மாயா ராவ்
மாயா ராவ் | |
---|---|
![]() | |
பிறப்பு | மல்லேசுவரம், பெங்களூர் | 2 மே 1928
இறப்பு | 1 செப்டம்பர் 2014 பெங்களூர் | (அகவை 86)
பணி | கதக் குரு, நடனக் கலைஞர், நடன இயக்குனர் நிறுவனர் கதக் நாட்டிய நடன நிறுவனம் (என்.ஐ.கே.சி, 1987) |
செயற்பாட்டுக் காலம் | 1945– 2014 |
மாயா ராவ் (Maya Rao) (பிறப்பு: 1928 மே 2 - இறப்பு: 2014 செப்டம்பர் 1 ) இவர் ஒரு கதக் நடனத்தில் ஓர் இந்திய பாரம்பரிய நடனக் கலைஞரும், நடன இயக்குனரும் மற்றும் கல்வியாளரும் ஆவார். கதக் நடனக் கலைகளில், குறிப்பாக நடனப் பாலேக்களில் தனது முன்னோடிப் பணிகளுக்காக அறியப்பட்ட இவர், வட இந்திய - நடன பாணியான கதக்கை தென்னிந்தியாவிற்குக் கொண்டுவந்த பெருமைக்குரியவராவார். [1] 1987 இல் பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரத்தில் இவர் கதக் நாட்டியம் மற்றும் நடனப் பள்ளியை நிறுவினார். [2] [3] இவரது நடன நிறுவனமான "நாட்டிய அண்ட் ஸ்டெம் டான்ஸ் காம்ப்னி", என்பது கதக் நாட்டியம் மற்றும் நடனப் பள்ளியின் கலவையாகும். பெங்களூரைத் தளமாகக் கொண்ட ஸ்டெம் டான்ஸ் காம்ப்னி (அவரது மகள் மது நடராஜால் நிறுவப்பட்டது) நிறுவன இயக்குநராகவும் இருந்தார். [4] [5] ஜெய்ப்பூர் கரானாவின் குரு சோகன்லாலின் கீழ் இவரது ஆரம்ப பயிற்சிக்குப் பிறகு, செய்ப்பூர் கரானாவின் குரு சுந்தர் பிரசாத், லக்னோ கரானாவின் குரு சம்பு மகாராஜ் ஆகியோரின் கீழ் தில்லியில் உள்ள தேசிய கதக் நடனக் கழகத்தில் பயிற்சிக்குச் சென்றனர்.
1989 ஆம் ஆண்டில் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாடமி சங்கீத நாடக அகாதமி விருதினை இவருக்கு வழங்கியது. 2011 ஆம் ஆண்டில், அகாதமி இவருக்கு சங்கீத நாடக அகாதமி தாகூர் ரத்னாவை வழங்கியது. இது ரவீந்திரநாத் தாகூரின் 150 வது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்தியா முழுவதிலும் இருந்து 100 கலைஞர்களுக்கு கலைத்துறையில் அவர்கள் செய்த பங்களிப்புக்காக வழங்கப்பட்டது. [6] [7]
ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]
மாயா பெங்களூரில் உள்ள மல்லேஸ்வரத்தில், ஹத்தங்கயின் சஞ்சீவ் ராவ், நகரத்தின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் மற்றும் சுபத்ரா பாய் ஆகியோரின் மரபுவழி கொங்கனி சரஸ்வத் பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சிறு வயதிலேயே இவர் இந்துஸ்தானி இசையைக் கற்றுக்கொண்டார். இராமராவிடமிருந்து குரல் மற்றும் தில்ருபாவைக் கற்றுக் கொண்டார். இவர் பெண்கள் நடனம் கற்காத ஒரு மரபுவழி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரும் இவரது பொறியாளரான தந்தையும் பெங்களூரில் உள்ள பி.ஆர்.வி டாக்கீஸ் ஆடிட்டோரியத்தில் நடனக் கலைஞர் உதய் சங்கரின் குழுவினரைப் பார்த்த பிறகு இது மாறியது. நடனத்தால் ஈர்க்கப்பட்ட இவரது தந்தை தனது மகள்கள் நடனம் கற்க விரும்பினார். [8] [9]
