பெற்ற போரான மவுண்ட். மரேங்கோ போரின் வெற்றிக்குப் பின்னர், நெப்போலியன், தான் உபயோகித்த, தனக்குச் சிறப்பாக ஒத்துழைப்பு கொடுத்த குதிரைக்கு மாரங்கோ என்று பெயர் வைத்து கவுரவித்தார். இக்கிதிரை பலமுறை நெப்போலியனின் உயிரைக் காத்ததாக கூறப்படுகிறது. மார்கோங்கோ பிரான்சிற்கு 1799 ஆம் ஆண்டில் ஆறு வயதில் எகிப்தில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது ஒரு அரேபியக் குதிரை ஆகும், இந்த சாம்பல் நிறத்திலான கம்பீரமான குதிரை சிறியதாக இருந்தாலும் (57 அங்குலம், 145 செ.மீ) அது நம்பகமானதாகவும், துணிவானதாகவும் இருந்தது.
வாழ்கை
[தொகு]மாரங்கோ தனது வாழ்க்கையில் எட்டு தடவை காயமடைந்தது, மேலும் இது ஆஸ்திரியாவுடனான போர், ஜீனா ஆஸ்ட்ரி போர, வாக்ராம் போர், வாட்டர்லூ போர் போன்ற போர்களில் பேரரசரை சுமந்து சென்றது. இக்குதிரை அடிக்கடி வால்டோலிடிலிருந்து பர்ஸோஸ் வரை 80 மைல் தொலைவுக்கு நெப்போலியன் செல்ல அடிக்கடி பயன்படுத்தப்பட்டது, இத்தொலைவை பெரும்பாலும் ஐந்து மணிநேரங்களில் கடந்தார். நெப்போலியன் தன் உபயோகத்துக்கு 52 குதிரைகளை வைத்திருந்தார். பலமுறை நெப்போலியனின் உயிரைக் காப்பாற்றிய மாரங்கோ, உருசியாவின் கடும் குளிரிலும் தளராமல் 1812 இல் அவரைச் சுமந்து சென்ற இது மாஸ்கோவில் இருந்து பின்வாங்கிச் செல்லவும் பயன்படுத்திப்பட்டது. நெப்போலியன் வீழ்ந்த வாட்டர்லூ யுத்தத்திலும் மாரங்கோ பங்கேற்றது. நெப்போலியனின் தோல்விக்குப் பிறகு, மாரங்கோவை இங்கிலாந்தின் வில்லியம் பீட்டர் என்பவர் பிடித்துச் சென்றார்.
ஐக்கிய இராச்சியத்துக்குக் கொண்டு சென்ற வில்லியம் பீட்டர் இக்குதிரையை இன்னொரு தளபதிக்கு விற்றார். 38 வயதில் இறந்துபோன மாரங்கோவின் எலும்புக்கூடு, லண்டன் தேசிய ராணுவ அருங்காட்சியகத்தில் இன்றும் பாதுகாக்கப்பட்டுவருகிறது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ முகில் (28 பெப்ரவரி 2018). "பிரபலக் குதிரைகள்: வெற்றிகளை ஈட்டிய குதிரைகள்!". கட்டுரை. தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 28 பெப்ரவரி 2018.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- The Myth of Napoleon's Horse Jill, Duchess of Hamilton
- The skeleton of Marengo