மாய்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாய்கன் என்பவன் சங்ககாலப் பெருமகன். இவன் இருண்ட குகை ஒன்றில் வாழ்ந்துவந்தான். புலவர் பரணர் இவனைப் பற்றிய செய்தியைக் குறிப்பிட்டுள்ளார். [1] அவன் வாழ்ந்த இருள் குகை நெடும்பெருங் குன்றத்தில் இருந்தது. அந்தக் குன்றத்தில் மழைமேகங்கள் தவழும். தாழ்ந்த நீர்ப்பரப்புகள் அங்கு இருந்தன. அங்கே காற்று மிகுதியாக வீசும்.

இப்படிப்பட்ட இடத்திலிருந்த இருண்ட குகையில் வாழ்ந்த மாய்கன் மனநிலை போலத் தன் நெஞ்சு இருண்டுவிட்டதாகத் தலைவன் குறிப்பிடுகிறான்.

தலைவியை அடைய அவள் அடையாளம் சொன்ன அந்த இடத்துக்குத் தலைவன் சென்றான். காத்திருந்தான். தலைவி வரவில்லை. ஏமாற்றத்துடன் திரும்பினான். இப்போது இருந்த தலைவனின் மனநிலை மாய்கன் மனநிலை போல இருந்ததாம்.

அடிக்குறிப்பு[தொகு]

  1. தண் மழை தவழும் தாழ் நீர் நனந்தலைக்
    கடுங் காற்று எடுக்கும் நெடும் பெருங் குன்றத்து
    மாய இருள் அளை மாய்கன் போல,
    மாய்கதில் வாழிய, நெஞ்சே! (அகநானூறு 258)

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாய்கன்&oldid=1654467" இலிருந்து மீள்விக்கப்பட்டது