இவரது குரு பண்டிட் இராமராவ் நாயக், உஸ்தாத் பயாஸ் கானின் சீடராகவும், ஆக்ரா கரானாவின் பாடகராகவும் இருந்தார். [10] பெங்களூரில் உள்ள பென்சன் நகரத்தில் இசை மற்றும் நடனப் பள்ளியை நடத்தி வந்தார். அங்கு பல்வேறு நடன மற்றும் இசை நடைகள் கற்பிக்கப்பட்டன. இங்கே ஜெய்ப்பூர் கரானாவைச் சேர்ந்த சோஹன் லால் கதக் பிரிவின் பொறுப்பாளராக இருந்தார். [11] விரைவில், இவரது தங்கைகளான உமா மற்றும் சித்ரா முறையே ஆறு வயது மற்றும் நான்கு வயது, குரு சோஹன்லாலின் கீழ் இருந்து கதக் கற்கத் தொடங்கினர். இறுதியாக, இவரது தந்தை 1942 ஆம் ஆண்டில் இவரது கதக் பயிற்சியைத் தொடங்க அனுமதித்தா. ஒருபோதும் தொழில் ரீதியாகவோ அல்லது மேடையில் நடனமாட மாட்டேன் என்ற வாக்குறுதி அளித்த இவர், இவர் விரைவில் அதை முறித்துக் கொண்டார். அடுத்த இரண்டு வருடங்கள் இவர் பயிற்சி கற்றுக்கொண்டார். இருப்பினும், 1944 ஆம் ஆண்டில், சரஸ்வத் சமாஜ் சமூக திட்டத்திற்காக பெங்களூர் டவுன் ஹாலில் முதல் இவரது தந்தை அதை எதிர்க்கவில்லை. [8] [9]
தொழில்[தொகு]
கதக்கைத் தேடி 1951 இல் செய்ப்பூருக்குச் சென்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மகாராணி காயத்ரி தேவி பெண்கள் பொதுப் பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்கினார். பின்னர் இவர் இலங்கைக்குச் சென்று புகழ்பெற்ற நடனக் கலைஞரான சித்ரசேனருடன் கண்டியன் நடனத்தைப் பயின்றார். அதைத் தொடர்ந்து, 1955 ஆம் ஆண்டில் இவர் இந்தியாவின் மதிப்புமிக்க அரசு உதவித்தொகையைப் பெற்றார் மற்றும் புகழ்பெற்ற குருலக்னோ கரானாவின் ஷம்பு மகாராஜின் கீழ் புது தில்லியின் பாரதீயக் கேந்திராவில் பயிற்சி பெற்றார். இவர் கேந்திரத்தின் முதல் மாணவராகவும், பண்டிட் ஷம்பு மகாராஜின் முதல் சீடராகவும் இருந்தார். இவர் தனது வாழ்நாள் முழுவதும் நடனமாடிய ஒரே மாணவி அவர். 1960 ஆம் ஆண்டில், முதுகலை நடனத்திற்காக தனது சோவியத் கலாச்சார உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964 ஆம் ஆண்டில் உருசியாவிலிருந்து திரும்பியதும், அப்போது சங்கீத நாடக அகாதமியின் துணைத் தலைவரான கமலதேவி சட்டோபாத்யாயின் உதவியுடன், பாரதீய நாடிய சங்கத்தின் உதவியுடன் தில்லியில் நாட்டிய, நடனப் பள்ளி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். [8] [9] [12] [13]
இசை மற்றும் நடனம் தொடர்பான மாநில அகாடமியான கர்நாடக சங்க நிருத்யா அகாடமியின் தலைவரானார், மேலும் 1987 முதல் 1990 வரை இவர் பதவியில் இருந்தபோது, சோமநாதபுரம், பட்டடக்கல் மற்றும் ஹளேபீடு போன்ற மாநிலத்தின் பாரம்பரிய நினைவுச்சின்னங்களில் தேசிய நிகழ்ச்சி கலை விழாக்களைத் தொடங்கினார். [14] நடன உருவாக்கம் / நடன அமைப்பிற்கான சங்கீத நாடக அகாடமி விருது இவருக்கு 1989 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேசிய