மாயா ராய்
மாயா ராய் | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை | |
பதவியில் 1972–1977 | |
முன்னவர் | சித்தார்த்த சங்கர் ராய் |
பின்வந்தவர் | முகமது அயாத்து அலி |
தொகுதி | இராய்கஞ்ச் மக்களவைத் தொகுதி, (மேற்கு வங்காளம்) |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | பெப்ரவரி 9, 1927 திப்ருகார், அசாம், பிரித்தானிய இந்தியா[1] |
இறப்பு | 11 மார்ச்சு 2013 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 86)
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழ்க்கை துணைவர்(கள்) | சித்தார்த்த சங்கர் ராய் |
இருப்பிடம் | கொல்கத்தா |
மாயா ராய் (Maya Ray) ஓர் வழக்கறிஞரும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதியுமாவார். 1972இல் மேற்கு வங்கத்தின் இராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு நடந்த இடைத்தேர்தலில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தொழில்[தொகு]
இராய்கஞ்ச் மக்களவைத் தொகுதியின் உறுப்பினரான இவரது கணவர் சித்தார்த்த சங்கர் ராய் 1972இல் மேற்கு வங்கத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு அந்த இடத்துக்கு நடந்த இடைத்தேர்தலில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2]
ஐக்கிய அமெரிக்க சார்பாளர்கள் அவைஉறுப்பினர் மறைந்த தாமஸ் ஜே. மான்டன் என்பவரால் ஒரு வழக்கறிஞராக இவர் ஒருமுறை "புகழ்பெற்ற வழக்கறிஞர் மற்றும் முன்னாள் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரி" என்று குறிப்பிடப்பட்டார்,
இறப்பு[தொகு]
இவர் தனது கணவர் இறந்து இரண்டரை வருடங்களுக்குப் பிறகு, 11 மார்ச் 2013 அன்று சிறுநீரக செயலிழப்பால் இறந்தார்.[3]
சான்றுகள்[தொகு]
- ↑ The States. India News and Feature Alliance.. 1971. பக். 21. https://books.google.com/books?id=JN8iAQAAMAAJ. பார்த்த நாள்: 19 January 2019.
- ↑ "Raiganj Lok Sabha Elections". Elections.in. http://www.elections.in/west-bengal/parliamentary-constituencies/raiganj.html.
- ↑ "Nation Briefs". The Telegraph. 12 March 2013. http://www.telegraphindia.com/1130312/jsp/nation/story_16662098.jsp#.UUHgTVd0dCw. பார்த்த நாள்: 3 September 2020.