மாயா (ஓவியர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாயா
பிறப்புமகாதேவன்
அறியப்படுவதுஓவியங்கள்

மாயா என்பவர் தமிழக ஓவியர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் மகாதேவன் என்பதாகும்.[1]

இவரது முதல் ஓவியம் ஆனந்த விகடனில் 1955 ஆம் ஆண்டு ஜனவரி இதழில் "சாமிக்கண்ணு" என்ற சிறுகதைக்காக வெளியானது. [1]

இவர் 1959 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் "அவனும் அவளும்" என்ற சிறுகதைக்காக வரைந்த ஓவியத்தில் மாயா என கையெழுத்திட்டார். அதுவரை விகடனில் வேறு மகாதேவன் இருந்தமையால் கையெழுத்து இடாமல் ஓவியங்களை வரைந்து தந்துள்ளார்.[1]

தமிழ் பத்திரிகை உலகின் முதல் படக்கதையான "ஜமின்தார் மகன்" என்பதற்கு இவர் ஓவியம் வரைந்து தந்தார்.[1]

இவற்றையும் காண்க[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 [ஆனந்த விகடன் பொக்கிசம் 1959 - 17.02.2010 பக்கம்77]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயா_(ஓவியர்)&oldid=3172853" இலிருந்து மீள்விக்கப்பட்டது