இசை, நடனம் மற்றும் நாடக அகாடமியின் சங்கீத நாடக அகாடமி வழங்கியது. [15] 1986 ஆம் ஆண்டில் கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் கௌரரவமான ராஜ்யோத்சவ விருதும், [16] மற்றும் கர்நாடக அரசால் 1999 ஆம் ஆண்டிற்கான சாந்தலா விருதும் இவருக்கு வழங்கப்பட்டது. [17] 2013 ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாடமியால் வழங்கப்பட்ட 'தாகூர் ரத்னா' விருதைப் பெற்றா., அதே ஆண்டில் இவர் காவிய பெண்கள் மாநாட்டில் நடனம் மற்றும் நடனக் கலைக்கான பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றார். [18] பல ஆண்டுகளாக, இவர் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். [19] குறிப்பாக, நிருபமா ராஜேந்திரன், சையத் சலாவுதீன் பாஷா, சத்ய நாராயண சர்கா, ஷம்பு ஹெக்டே, சிவானந்தா ஹெக்டே போன்றோர்.
அவரது மகள் மது நடராஜ் ஒரு புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரும் மற்றும் நடன இயக்குனரும் ஆவார், மேலும் கதக் நடனம் மற்றும் நாட்டியப் பள்ளியின் கிளையான "ஸ்டெம்" என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். மாயா தனது கடைசி நாட்கள் வரை தனது நிறுவனத்தில் ஆலோசகர் நடன இயக்குனராக தொடர்ந்தார். மாயா ராவின் சுயசரிதை, மாயா ராவ் - எ லைஃப் டைம் இன் கோரியோகிராபி 2013 ஆம் ஆண்டில் இவரால் நிறைவு செய்யப்பட்டு, நாடக ஆசிரியரும், நாடக ஆசிரியரும், ஞானபீட விருது பெற்றவருமான சிறீ கிரீஷ் கர்னாட் அவர்களால் 2014 சூலையில் வெளியிடப்பட்டது. [20]
பெங்களூரில் உள்ள எம்.எஸ்.ராமையா நினைவு மருத்துவமனையில், 2014 செப்டம்பர் 1, அன்று இரவு 11.30 மணியளவில் மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டா இவர் நள்ளிரவுக்குப் பிறகு இருதயக் கோளாறால் இறந்தார். இவரது சகோதரிகள் சித்ரா வேணுகோபால் மற்றும் உமா ராவ், மற்றும் மகள் மது நடராஜ், கதக் மற்றும் சமகால நடனக் கலைஞராவர். [14] [16]
குறிப்புகள்[தொகு]
- ↑ Govind, Ranjani. "Renowned Kathak dancer Maya Rao dead". http://www.thehindu.com/news/cities/bangalore/renowned-kathak-dancer-maya-rao-dead/article6370522.ece?homepage=true.
- ↑ Shoba Narayan (26 July 2014). "How Kathak breached the north-south divide". Mint. http://www.livemint.com/Leisure/hPoqKRykCDhyxQHaXCT19N/How-Kathak-breached-the-northsouth-divide.html.
- ↑ Nataraj, Madhu (27 January 2012). "Taking it a step higher, again". The Hindu. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/taking-it-a-step-higher-again/article2835397.ece.
- ↑ "About Kampni". stemdancekampni.in இம் மூலத்தில் இருந்து 1 ஜூலை 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140701095933/http://www.stemdancekampni.in/Kampni.html.
- ↑ "Where contemporary keeps step with classical". The Hindu. 28 June 2013. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/where-contemporary-keeps-step-with-classical/article4858879.ece.
- ↑ "Sangeet Natak Akademi Ratna and Akademi Puraskar". Sangeet Natak Akademi. 2011 இம் மூலத்தில் இருந்து 7 July 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140707094419/http://sangeetnatak.gov.in/sna/tagoreawards.htm. "".. a one-time honour of Tagore Samman to be awarded to 100 persons of the age of 75 years and above who have made significant contribution in the field of performing arts.""
- ↑ "List of recipients of Tagore Akademi Puraskar". Press Information Bureau, Government of India. http://pib.nic.in/archieve/others/2012/apr/d2012042301.pdf.
- ↑ 8.0 8.1 8.2 "Profiles: Kathak Guru Dr. Maya Rao turns 86 today!". narthaki. http://www.narthaki.com/info/profiles/profl161.html.
- ↑ 9.0 9.1 9.2 GS Kumar (25 August 2014). "Maya Rao took forbidden dance to a new level". The Times of India. http://timesofindia.indiatimes.com/entertainment/kannada/music/Maya-Rao-took-forbidden-dance-to-a-new-level/articleshow/40863459.cms.
- ↑ S R Ramakrishna. "Namaskara to the Agra master". http://www.themusicmagazine.com/ramaraonaik.html.
- ↑ "Maya Rao's Whirlwind World". 2 September 2014. http://www.newindianexpress.com/cities/bangalore/Maya-Rao%E2%80%99s-Whirlwind-World/2014/09/02/article2409427.ece.
- ↑ Kathak, Indian Classical Dance Art. Abhinav Publications. https://books.google.com/books?id=ZAbMS6ynGJ8C&pg=PA192.
- ↑ The Oxford Handbook of Music Revival. Oxford University Press. https://books.google.com/books?id=N8GiAwAAQBAJ&pg=PA217.
- ↑ 14.0 14.1 "Kathak danseuse Maya Rao no more". 1 September 2014. http://www.deccanherald.com/content/428769/kathak-danseuse-maya-rao-no.html.
- ↑ "SNA: List of Akademi Awardees". Sangeet Natak Akademi Official website இம் மூலத்தில் இருந்து 30 May 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150530204253/http://sangeetnatak.gov.in/sna/awardeeslist.htm.
- ↑ 16.0 16.1 "Maya Rao Brought Kathak to City". 2 September 2014. http://www.newindianexpress.com/cities/bangalore/Maya-Rao-Brought-Kathak-to-City/2014/09/02/article2410544.ece.
- ↑ "State's honour of Allahrakha: Maya Rao bags Shantala Award". 5 January 2000 இம் மூலத்தில் இருந்து 2 செப்டம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20140902060830/http://www.thehindu.com/2000/01/05/stories/0405210c.htm.
- ↑ Sai, Veejay (2 January 2013). "The dance continues...". The Hindu. http://www.thehindu.com/news/cities/chennai/chen-arts/chen-dance/the-dance-continues/article4262920.ece.
- ↑ Shoba Narayan (26 July 2014). "How Kathak breached the north-south divide". Mint. http://www.livemint.com/Leisure/hPoqKRykCDhyxQHaXCT19N/How-Kathak-breached-the-northsouth-divide.html.
- ↑ "Ananth Nag and Girish Karnad attend a book launch at ITC Windsor, Bangalore". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 20 July 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/events/bangalore/Ananth-Nag-and-Girish-Karnad-attend-a-book-launch-at-ITCWindsor-Bangalore/articleshow/38670970.cms.
வெளி இணைப்புகள்[தொகு]
- Natya Institute of Kathak and Choreography, website
- Personal Obituary by Culture Critic Veejay Sai in www.narthaki.com, http://www.narthaki.com/info/profiles/profl170.html